ஒரு மனிதன் தன் மனைவியைக் காணவில்லை என்பதை முறையிட காவல்துறை அலுவலகத்திற்கு சென்றான்.
நபர்: எனது மனைவியைக் காணவில்லை.
காவல்துறை அதிகாரி: அவளின் பெயர் என்ன?
நபர்: ஏதோ ஒரு பூவின் பெயர் சேர்.
கா.அ: என்ன உயரம் இருப்பா?
நபர்: ஒருக்காலும் கவனிச்சதில்லை.
கா.அ: ஒல்லியா? குண்டா?
நபர்: ஒல்லி இல்லை. குண்டா இருக்கலாம்.
கா.அ: கண்களின் நிறம்?
நபர்: கவனிச்சதில்லை.
கா.அ: கூந்தலின் நிறம்?
நபர்: காலங்களுக்கேற்றவாறு மாறும்.
கா.அ: காணாமல் போகும் போது என்ன அணிந்திருந்தா?
நபர்: சேலை அல்லது சல்வார். வடிவா ஞாபகம் இல்ல.
கா.அ: காணாமல் போகும் போது யாராவது கூட இருந்தாங்களா?
நபர்: ஓம். என்ர செல்ல நாய். பெயர் றோமியோ. பொன்னிற சங்கிலியால கட்டப்பட்டிருக்கும். 30 அங்குல உயரம், அளவான உடலமைப்பு, நீல நிற கண்கள், கறுப்பு சேர்ந்த மண்ணிற உரோமம், றோமியோவின் இடது காலின் பெருவிரலின் நகம் சிறிது உடைந்துள்ளது, குரைப்பது குறைவு, ஓர் பொன்னிற கழுத்துப்பட்டி அணிந்திருந்தான், அவனுக்கு அசைவ உணவுகள் தான் பிடிக்கும், நானும் அவனும் ஒன்றாகத் தான் உணவு அருந்துவோம், ஒன்றாகத் தான் நடைப்பயிற்சிக்கு செல்வோம்... (இதைச் சொன்னவாறே அந்த நபர் அழத் தொடங்கினான்)
காவல்துறை அதிகாரி- நாங்கள் முதல்ல நாயைத் தேடுவம்.
****************************************************************
சிறிய நகைச்சுவைகள்...
ஆண்கள் பொதுவாக தங்களது மனைவியிடத்தில் 3 குண அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள்.
சமையலறையில் சிக்கனம் செய்பவளாகவும், ஓர் கலைஞனாக வீட்டிலும், படுக்கையறையில் பேயாகவும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் நடப்பதோ, சமையலறையில் கலைஞனாகவும், வீட்டில் பேயாகவும், படுக்கையறையில் சிக்கனம் செய்பவளாகவுமே கிடைக்கிறார்கள். (என்று சொல்கிறார்கள். அனுபவம் இல்லை. ஹி ஹி ஹி...)
ஆண்கள் பொதுவாக அழகான, புத்திசாலித்தனமான, நன்றாக சமைக்கக் கூடிய பெண்களை தங்கள் மனைவியாக எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உள்ள பிரச்சினை என்னவெனில் சட்டத்தின்படி ஓர் ஆண் ஓர் பெண்ணை மட்டும் தான் மணம் புரிய முடியும்.
பன்றிகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான முக்கியமான வித்தியாசம் என்ன?
பன்றிகள் குடித்த பின்னர் மனிதர்களாக மாறுவது இல்லை.
நல்ல வழக்கறிஞருக்கும், புத்திசாலி வழக்கறிஞருக்குமிடையிலான வித்தியாசம் என்ன?
நல்ல வழக்கறிஞருக்கு சட்டம் தெரியும், ஆனால் புத்திசாலி வழக்கறிஞருக்கு வழக்கின் தீர்ப்புத் தெரியும்.
நாய்கள் ஏன் மணம்முடிப்பதில்லை?
ஏனெனில் அவை ஏற்கனவே நாய்வாழ்க்கை வாழ்வதால்.
அம்மாவுக்கும், மனைவிக்குமிடையிலான ஒற்றுமை என்ன?
