பதிவர் சுபாங்கன் என்னை அழகு, காதல், பணம், கடவுள் என்ற தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.
எனக்கு உண்மையிலேயே என்ன எழுதுவது என்று தெரியவில்லை.
ஆனால் தந்த அழைப்பிற்காக எழுத வேண்டுமே... அது தான்...
அழகு....
எல்லாமே அழகு தான்...
என்னைப் பொறுத்தவரை நான் விரும்பும் எல்லாமே அழகு தான்.
ஐஸ்வர்யாராஜ் அல்லது ஏனைய உலக அழகிகள், உலக அழகர்கள் எனக்கு அழகாகத் தெரியமாட்டார்கள்... ஆனால் இன்னொருவர் அழும்போது கண்ணீரைத் துடைக்கும் மனிதத்தை கொண்ட, மற்றவர்கள் அழகில்லை என நினைக்கும் ஒருவர் எனக்கு பேரழகியாக, பேரழகனாகத் தெரிவர்...
எல்லாவற்றையும் விட நான் நேசிக்கும், என்னை நேசிக்கும் எவருமே எனக்கு பேரழகர்கள், பேரழகிகள் தான்...
யாரையும் இதுவரை அழகன், அழகி என்ற பார்வையில் வேறுபடுத்தியது கிடையாது. இனிமேலும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.
அழகு எங்குமில்லை, அன்பில் தான் இருக்கிறது.
சிறுகுழந்தை பொதுவாக எல்லோருக்கும் அழகாகவே தெரிகிறது. அது ஏன்?
ஏனென்றால் அந்தக் குழந்தையை நீங்கள் எதிரியாக நினைப்பதில்லை, அந்தக் குழந்தையிடம் கெட்ட பழக்கங்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே அந்த எண்ணம் தானாகவே அன்பை ஏற்படுத்துகிறது. அந்த அன்பு உங்களை அந்தக் குழந்தையை அழகாகக் காட்டுகிறது.
வளர்ந்த பின்னர் ஒவ்வொருவரும் பிழை செய்ய ஆரம்பிக்கும் போது அந்தப் பிழைகள் எம் கண்முன்னே வருவதால் சிலர் அழகில்லாமற் தெரிகிறார்கள்.
அன்னை தெரேசாவின் முகத்தை உற்றுப் பாருங்கள்... பேரழகியாத் தெரிவார்.
காதல்...
பச்சிளம் குழந்தையிற்ற கேக்கிற கேள்வியா இது?
சரி சரி...
முட்டாளை அறிஞனாக்கும், அறிவாளியை முட்டாளாக்கும் என்று சொல்வார்கள்.
புற அழகில் வரும் காதலை விட உண்மையான அன்பில் வரும் காதல் மேல் நம்பிக்கையுள்ளவன்.
(இது பயங்கர சுயநலம்... ஏனென்டா அழக பாத்து காதலிக்கிறது எண்டா என்னயெலல்லாம் யாரும் காதலிக்க மாட்டாங்க தானே? ;) )
காதலர்கள் பொய்யர்களாக இருந்தாலும், காதல்கள் பொய்யாக அமையாது என்பது எனது நம்பிக்கை.
காதல் இல்லாமல் இங்கு யாரும் இல்லை என்பேன். சிலர் வெளிப்படுத்திக் கொள்வார்கள். பலர் வெளிப்படுத்துவதில்லை.
எனக்குக் காதல் பிடிக்கும். அந்த உணர்வு பிடிக்கும். அது ஏற்படுத்தும் இன்ப வலி பிடிக்கும்.
சில இடங்களில் நிஜவலிகளும் ஏற்படுவதுண்டு.
நடக்க ஆரம்பிக்கும் போது தான் விழுவேன் எனக் குழந்தைக்கு தெரிவதில்லை.
காதலிக்க ஆரம்பிக்கும் பலருக்கும் அது வலிகளையும் தரும் என்பதும் புரிவதில்லை.
'உன்னை மறக்க நினைக்கிறேன், நம் காதல் நம் கண்முன்னே வருகிறது
நம் காதலை மறக்க நினைக்கிறேன், உன் முகம் என் கண்முன்னே வருகிறது இரண்டையும் மறக்க நினைக்கிறேன்... மரணம் கண்முன்னே வருகிறது...'
இது நான் எழுதிய வரிகள்... (கவிதை எண்டு சொன்னா எங்க கவிதய காணேல எண்டு மொக்கை போடுவீங்க தானே? அது தான்)
'உன்னுள் என்னை நான் தொலைத்தேன்...
