க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நீங்கள் எப்போதெல்லாம் கவலையாகவே உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்ற காரணத்தை அறிந்து ஓர் கோட்பாட்டை, கருதுகோளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் வருகிறது. உண்மையான காரணத்தை அறியாமல் நீங்களே உங்கள் கவலைக்கான காரணத்தை புதிதாக உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களால் புதிதான காரணங்களை உருவாக்கும் போதெல்லாம், உங்கள் திருமண நிலைமை, உங்கள் எதிர்காலம், உட்பட எல்லாம் போகப் போக சரிவரும் என்ற பொய்மையான நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறீர்கள். ஆனால் உண்மையாகப் பார்த்தீர்களானால் நிச்சயமாக யதார்த்தத்தில் இது உண்மையன்று. உங்கள் மனநிலைமை சொல்லுகின்ற 'எல்லாம் சரிவரும், எப்போதென்றால்...' என்பது மேலும் முன்நிபந்தனைகளை விதிக்கிறது. இந்த முன்நிபந்தனைகளாவன மிகவிரைவில் தீர்க்கப்படவேண்டும், அப்போது தான் நீங்கள் விரும்பிய எல்லாமே சரிவரும்.
இதுவரையில் எண்ணிலடங்காத தடவைகள் நீங்கள் பெற்றுக் கொண்ட நன்மைகளை, இதுவரையில் நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சிகளை நினைத்துப் பாருங்கள். நினைத்துப் பார்த்து உங்கள் சூழ்நிலைகளை மாற்றுவது உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உணர்ந்தால் நீங்கள் ஏற்கனவே மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறீர்கள். நீங்கள் பட்டம் பெற விரும்பினீர்கள், பெற்றீர்கள். நீங்கள் நண்பனொருவனை வேண்டினீர்கள், கிடைத்தார். நீங்கள் ஓர் செல்லப்பிராணியை வேண்டி நின்றீர்கள், கிடைத்தது. நீங்கள் பணம் வேண்டினீர்கள், கிடைத்தது. அப்படியே செல்கிறது... பல்லாயிரம் தடவைகள் நீங்கள் உங்கள் வாழ்வில் வேண்டிவை யாவும் கிடைத்திருக்கின்றன. இருந்தும் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை.

அதற்குரிய தீர்வு என்னவென்றால்,இவ்வளவு காலமும் அனுபவித்த வலிகளுக்குரிய காரணம் உங்கள் சொந்த சிந்தனைகள் தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய பணிவு உங்களுக்கு ஏற்பட வேண்டும்.
கவலைப்படாதீர்கள்; அனேகமாக ஒவ்வொருமே இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற நல்ல செய்தி என்னவென்றால், இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை இதைவிட சிறந்த பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும். எவ்வளவு மோசமாக நீங்கள் மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள் என்பதற்கு சம்பந்தமில்லாமல் அல்லது எவ்வளவு காலமாக நீங்கள் மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள் என்பதற்கு சம்பந்தமில்லாமல், எந்தக் கணம் உங்கள் சிந்தனைகள் தான் உங்கள் மனவழுத்தத்திற்கு காரணம் என்பதை உணர்கிறீர்களோ அந்தக் கணத்தில் நீங்கள் சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்க தொடங்கிவிடுவீர்கள்...

(நேற்று சிறிது குழப்பத்திலிருந்த பொழுது Richard Carlson என்பார் எழுதிய Stop thinking and Start Living என்ற புத்தகத்தின் ஓர் பகுதி கிடைத்தது. அதிலிருப்பது உண்மை எனப்பட்டது. சரியான தகவல்கள் என என் மனம் சொல்லியது. எனவே நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற ரீதியில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மொழிமாற்றத்தில் ஏதாவது தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்னால் இயன்றவரை சரியாக மொழிமாற்றம் செய்ய முயற்சித்தேன்.)

*************************************************************


சிறிய சொற்களில் மகிழ்ச்சி...

நீங்கள் செயல்களைச் செய்யும் பொதே தூண்டுதலை பெறுகிறீர்கள், செயல்களைப் பற்றி சிந்திக்கும் போதல்ல.

அடுத்த முறை நீங்கள் குழப்பத்தில் இருக்கும் போது ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், நபர்கள் பெரும்பாலும் உங்களைக் கோபப் படுத்தவதில்லை, அவர்கள் பற்றிய சிந்தனைகளை அதைச் செய்கின்றன.

என்ன சிந்தனைகள் உங்களுக்கு வலியை ஏற்படுத்தினாலும், அவை சிந்தனைகள் மட்டுமே. சிந்தனைகளை மாற்ற உங்களால் முடியும்.

நாம் ஒருவரை மன்னிக்காவிட்டால் அவர் வருந்துவார் என்பதை எங்கே நாம் அறிந்து கொண்டோம்.?

பயத்தை வெல்வதற்குரிய ஒரே வழி, அதை எதிர்கொள்வது தான்.

நமக்கு நாமே நேர்மையாக இருந்து கடந்த காலங்களில் நமக்கு நடந்தவற்றை பட்டியலிட்டால், அவை நடைபெற, ஏற்பட நாம் எவ்வாறு உதவினோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மகிழ்ச்சிகரமாக வாழும் மக்கள் வாழ்க்கை நன்றாக இருக்கின்றதா அல்லது அப்படியில்லையா என்பதைப் பற்றி அதிகம் கவலைப்படமாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையை வாழ்வார்கள்.