அம்மா எங்களை இந்த பூமிக்கு அழுதவாறு கொண்டுவருகிறாள். மனைவி நாங்கள் தொடர்ந்து அழுவதை உறுதி செய்கிறாள்.
ஓர் அழகு நிலையத்தில் காணப்பட்ட அறிவித்தல் பலகை:
'இங்கிருந்து வெளியே செல்லும் அழகான இளம் பெண்களைப் பார்த்து விசில் அடிக்க வேண்டாம். போவது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்.'
ஓர் சிகை அலங்கரிப்பு நிலையத்தில் காணப்பட்ட அறிவித்தல் பலகை:
'எங்கள் வியாபாரத்தை கொண்டோடுவதற்கு உங்கள் தலைகள் வேண்டும்'
'உங்கள் பிள்ளைகள் குறிப்பிட்ட வயதை அடையும் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள். அல்லாவிடில் அவர்கள் குறித்த வயதை அடையாமலேயே போய்விடுவார்கள்.'
***********************************************************************************************************
எந்நேரமும் மொக்கைப் பதிவுகள் போடுவதாக ஓர் உணர்வு...
நாளை ஏதாவது சிந்தனைப்பதிவுகள் (சீரியஸ் பதிவு என அழைப்பதைவிட சிந்தனைப்பதிவு என அழைப்தை விரும்புகிறேன்.) போட முயற்சிக்கிறேன்...
20 பின்னூட்டங்கள்:
//ஆண்கள் பொதுவாக அழகான, புத்திசாலித்தனமான, நன்றாக சமைக்கக் கூடிய பெண்களை தங்கள் மனைவியாக எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உள்ள பிரச்சினை என்னவெனில் சட்டத்தின்படி ஓர் ஆண் ஓர் பெண்ணை மட்டும் தான் மணம் புரிய முடியும்.//
இது மொக்கை அல்ல மிகப் பெரிய சிந்தனை.
//ஓர் அழகு நிலையத்தில் காணப்பட்ட அறிவித்தல் பலகை:
'இங்கிருந்து வெளியே செல்லும் அழகான இளம் பெண்களைப் பார்த்து விசில் அடிக்க வேண்டாம். போவது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்.//
இது சிந்தனை அல்ல வெளிப்படை உண்மை.
// (என்று சொல்கிறார்கள். அனுபவம் இல்லை. ஹி ஹி ஹி...)//
பாத்தா அப்படித் தெரியலயே
//எந்நேரமும் மொக்கைப் பதிவுகள் போடுவதாக ஓர் உணர்வு...
நாளை ஏதாவது சிந்தனைப்பதிவுகள் (சீரியஸ் பதிவு என அழைப்பதைவிட சிந்தனைப்பதிவு என அழைப்தை விரும்புகிறேன்.) போட முயற்சிக்கிறேன்//
அட, அதெல்லாத்தையும் கணக்கில எடுக்காதீங்க.
//வந்தியத்தேவன் கூறியது...
//ஆண்கள் பொதுவாக அழகான, புத்திசாலித்தனமான, நன்றாக சமைக்கக் கூடிய பெண்களை தங்கள் மனைவியாக எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உள்ள பிரச்சினை என்னவெனில் சட்டத்தின்படி ஓர் ஆண் ஓர் பெண்ணை மட்டும் தான் மணம் புரிய முடியும்.//
இது மொக்கை அல்ல மிகப் பெரிய சிந்தனை. //
சொந்த அனுபவமோ... ஹி ஹி ஹி...
////ஓர் அழகு நிலையத்தில் காணப்பட்ட அறிவித்தல் பலகை:
'இங்கிருந்து வெளியே செல்லும் அழகான இளம் பெண்களைப் பார்த்து விசில் அடிக்க வேண்டாம். போவது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்.//
இது சிந்தனை அல்ல வெளிப்படை உண்மை. //
பாட்டிக்கு விசில் அடிச்சிருக்கிறீங்க என வந்தியண்ணா...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
// Subankan கூறியது...
