க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஒரு முதியவரும் ஒரு சிறிய பையனும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கதையின் நடுவே அந்த பையன் சொன்னான், 'என்னால உங்கட வயச 100 வீதம் சரியா சொல்லேலும்' என்றான். 'அதெப்பிடி?' ஆர்வமாக கேட்டார் முதியவர். 'கொஞ்ச நேரம் நீங்க முட்டி போட்டு நிண்டா என்னால உங்கட வயச சரியா கணிச்சு சொல்லேலும்' விளக்கம் சொன்னான் அப்பையன். என்ன அதிசயம் என்று அறிய விரும்பிய முதியவர் அவன் சொன்ன படியே முட்டி போட்டு இருந்தார். சிறிது நேரத்தில் முதியவர் முட்டி போட்டு இருந்ததை இரசித்து விட்டு சொன்னான், 'உங்களுக்கு 84 வயசு'. 'எப்பிடியப்பா இவளவு சரியாச் சொல்லுறாய்' ஆர்வமாக கேட்டார் முதியவர். அலட்சியமாகச் சொன்னான் பையன், 'நேற்று நீங்க தான் சொன்னீங்க' என்று.
(கதை முடிஞ்சு... சிரிக்கிறவங்க சிரிக்கலாம்...)

சிறுவர்களுக்கான ஆரம்பப் பள்ளியில் இடைவேளை நேரத்தில் மாணவர்கள் சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்தப் பாடசாலையில் மாணவர்களுக்கு உணவுகள் இலவசமாக வழங்கப்படும்.
முதலில் அப்பிள் பழங்கள் உள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் 'ஒன்று மட்டுமே எடுங்கள். இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார்' என்று ஒரு அறிவிப்புப் பலகை இடப்பட்ருந்தது. அடுத்த பகுதியில் சொக்ளேற்றுகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பையன் எழுதினான், 'எத்தனை வேண்டுமானாலும் எடுங்கள். இறைவன் அப்பிள்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்'.

'ஐசாக் நியூட்டன் மரத்துக்கு கீழ இருக்கும் போது கீழே விழுந்த அப்பிள்களை பார்த்து புவியீர்ப்பு விசையை கண்டு பிடித்தார். இதிலயிருந்து என்ன தெரியிது?' மாணவர்களை நோக்கிக் கேட்டார் பெளதிக ஆசிரியர்.
ஒரு மாணவன் அமைதியாக எழுந்து சொன்னான், 'எங்களப் போல புத்தகங்களோட வகுப்பில இருந்தா எதையும் உருப்படியா செய்யேலாது எண்டு விளங்குது சேர்'.

அதிசய கிளி ஒன்று ஏலத்தில் விடப்படுவதாக வந்த விளம்பரத்தைக் பார்த்து அந்தக் கிளியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒருவர் ஏலத்திற்கு சென்றார். யாரையும் பார்க்காமல் ஏலத்தை கேட்டார். அவர் கேட்கக் கேட்க யாரோ அவரை விட அதிகமாகக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இவரும் விடுவதாக இல்லை. கடைசியாக மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தார்.
ஏலம் எடுக்கும் போது கிளியின் உரிமையாளரிடம் கேட்டார், 'கிளி கதைக்குமா?'
உரிமையாளர் சொன்னார், 'கதைக்க மட்டுமென்னங்க, 10 இலட்சம் வரை நம்பர் சொல்லத் தெரியும்'
'ஏன் 10 இலட்சத்துக்கு மேல சொல்லிக் குடுக்கேல?' விசாரித்தார் வாங்கியவர்.
கிளி உரிமையாளர் சொன்னார், 'இதுக்கு மேல சொல்லிக்குடுத்தா நீங்க ஏலம் கேக்க கேக்க கிளி தொடர்ந்து கூடக் கேட்டுக் கொண்டு இருந்தா நான் எப்பிடிங்க ஏலத்த முடிக்கிறது?'
(சிரிப்பு வராட்டி திரும்ப வாசியுங்கோ... அதுக்குப் பிறகும் விளங்காட்டி கண்ண மூடிற்று கொஞ்சம் யோசியுங்கோ... உங்கட முட்டாள் தனத்த நினைக்க தானா சிரிப்பு வரும்...)

