1. உங்கள் கடவுச்சொல்லை உங்களை அறியாமலேயே உங்கள் நுண்ணலை அடுப்பில் அழுத்தியிருப்பீர்கள்...
2. Cards விளையாட்டை உண்மையான Cards ஐக் கொண்டு விளையாடி பல வருடங்கள் ஆகியிருக்கும்...
3. 3 பேரைக் கொண்ட உங்கள் குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ள 15 தொலைபேசி இலக்கங்கள் இருக்கும்...
4. உங்களுக்கு மறுபுறத்தில் அலுவலகத்தில் வேலைசெய்யும் நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்புவீர்கள்...
5. உங்கள் முன்னாள் நண்பர்கள் பலருடன் தொடர்பில் இருக்காத காரணம், அவர்களிடம் ஓர் மின்னஞ்சல் கணக்கு இல்லை என்பதாலாகும்...
6. வீட்டு வாசலில் வண்டியுடன் வந்தபின்னர், வாசல் கதவைத் திறக்குமாறு கோர வீட்டிலுள்ளவர்களை உங்கள் அலைபேசியில் அழைப்பீர்கள்...
7. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் ஒவ்வொன்றின் அடிப்பகுதியிலும் அனேகமாக வலைத்தள முகவரி காண்பிக்கப்படும்...
8. வீட்டிலிருந்து செல்லும் போது உங்கள் அலைபேசியை விட்டுவிட்டு செல்லுதல் என்பது (உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் அறிந்தே இருக்காத இந்த அலைபேசிகளை) இப்போதெல்லாம் உங்களை குழப்பிவிடும்...
திரும்ப எடுப்பதற்காக பாதிவழியிலிருந்து வீட்டுக்குத் திரும்பி செல்வீர்கள்...
10. காலையில் நித்திரையிலிருந்து எழும்பி காலைத் தேநீரை அருந்த முன்னர் ஒருமுறை தொடரறாநிலைக்கு சென்று வலைத்தளங்களை ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவீர்கள்...
11. இப்போது உங்கள் தலையை ஆட்டி ஆட்டி மெல்லமாக புன்னகைப்பீர்கள்...
12. மேலே உள்ளதை வாசித்ததும் பெரிதாக சிரிப்பீர்கள்...
13. எல்லாவற்றையும் விட கொடுமையாக இந்தப் பதிவை யாருக்காவது முன்னகர்த்த விரும்புவீர்கள்...
14. மேலே இலக்கங்கள் இட்டதில் 9ம் இலக்கம் தவறவிடப்பட்டமையை கவனிக்காமலிருக்குமளவிற்கு நீங்கள் வேலைப்பழுவாக இருப்பீர்கள்...
15. அதை வாசித்த பின்னர் மேலே சென்று 9ம் இலக்கம் இல்லைதானா என்பதை உறுதிப்படுத்தியிருப்பீர்கள்...
இப்போது நீங்கள் சிரிக்கிறீர்கள்....
இப்போது அறிந்து கொண்டீர்களா நீங்கள் 2009ம் ஆண்டில் வசிக்கிறீர்கள் என்று....
(தமிழிஷ் வாக்களிப்புப் பட்டை இட்டிருக்கிறேன்... யாழ்தேவி வாக்களிப்புப் பட்டை முன்பு முதலே இருக்கிறது... பிடித்திருந்தால் வாக்களியுங்கள்...
அப்படியே 'பின்தொடர்பவர்கள் விட்ஜெற்றை' கஷ்ரப்பட்டு html குறிகள் தேடி எடுத்து இட்டிருக்கிறேன்... எனக்கு பின்தொடர்பவர்கள் விட்ஜெற் வழங்கப்பட்டிருக்கவில்லை...
எனவே பின்தொடர விரும்பினால் பின்தொடருங்கள்...)
22 பின்னூட்டங்கள்:
கலக்கல்.. வாய் விட்டு சிரித்தேன்.. உங்கள் மொழிபெயர்ப்பு ஆற்றல்,தமிழ் சொல்லாக்கம்,கையாளுகைக்கும் பாராட்டுக்கள்..
பின் தொடருகிறேன்.. (அதுக்காக பின்னால திரும்பிப் பார்க்காதீங்க)
சரipயாச் சொன்னீங்க நான் 9ம் நம்பரை கணக்கெடுக்கவில்லை. ரொம்ப நல்லா இருக்கு.......