// (என்று சொல்கிறார்கள். அனுபவம் இல்லை. ஹி ஹி ஹி...)//
பாத்தா அப்படித் தெரியலயே //
ஆகா...
வெறும் 19 வயசு தான்பா... பச்ச மண்ணு... இந்தப் பிஞ்சுப் பிள்ளைற்ற கேக்கிற கேள்வியா இது?
//எந்நேரமும் மொக்கைப் பதிவுகள் போடுவதாக ஓர் உணர்வு...
நாளை ஏதாவது சிந்தனைப்பதிவுகள் (சீரியஸ் பதிவு என அழைப்பதைவிட சிந்தனைப்பதிவு என அழைப்தை விரும்புகிறேன்.) போட முயற்சிக்கிறேன்//
அட, அதெல்லாத்தையும் கணக்கில எடுக்காதீங்க. //
ஹா ஹா...
முந்தி எல்லாம் இந்த யோசனை வராது...
நட்சத்திர வாரத்தில நெடுகலும் மொக்கைய போட்டிற்று இருக்க சரியில்லாத மாதிரி இருந்தது...
பாப்பம்...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
//ஆண்கள் பொதுவாக அழகான, புத்திசாலித்தனமான, நன்றாக சமைக்கக் கூடிய பெண்களை தங்கள் மனைவியாக எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உள்ள பிரச்சினை என்னவெனில் சட்டத்தின்படி ஓர் ஆண் ஓர் பெண்ணை மட்டும் தான் மணம் புரிய முடியும்.//
உங்க அனுபவம்போல் இருக்கிறதே.
Super.
Unga anupavama?
ஆண்டவா கோபிக்கு நல்ல ஒரு மனைவியை கொடு. அப்பதான் அவ கோபியை அடிச்சி திருத்துவா..
ரசித்தேன்! சிரித்தேன்!!
//சந்ரு கூறியது...
//ஆண்கள் பொதுவாக அழகான, புத்திசாலித்தனமான, நன்றாக சமைக்கக் கூடிய பெண்களை தங்கள் மனைவியாக எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உள்ள பிரச்சினை என்னவெனில் சட்டத்தின்படி ஓர் ஆண் ஓர் பெண்ணை மட்டும் தான் மணம் புரிய முடியும்.//
உங்க அனுபவம்போல் இருக்கிறதே. //
ஆகா...
அது என்ர அனுபவம் இல்ல...
நான் அகில உலக விரல் சூப்பிகள் சங்கத்தின் ஆயுட்காலத் தலைவர்...
எனக்கு இப்பத் தான் 6 வயசு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
// Sithu கூறியது...
Super.
Unga anupavama? //
ஏன்? ஏன்... ஏன்....
ஏன் இந்தக் கொலைவெறி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
இவையெல்லாம் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வாசித்தது தான்.. சிலதை வானொலியில் ஜோக் கடித்தும் இருக்கிறேன்.. :)
ஆனாலும் உங்கள் எழுத்து நடை சிறப்பு..
ஒரு சின்ன ஐடியா.. சீக்கிரம் திருமணம் முடியுங்க.. ஹீ ஹீ
//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
ஆண்டவா கோபிக்கு நல்ல ஒரு மனைவியை கொடு. அப்பதான் அவ கோபியை அடிச்சி திருத்துவா.. //
ஏன் யோ வொய்ஸ்... ஏன்...
நல்லா தானா இருந்தீங்க என்னோட...?
ஏன் இப்பிடி தூக்குத்தண்டனை பற்றி எல்லாம் கதைக்கிறீங்க?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ வொய்ஸ்...
//கலையரசன் கூறியது...
ரசித்தேன்! சிரித்தேன்!! //
நீங்கள் சிரித்தது மகிழ்ச்சி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//LOSHAN கூறியது...
இவையெல்லாம் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வாசித்தது தான்.. சிலதை வானொலியில் ஜோக் கடித்தும் இருக்கிறேன்.. :)
ஆனாலும் உங்கள் எழுத்து நடை சிறப்பு..