பிரசவ வைத்தியசாலை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
சத்திரசிகிச்சைக் கூடத்திலிருந்து இரண்டு குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்து அதன் தந்தையாரிடம் கொடுத்து விட்டு 'உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள்' என்றார் தாதி. அவர் வியந்தவராக, 'அதெப்பிடி சரியா... நான் வேல செய்யிறது "டபிள்மின்ற்" சுவிங் கம் நிறுவனத்தில... எனக்கு இரட்டைக் குழந்தைகளா...' என்றார்.
சிறிது நேரத்தில் 3 குழந்தைகளைக் கொண்டு வந்து ஒருவரிடம் கொடுத்து விட்டு 'உங்களுக்கு முன்று குழந்தைகள் என்றார் தாதி. அவர் வியந்தவராக, 'அதெப்பிடி எனக்கும்... நான் வேல செய்யிறது 3 மொபைல் கொம்பனி பிரைவற் லிமிற்றட் இல... எனக்கு 3 குழந்தைகளா...' என்றார்.
உடனே அருகிலிருந்தவர் மெதுவாக எழும்பி நழுவினார். தாதி அவரை மறித்து 'எங்க போறீங்க? இங்க தான் நீங்க இருக்கோணும்' என்றார்.
அந்த நபர் சொன்னார், 'அவங்களாவது பரவாயில்ல டபிள்மின்ற் கொம்பனி, 3 மொபைல் கொம்பனில... நான் வேல செய்யிறது செவிண்-அப் ல... என்னால தாங்கோலாது...'.

இரண்டு பேர் வங்கியொன்றில் சந்தித்துக் கொண்டார்கள். அவர்களிருவரும் கதைக்க முற்படும் போது வங்கியில் கொள்ளையர்கள் புகுந்து வங்கியிலுள்ள அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்த அனைவரிடமும் அவர்களிடமும் உள்ள எல்லாப் பணத்தையும் தருமாறு உத்தரவிட்டனர். அந்த இருவரில் ஒருவர் மற்றவரின் கைகளுக்குள் எதையோ திணித்தார். அவர் என்னவென்று பார்க்காமல் 'இதுக்குள்ள என்னத்த தாறீர்?' என்றார். மற்றவர் சொன்னார், 'நான் உம்மளிற்ற வாங்கின 10,000 ரூபா கடன திருப்பித் தரேல எண்டு பத்து மாசமா கேட்டுக் கொண்டு இருந்தீர் தானே... அது தான் கடன திருப்பி தந்தன்.'

ஒருவர் வங்கியொன்றுக்கு வந்து முகாமையாளரை சந்தித்து தனக்கு அவசரமாக 10,000 ரூபா தேவைப்படுவதால் கடன் தர முடியுமா னக் கேட்டார். முகாமையாளர் சொன்னார், 'தரலாம், ஆனா ஏதாவது பாதுகாப்பு உத்தரவாதம் தேவைப்படுமே..'. உடனே அந்த நபர் சொன்னார், 'இந்தாருங்கள் எனது காரின் திறப்பும் ஆவணங்களும், எனக்கு கடனை உடனடியாக தாருங்கள்.'. உடனே கடன் வழங்கப்பட்டது. 2 வாரங்களின் பின்னர் 20 வீத வட்டியான 2000 ரூபாவையும் சேர்த்து கொண்டு வந்து கொடுத்தார்.
முகாமையாளர் ஆச்சரியமாகக் கேட்டார், 'நீங்கள் போனாப் பிறகு தான் தெரிய வந்தது நீங்க பெரிய கோடீஸ்வரர் எண்டு. எதுக்குங்க 10,000 ரூபா கடன் வாங்கினீங்க இங்க' என்று.
அதற்கு அந்த நபர் சொன்னார், 'தலநகருக்கு ஒரு அலுவலா வந்தன். கார் பார்க்ல எல்லாம் கூட காசு கேட்டாங்கள். ஆனா நீங்க மட்டும் தான் 2000 ரூபாவுக்கு 2 கிழமயா கடும் பாதுகாப்போட வச்சிருந்தீங்க. இப்ப வேல முடிஞ்சிற்று, அது தான் கார் அ எடுத்திற்றுப் போக வந்தன்' என்றார்.

மதுபானசாலைக்குள் வந்த ஒருவன் பெருத்த சத்தத்தில் கேட்டான், 'இங்க யாரடா பலசாலி? யாராவது இருக்கிறீங்களா?'
ஒரு தடியன் எழும்பினான், 'என்னடா... நான் இருக்கிறன்...'
மற்றவன் அடக்கமாகக் கேட்டான், 'சேர்... தயவுசெய்து என்ர கார் அ பெற்றோல் செற் வர தள்ளிற்று வர முடியுமா? தயவுசெய்து...'