இன்னும் 2 வருடத்தில் சாப்பிடுறதை தவிர மிச்ச எல்லாத்தையும் மறந்திருவம் பாருங்களேன்...
சிரித்தேன் எப்படி ஐயா இப்படி முடிகிறது, நல்லவர் பட்டாளம் என தலையங்கம் போட்டிருப்பதால் உங்களைப் பிந்தொடர்கின்றேன்.
சூப்பரா இருக்கு. வேலைப்பளுவிலும் ரொம்ப சிரித்தேன்
இந்த பதிவில் சிரிப்புடன் சில நியாயங்களையும், உண்மைகளையும் சொல்லியுள்ளீர்கள்.
////LOSHAN சொன்னது…
உங்கள் மொழிபெயர்ப்பு ஆற்றல்,தமிழ் சொல்லாக்கம்,கையாளுகைக்கும் பாராட்டுக்கள்..////
நான் ஏற்கனவே கனககோபியிடம் சொன்ன விடயத்தை லோசனும் சொல்லிட்டாரே….. வாழ்த்துக்கள் கோபி.
ஏற்கனவே மின்னஞ்சலில் படித்தாலும் சிரிப்பு வரத்தான் செய்தது.
//நுண்ணலை அடுப்பில்//
எங்க இருந்து இதையெல்லாம் பிடிக்கிறீங்க?
//LOSHAN கூறியது...
கலக்கல்.. வாய் விட்டு சிரித்தேன்.. உங்கள் மொழிபெயர்ப்பு ஆற்றல்,தமிழ் சொல்லாக்கம்,கையாளுகைக்கும் பாராட்டுக்கள்..
பின் தொடருகிறேன்.. (அதுக்காக பின்னால திரும்பிப் பார்க்காதீங்க)//
நன்றி உங்கள் பாராட்டுக்கு...
ஆனா இதில மொழிபெயர்ப்பு எண்டு எந்தத் தகுதியும் தேவையில்லையே... (அடக்கம். ஹி ஹி...)
நகைச்சுவை விடயங்களை மொழிமாற்றம் செய்வது சுலபம் தானே...
பின்தொடர்றீங்களா... ம். ம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...
// ilangan கூறியது...
சரipயாச் சொன்னீங்க நான் 9ம் நம்பரை கணக்கெடுக்கவில்லை. ரொம்ப நல்லா இருக்கு.......
இன்னும் 2 வருடத்தில் சாப்பிடுறதை தவிர மிச்ச எல்லாத்தையும் மறந்திருவம் பாருங்களேன்...//
அதுதானே... சாப்பிடுறத யார் மறந்தாலும் நான் மறக்க மாட்டன்... ஹி ஹி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா....
//வந்தியத்தேவன் கூறியது...
சிரித்தேன் எப்படி ஐயா இப்படி முடிகிறது, நல்லவர் பட்டாளம் என தலையங்கம் போட்டிருப்பதால் உங்களைப் பிந்தொடர்கின்றேன். //
சிரியுங்கோ... சிரியுங்கோ...
நல்லவனை பின்தொடரும் கூட்டம் நல்லவர் பட்டாளம் தானே அண்ணா... (ஹி ஹி...)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....
நல்லயிருக்கு... ரசித்தேன்... சிரித்தேன்...
//இறக்குவானை நிர்ஷன் கூறியது...
சூப்பரா இருக்கு. வேலைப்பளுவிலும் ரொம்ப சிரித்தேன் //
உங்களப் போல ஆக்கள் சீரியஸா எழுதிறதால தான் எங்களால எல்லாம் மொக்கைப் பதிவுகளோட பிழைக்க முடியுது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
//மருதமூரான். கூறியது...
இந்த பதிவில் சிரிப்புடன் சில நியாயங்களையும், உண்மைகளையும் சொல்லியுள்ளீர்கள்.
////LOSHAN சொன்னது…
உங்கள் மொழிபெயர்ப்பு ஆற்றல்,தமிழ் சொல்லாக்கம்,கையாளுகைக்கும் பாராட்டுக்கள்..////
நான் ஏற்கனவே கனககோபியிடம் சொன்ன விடயத்தை லோசனும் சொல்லிட்டாரே….. வாழ்த்துக்கள் கோபி. //
வாழ்த்துக்கு நன்றி அண்ணா...
பெரியவர்கள் வாழ்த்துவது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி...
//Subankan கூறியது...
ஏற்கனவே மின்னஞ்சலில் படித்தாலும் சிரிப்பு வரத்தான் செய்தது. //
நல்லது... நீங்கள் சிரித்தால் எனக்கு மகிழ்ச்சியே...