ஒரு சின்ன ஐடியா.. சீக்கிரம் திருமணம் முடியுங்க.. ஹீ ஹீ //
நானும் அம்மாட்ட மெல்லமா கதைய விட்டுப் பாத்தன்... அம்மாக்கு விளக்கம் காணாது...
நீங்களாவது உதவி செய்யுங்களன்...
(ஹி ஹி ஹி... )
என்ன செய்யிறது...
நீங்க ஆங்கிலத்தில சிங்கம்...
நாங்களெல்லாம் கொஞ்சம் மந்தம்... அதால மொழிமாற்றம் செய்ய பிந்திற்றுது...
ஹி ஹி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...
நல்லா இருக்குங்க.:))
நல்லாயிருக்கு!
தாங்க முடியலை..... நாங்கள் சீரியசாய் எழுதீட்டு, உங்கடையைப் பார்த்துத் தான் சிரிக்க வேண்டி இருக்கு......
பிறக்கும் போதே "பிளேட்டை" விழுங்கின நீங்களா? இல்லை, நடுவில தானா? .......,,,, haa haa.....
கலக்குறாய் கனக்க கோப்பி.. ட்ரான்லேசன் செய்தாலும் டைமிங் கெடாமல் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது..
அது சரி... கெக்கே புக்கே என்றால் என்ன? கடைசி பதிவில் போட்டிருந்தாய்? யாரோ குடித்திருந்த சிங்களவன் இன்னொருத்தனை உப்படித்தான் திட்டிட்டு பொனான்.. அறிந்து கொள்ள ஆர்வமாயுள்ளது
//வானம்பாடிகள் கூறியது...
நல்லா இருக்குங்க.:)) //
நன்றிகள்...
// tharshayene கூறியது...
நல்லாயிருக்கு!
தாங்க முடியலை..... நாங்கள் சீரியசாய் எழுதீட்டு, உங்கடையைப் பார்த்துத் தான் சிரிக்க வேண்டி இருக்கு......
பிறக்கும் போதே "பிளேட்டை" விழுங்கின நீங்களா? இல்லை, நடுவில தானா? .......,,,, haa haa..... //
நீங்கள் சீரியசாய் எழுதி, நான் மொக்கை போட்டால் தானே சமநிலை இருக்கும்?
இருவரும் சீரியசாய் எழுதினால் இன்றைய எனது பதிவு போல் மாறிவிடும்.
பிறக்கம் போது அந்த நேர்ஸின்ர கைய பிடிச்சு இழுத்தனாம். அந்த நேர்ஸ் கோபத்தில வாய்க்குள்ள பிளேட்ட போட்டுட்டாவாம்...
என்ன செய்ய?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கம் நன்றி...
//புல்லட் கூறியது...
கலக்குறாய் கனக்க கோப்பி.. ட்ரான்லேசன் செய்தாலும் டைமிங் கெடாமல் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.. //
நிறையப் பேருக்கு இந்த சந்தேகமுள்ளது. நான் உள்குத்து வச்சுத் தான் கனககோபி எண்டு பேர் வச்சிருக்கிறனா எண்டு.
ஏனென்டை நான் பயங்கர மொத்தம் தானே? அதுதான் கனக்ககோபி எண்டத பிழையா எழுத்துக் கூட்டிறனா எண்டு...
ஆனா உள்குத்து ஏதும் இல்ல...
//அது சரி... கெக்கே புக்கே என்றால் என்ன? கடைசி பதிவில் போட்டிருந்தாய்? யாரோ குடித்திருந்த சிங்களவன் இன்னொருத்தனை உப்படித்தான் திட்டிட்டு பொனான்.. அறிந்து கொள்ள ஆர்வமாயுள்ளது //
இது தமிழ் ஐயா...
அவன் திட்டினது சிங்களத்தில்...
கந்த(ல்)சாமி படத்தில வடிவேலு சொன்னத தான் நான் சொன்னன்...
சிங்களத்தில அப்பிடி ஒரு சொல்லிருக்கா எண்டு தெரியா, ஏனென்டா எனக்கு சிங்களம் தெரியா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் புல்லட் அண்ணா...
கருத்துரையிடுக