நீ அருகே இல்லாதபோது என்னைக் கண்டுபிடித்தேன், மறுபடி தொலைக்கும் ஆசையில்'
பணம்...
பணமின்றி வாழ்க்கையில்லை...
ஆனால் பணமே வாழக்கையில்லை...
அடிக்கடி எனக்கு நானே, சிலவேளைகளில் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு சொல்லும் வரிகள் இவை.
(Money is a must for life, but money isn't the life)
வீட்டில் அடிக்கடி நகைச்சுவையாக 'காசென்ன காசு... இண்டைக்கு வரும்.. நாளைக்கு போகும்' என்று சொல்லிக் கொள்வேள்.
ஆனால் பணமின்றி எதுவுமே இல்லை என்பது எனக்குத் தெரியும்.
பணத்தை நோக்கியே உலகம் அசைகிறது.
இன்னொருவரின் இரத்தத்தைக் குடிக்காத, இன்னொருவரின் கண்ணீரோடு வராத பணம் என்றென்றும் எனக்கு வேண்டும்.
கடவுள்...
கடவுள்...!!! இதுவரை கண்டதில்லை என்கிறார்கள் பலர். ஆனால் பலமுறை கண்டிருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன்...
மக்கள் கஷ்ரப்படும் போது அவர்களுக்கு உதவும் எல்லோருமே கடவுளர்கள் தான்.
ஆனால் மதங்களையும், வழிபாடுகளையும் வெறுக்கிறேன்.
மதங்கள் இல்லாவில் இந்தியாவில் ஏன் அடிக்கடி கலவரங்கள் ஏற்படப்போகிறது?
மதங்கள் வேண்டாம். கோவில்கள் வேண்டாம்.
மனிதம் மட்டும் போதும்.
உணராத ஒருவிடயத்திற்காக நம்மிடையே சண்டைகள் வேண்டாம்.
எனக்கு மேல் உள்ள சக்தியை நம்புகிறேன். அதைத் தான் கடவுள் என்கிறார்கள். ஆனால் மதங்களை நம்பவில்லை, வெறுக்கிறேன்...
ஒரு மதத்தில் சரியென்று சொல்லப்படுகின்ற விடயம் இன்னொரு மதத்தில் பிழையெனப்படுகிறது.
ஆகவே எங்கேயோ பிழை இருக்கிறதல்லவா...???
(திரும்பவும் மதங்கள் தொடர்பான வாதத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.)
**************************************************************************
இப்போது தான் எனக்கு மகிழ்ச்சி...
இன்னொருவரை மாட்டிவிடுவதில் என்ன ஒரு மகிழ்ச்சி...
எனக்குத் தெரிந்தவரை பொதுவாக எல்லோரும் எழுதிவிட்டார்கள்.
எனக்கு யாரை அழைப்பது என்று தெரியவில்லை...
மீண்டும் நண்பன் இலங்கனை அழைக்கிறேன்...
நண்பர் Thevash ஐ அழைக்கிறேன். -இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கிறார். அவரை குழுமத்தோடு இப்படியான வகையில் சேர்த்தால் அவரின் எழுத்துக்கள் மேலும் வெளிவர உதவும் என நம்புகிறேன். நண்பரே வாருங்கள்.
நண்பர் இறக்குவானை நிர்ஷனை அழைக்கிறேன் - புதிய மலையகம் என்ற இவரது சமூக சீர்திருத்த எழுத்துக்களை இரசிக்கிறேன். நண்பரே வாருங்கள்.
சகோதரி தர்ஷாயினி - ஒப்பீட்டளவில் புதியவர். (நானெல்லாம் 1 வருஷத்துக்கு மெல இருந்து குப்பை கொட்டுறன். என்னோட ஒப்பிட்டா புதியவர் எண்டு சொல்ல வந்தன்.) அருமையான கவிதைகளுக்கு சொந்தக்காரர். அன்புடன் அழைக்கிறேன்.
அழைத்த இரு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இந்த தொடர் பதிவை மேலும் விரிவுபடுத்துங்கள்.
உங்கள் நண்பர்களை, நீங்கள் படிக்கும் பதிவர்களை தொடர அழையுங்கள்.
குறிப்பு: நண்பர் யோ வொய்ஸிடம் மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் தான் முதலில் பிடிக்கும் பிடிக்கும் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தீர்கள். ஆனால் ஏதோ குழப்பத்தில் அழகு, காதல், பணம், கடவுள் தொடர்பதிவை முதலில் வந்ததென நினைத்து எழுதிவிட்டேன்.