////நுண்ணலை அடுப்பில்//
எங்க இருந்து இதையெல்லாம் பிடிக்கிறீங்க? ////
ஹி ஹி...
microwave என்றால் நுண்ணலை எண்டு சின்ன வயசில படிச்சது... ஹி ஹி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...
//வேந்தன் கூறியது...
நல்லயிருக்கு... ரசித்தேன்... சிரித்தேன்... //
உங்கள் வருகைக்கும் சிரிப்புக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
//3 பேரைக் கொண்ட உங்கள் குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ள 15 தொலைபேசி இலக்கங்கள் இருக்கும்...//
என்ன கோபி தங்களின் வீட்டு அனுபவம் போல தெரியுதே.....
ம்..ம்.. கலக்குங்க கோபி கலக்குங்க.
//இப்போது அறிந்து கொண்டீர்களா நீங்கள் 2009ம் ஆண்டில் வசிக்கிறீர்கள் என்று....//
அறிந்து கொண்டேன்... அறிந்து கொண்டேன்...
சூப்பர் கனககோபி...
நல்லா இருக்கப்பா...:))
////
14. மேலே இலக்கங்கள் இட்டதில் 9ம் இலக்கம் தவறவிடப்பட்டமையை கவனிக்காமலிருக்குமளவிற்கு நீங்கள் வேலைப்பழுவாக இருப்பீர்கள்...
15. அதை வாசித்த பின்னர் மேலே சென்று 9ம் இலக்கம் இல்லைதானா என்பதை உறுதிப்படுத்தியிருப்பீர்கள்...
இப்போது நீங்கள் சிரிக்கிறீர்கள்....
இப்போது அறிந்து கொண்டீர்களா நீங்கள் 2009ம் ஆண்டில் வசிக்கிறீர்கள் என்று////
இதெல்லாம் எப்படி நாங்கள் செய்றது உங்களுக்கு தெரியும். நல்லா சிரிச்சேன்.
நாங்க எல்லாம் உங்கள ரொம்ப காலமா தொடர்கிறோமே ஒரு உபசரிப்பு இல்லையா?
// b-logeswaran கூறியது...
//3 பேரைக் கொண்ட உங்கள் குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ள 15 தொலைபேசி இலக்கங்கள் இருக்கும்...//
என்ன கோபி தங்களின் வீட்டு அனுபவம் போல தெரியுதே.....
ம்..ம்.. கலக்குங்க கோபி கலக்குங்க. //
யோவ் லோகேஸ்... என்னட்ட வெறும் எட்டு அலைபேசி இலக்கங்கள் தான் இருக்கு... உனக்கு தெரியாதா என்ன???
ஹா ஹா....
நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்...
// Bavan கூறியது...
//இப்போது அறிந்து கொண்டீர்களா நீங்கள் 2009ம் ஆண்டில் வசிக்கிறீர்கள் என்று....//
அறிந்து கொண்டேன்... அறிந்து கொண்டேன்...
சூப்பர் கனககோபி... //
நன்றி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//மயூ கூறியது...
நல்லா இருக்கப்பா...:)) //
இருக்கிறமப்பா... இருக்கிறம்...
ஹி ஹி...
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....
// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
////
14. மேலே இலக்கங்கள் இட்டதில் 9ம் இலக்கம் தவறவிடப்பட்டமையை கவனிக்காமலிருக்குமளவிற்கு நீங்கள் வேலைப்பழுவாக இருப்பீர்கள்...
15. அதை வாசித்த பின்னர் மேலே சென்று 9ம் இலக்கம் இல்லைதானா என்பதை உறுதிப்படுத்தியிருப்பீர்கள்...
இப்போது நீங்கள் சிரிக்கிறீர்கள்....
இப்போது அறிந்து கொண்டீர்களா நீங்கள் 2009ம் ஆண்டில் வசிக்கிறீர்கள் என்று////
இதெல்லாம் எப்படி நாங்கள் செய்றது உங்களுக்கு தெரியும். நல்லா சிரிச்சேன்.
நாங்க எல்லாம் உங்கள ரொம்ப காலமா தொடர்கிறோமே ஒரு உபசரிப்பு இல்லையா? //
நண்பர்கள் தானே... இது கூட தெரியாதா... ஹி ஹி...
பின்தொடாறதுக்கு party வைக்கட்டா...???
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் யோ வொய்ஸ்...
கருத்துரையிடுக