உங்கள் மனதில் மகிழ்ச்சி வேண்டுமானால், நடைபெறும் சம்பவங்களை நல்லது கெட்டது என பட்டியல்படுத்துவதை நிறுத்துங்கள்.

நீங்கள் உங்களால் முடிந்த சிறந்ததை செய்ய வேண்டும். இது மற்றவர்களை கவர்வதற்காக அல்ல, உங்களால் முடிந்தளவு சிறப்பாக செயற்படும் போது தான் உங்களால் உங்கள் வேலையை மகிழ்ச்சிகரமாக செய்ய முடியும்.

வாழ்க்கை சுவையானதாக இருக்கும் போது, 'இது நிலைக்காது' என உங்கள் உள்மனம் சொல்லும் போது உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள், 'ஆம். நிலைக்காது. இதைவிட சுவையாக அமையும்.

(Andrew Matthews என்பவரால் எழுதப்பட்ட Happiness in a Nutshell என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டது)


***********************************************************************************

எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு எப்போதும் பதிலளிப்பவன் அல்லன் நான். என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது என விட்டுவிடுவேன்.
எனினும் கடந்த சில நாட்களாக என்னை தனிப்பட்ட ரீதியில் விமர்சித்து ஒரு சில சகோதரர்கள் செயற்படுவது வருந்தத்தக்கது.
என்னை விமர்சிக்கிறார்கள் என்பதை சொல்லி நான் பிரபலமானவன் என்று பொய்யை ஏற்படுத்தவில்லை.
ஆனால் என் கருத்தை ஏற்றுக் கொள்ளாத இருவர் என்னை விமர்சித்திருந்தார்கள்.
அவர்களுக்கு என் வேண்டுகோள், ஒருவரது கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் அந்தக் கருத்தை விமர்சியுங்கள், அந்த நபரை அல்ல.

Facebook இல் 'வேலையில்லாத பதிவர்கள் சிலர் பிரபலத்திற்காக பதிவிடுகிறார்கள்' என்று ஒரு நண்பர் தெரிவித்திருந்தார்.
பதிவொன்றில் இன்னொரு நண்பர் தொடர்ந்து என்னை விமர்சித்து வருகிறார்.

ஒருவர் Stat counter தனது தளத்தில் போட்டிருக்கிறார் என்றால் அவர் hits களை எதிர்பார்த்துத் தான் பதிவிடுகிறார் என கருத்தாகுமா?
என்னைப் பொறுத்தவரை எனது பதிவுகள் பலரையும் சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் பலரையும் குழப்பி அல்லது சர்ச்சைகளால் எனது கருத்துக்கள், பதிவுகள் சென்றடைய வேண்டும் என நான் எப்போதும் விரும்பியதில்லை.
சுருக்கமாக சொல்லப் போனால், hits கிடைப்பது எனக்கு மகிழ்ச்சி, ஆனால் hits இற்காக எழுதுபவனில்லை நான், எழுத விரும்புவதும் இல்லை.
hits இன் மூலம் எனது பதிவுகளை பார்ப்பவர்களை, எனது பதிவு எவ்வளவிற்கு சென்றடைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறேன்.
இதற்குப் பின்னால் என்னை தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க விரும்பினால் எனது மின்னஞ்சலான kanagagopi@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் விமர்சனங்களை அனுப்புங்கள். வாசித்து சிரித்து விட்டு இருக்கிறேன்.
என்னை விமர்சித்து, அதற்கு நான் பதிலளித்து சர்ச்சைகளை ஏற்படுத்தி அதன் மூலம் பிரபலமடைய எண்ணும் திட்டங்களை கைவிடுங்கள்.
இப்போதும் சொல்கிறேன், விமர்சித்து சர்ச்சைகளை ஏற்படுத்தும் அளவிற்கு நான் பிரபலமானவன் கிடையாது.

4 பின்னூட்டங்கள்:

////பல்லாயிரம் தடவைகள் நீங்கள் உங்கள் வாழ்வில் வேண்டிவை யாவும் கிடைத்திருக்கின்றன. இருந்தும் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை.////

கனககோபி,

சில தேடல்களில் தோற்றுப்போனாலே அதில் வெற்றிபெற மனம் மேலும் மேலும் துடிக்கும். அப்பொழுதுதானே வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்கும். நினைப்பது, வேண்டுவது எல்லாமே கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் சுவராஸ்யம் ஏது? அது நரகத்திற்கு சமமென்று நினைக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு இல்லை. அதனால், வாழ்க்கை அர்த்தத்துடன் செல்கிறது. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

நல்ல பதிவு.. வாழ தொடங்குவோம்.

//மருதமூரான். கூறியது...
////பல்லாயிரம் தடவைகள் நீங்கள் உங்கள் வாழ்வில் வேண்டிவை யாவும் கிடைத்திருக்கின்றன. இருந்தும் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை.////

கனககோபி,

சில தேடல்களில் தோற்றுப்போனாலே அதில் வெற்றிபெற மனம் மேலும் மேலும் துடிக்கும். அப்பொழுதுதானே வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்கும். நினைப்பது, வேண்டுவது எல்லாமே கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் சுவராஸ்யம் ஏது? அது நரகத்திற்கு சமமென்று நினைக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு இல்லை. அதனால், வாழ்க்கை அர்த்தத்துடன் செல்கிறது. நல்ல பதிவு வாழ்த்துக்கள். //

தோல்விகளினால் நிறையப் படிக்க முடியும் என்பது என் சிந்தனையும் கூட.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அண்ணா...

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
நல்ல பதிவு.. வாழ தொடங்குவோம் //

யாரோட? ;)