கிளி வற்பனை நிலையத்துக்கு கிளி வாங்க ஒருவர் வந்தார்,
முதலாவது கிளியை விலை கேட்க அதை 100,000 ரூபா என்றார் கடைக்காரர்.
வாங்க வந்தவர் ஆச்சரியத்தோடு, 'ஏன் இவளவு அதிகமா விலை?'
கடைக்காரர் சொன்னார், 'இந்தக் கிளிக்கு கணணியைப் பாவிக்கத் தெரியும். அதால தான்'
இரண்டாவது கிளியை கேட்க 5 இலட்சம் என்றார் கடைக்காரர்.
'இது ஏன் இவளவு விலை' என்றார் அவர்.
'இது ஆனானப்பட்ட வின்டோஸ் விஸ்ராவையே பாவிக்கும்' என்றார் கடைக்காரர்.
மூன்றாவது கிளியை விலை கேட்டார் வந்தவர். 'அது 10 இலட்சம்' என்றார் கடைக்காரர்.
'அது ஏன் அவளவு? அந்தக் கிளிக்கு என்ன தெரியும்?' கேட்டார் வந்தவர்.
கடைக்காரர் சொன்னார், 'எனக்கும் தெரியாது. ஆனா முதல்காட்டின 2 கிளியும் இந்தக் கிளிய முதலாளி எண்டு தான் கூப்பிடும். அதுக்குத் தான் இந்த விலை' என்றார்.
(சிரிப்பு வரேல தானே...? எனக்கே வரேல, உங்களுக்கு எப்பிடி வரும்...)

ஒரு இளைஞன் இரு கன்னங்களிலும் காதிலும் எரிகாயங்களுடன் வைத்தியரிடம் சென்றான்.
'என்ன நடந்தது' என்று வைத்தியர் கேட்டதற்கு 'அயன் பண்ணிற்று இருந்தன் டொக்ரர். திடீரெண்டு என்ர செல் போனுக்கு அழைப்பு வந்தது. செல்போன காதில வைக்கிறனெண்டு அயன் பொக்ஸ்ஸ கன்னத்தில வைச்சிற்றன் டொக்ரர்' என்றான் அவன்.
'அது சரி. மற்றப் பக்கம் என்ன நடந்தது?' வைத்தியர் கேட்டார்.
'காயம் பட்டோன்ன டொக்ரருக்கு மற்றப் பக்க காதில வச்சு கோல் பண்ணினன். அது தான்.' என்றான் அவன்.

ஒரு தவளை, தவளை இன சோதிடரிடம் சென்று தனது எதிர்காலத்தைப் பற்றி கேட்டது.
சோதிட தவளை சொன்னது, 'இன்றைக்கு ஒரு அழகான தேவதை போன்ற மனிதப் பெண் உன்னிடம் வருவாள், உன்னைப் பற்றி எல்லாவற்றையும் அறிய விரும்புவாள்.'
உடனே தவளைக்கு ஒரே குதூகலம்... தவளை கேட்டது, 'அது சரி அவள் என்னை எங்கே சந்திப்பாள்? உணவு விடுதியிலா, அல்லது நடனமாடும் இடத்திலா?'
சோதிட தவளை அமைதியாய் சொன்னது, 'இல்ல இல்ல... உயிரியல் ஆய்வுகூடத்தில தான் உன்னை சந்திப்பாள்'.

என்னைப் போன்ற அறிவுசாலியான மாணவன் எழும்பி ஆசிரியையிடம் கேட்டான், 'ரீச்சர், செய்யாத ஒண்டுக்காக எனக்கு அடிப்பீங்களா நீங்க?'
ஆசிரியையும் 'இல்லையே... செய்யாத ஒண்டுக்காக நான் ஏன் அடிக்கப் போறன்?' என்றார்.
உடனே புத்திசாலி மாணவன் சொன்னான், 'ரீச்சர்... நான் இண்டைக்கு வீட்டு வேல செய்யேல...'

1 பின்னூட்டங்கள்:

மினக்கெட்டு தட்டச்சு செய்திருக்கிறீர்கள்.
சில நன்று. பல ஏற்கனவே உலாத்தியவை. கிரிக்கெட் ரொம்பப் பிடிக்குமோ? தம்பியும் உங்களுடன் விளையாடி இருப்பான்? இதில எழுத எல்லாம் கணினி அறிவு தேவையில்லை. என்னை மாதிரி.