க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நிறைய காலமாக தமிழ் தளங்களை கைத்தொலைபேசியில் பார்ப்பது எப்படி என்று குழம்பிக் கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு முதல் தான் அதற்கான தீர்வைக் கண்டு பிடித்தேன்.

தமிழ் தளங்களை பார்ப்பதற்கு முதலில் உங்கள் கைத்தொலைபேசியில் ஒபரா மினி மேய்வான் (Browser) தேவை.

ஒபரா மினியை தரவிறக்கி செலுத்திய பின் அதன் முகவரிப் பட்டையில் (address bar) பின்வருமாறு தட்டச்சுச் செய்யவும். 'opera:config' (மேற்கோள் குறி இல்லாமல்)

பின்னர் வரும் தெரிவுகளில் கடைசியாக வரும் 'use bitmap fonts for complex scripts' எனும் தெரிவில் 'No' என்று இருப்பதை 'Yes' என மாற்றிவிட்டு சேமித்துக் கொள்ளவும்.
பின்னர் உங்கள் கைத்தொலைபேசியலும் தமிழ் வாசனை கமகமக்கும்..

ஓர் சத்தியமான உண்மை: இது எனது தேடலில் கிடைத்ததல்ல. இலங்கையில் வெளியாகும் தினமுரசு எனும் வார வெளியீட்டில் வெளியாகிய தகவல்.

*****************************

பரீட்சை நெருங்கி வருவதால் பழைய பாடப் பயிற்சிப் புத்தகங்களை எல்லாம் தூசு தட்டி எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறேன். 'ஒண்ணுமே புரியல' 'எல்லாமே புதுசு மாதிரி இருக்கு' போன்ற தமிழ்த் திரைப்பட வசனங்களைத் தான் சொல்ல முடிகிறது.
எனினும் ஒரு பயிற்சிப் புத்தகத்தின் நடுவே ஆங்காங்கே சில நல்ல கருத்துக்களை எழுதி வைத்திருந்தேன்.
அதை பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

இன்று சமூகம் உனைப் பார்த்து சிரிப்பதை நினைத்து கவலைப்படின் நாளைய உன் புன்னகை அடங்கிவிடும்.- நான் உளறியது.

10 ஆவது முறையாக விழுந்திருக்கிறாய் என்றால் 10 ஆவது முறையாக தோற்றிருக்கிறாய் என்று அர்த்தமல்ல. 9 முறை மீண்டும் எழுந்திருக்கிறாய் என்று தான் அர்த்தம். இது 10 ஆவது முறையாக நீ எழுவதற்கான சந்தர்ப்பம்.- வேறு யாரோ சொன்னதென்று நம்புகிறேன்.

பிரார்த்தனை செய்பவர்கள் எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்றால் சாமியார்களால் தான் முதலிடம் பெற முடியம்.
பிரார்த்தனை என்பது உப்பு போன்றது. வாழ்க்கை என்பது உணவு போன்றது. அளவாக இருக்க வேண்டும். கூடினால் ஆபத்து. இல்லாமல் பழகிக் கொண்டால் நல்லது.- நான் உளறியது.

தோல்வியில் சிரிக்கிறேன்.
வெற்றியில் அமைதி காக்கிறேன்.
முயற்சியின் போது ஆக்ரோஷம் காட்டுகிறேன். - நான் உளறியது.

எல்லா துன்பங்களிலும் ஓர் நகைச்சுவை பொதிந்திருக்கும்.
அதைக் கண்டுபிடித்து துன்பங்களை நினைத்து புன்னகைத்துக் கொள். - வேறு யாரோ சொன்னது.
**********

பரீட்சை நெருங்கி வருவதால் வலைப்பூவிலிருந்து சிறிது காலத்திற்கு ஓய்வு பெறப் போகிறேன்.
ஆதலால் மக்கள்ஸ் யாவரும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள். மொக்கைப் பதிவர் கனககோபியின் இம்சைகளிலிந்து விடுதலை...