உங்கள் தொடர்பதிவை விரைவில் பதிவிடுகிறேன்...
***********************************************************************
நிறைய நாட்களுக்கு முன்னர் வந்தியத்தேவன் அண்ணா என்னை ஊக்கப்படுத்தி விருதொன்றை தந்தார். அவர் தந்து சில நாட்களின் பின்னர் சகோதரர் சதீஷ் அவர்களும் அதே விருதை தந்திருந்தார்கள்.
அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நானும் இதை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்று கிளம்பிற்றன்...
ஆனால் விருது வழங்குபவர் தனக்கு தகுதியில்லாம விருது கொடுக்க வெளிக்கிட்டா பிறகு அண்மைய தமிழக அரசின் சினிமா விருதுகள் போலாகிவிடும் என்பதால் விருது என்ற வார்த்தையை பரிசு என மாற்றிக் கொள்கிறேன்.
என் சார்பான அன்புப் பரிசை கீழ்வரும் நண்பர்களுக்கு கொடுக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே...
இறக்குவானை நிர்ஷன் - படிக்கத் தொடங்கி குறுகிய காலத்தில் வெகுவாகப் பிடித்துப் போய்விட்டது இவரது எழுத்துக்கள். மலையகம் பற்றிய இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவருக்கு என் அன்புப் பரிசு.
நண்பர் இலங்கன் - ஒரே வகுப்பில் படித்திருந்தாலும் இருவரும் எழுதுவது மற்றொருவருக்கு தெரியாமலேயே எழுதிக் கொண்டிருந்தோம் சில காலங்கள். அருமையான நகைச்சுவையாளன். அவரை வாழ்த்தி எனது அன்புப் பரிசு.
நண்பர் தேவேஷ் - புதியவர். கனடாவிலிருந்து பதிவிடுகிறார் என நம்புகிறேன். நண்பரின் கவிதைகளும், ஏனைய ஆக்கங்களும் மென்மேலும் வெளிவர அவரிடம் வேண்டிக் கொண்டு அவருக்கு என் அன்புப்பரிசு.
நண்பர்களே உங்கள் எல்லோருடைய எழுத்துக்களையும் இரசிக்கிறேன். நான் மற்றவர்களுக்கு அன்புப்பரிசு வழங்கவில்லை என்பதால் உங்கள் எழுத்துக்களை இரசிக்கவில்லை என்று அர்த்தப்படாது. மற்றவர்கள் பொதுவாக ஏற்கனவே விருது பெற்றுவிட்டார்கள் என்று நம்புகிறேன்.
35 பின்னூட்டங்கள்:
////உன்னை மறக்க நினைக்கிறேன், நம் காதல் நம் கண்முன்னே வருகிறது
நம் காதலை மறக்க நினைக்கிறேன், உன் முகம் என் கண்முன்னே வருகிறது இரண்டையும் மறக்க நினைக்கிறேன்... மரணம் கண்முன்னே வருகிறது...'////
கனககோபி,
நல்லத்தான் அனுபவிச்சு எழுதியிருக்கிறியள் எண்டு விளங்குது. கவனம் தம்பி…. ஏங்கயாவது வசமா மாட்டிட்டு விலக முடியாமல் தவிக்கப்போறியள். ஏன்னவோ தெரியவில்லை எனக்கு இவ்வாறான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டதில்லை.
நான் என்னுடைய பதிவில் காதல் பற்றி சொன்ன வரிகள் இவை:
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் என்பது சுஜாதாவும், வைரமுத்துவும் ‘ஆய்த எழுத்து’ படத்திற்காக எழுதியது மாதிரி “உண்மை சொன்னால் நேசிப்பாயா, மஞ்சந்தின் மேல் மன்னிப்பாயா…. காதல் கொஞ்சம் கம்மி, காமம் கொஞ்சம் தூக்கல்” என்பதில் நம்பிக்கையுள்ளவன். ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் இருக்கும் இனம்புரியாத ஈர்ப்புக்கும், தேவைக்கும் நாகரீகமும், கலாசாரமும் இணைந்து உருவாக்கிய அழகான சொல் ‘காதல்’.
தங்களின் பார்வையில் பதிவின் தலைப்பை ஆராய்ந்திருக்கிறீர்கள். கடவுள், பணம் மற்றும் அழகு விடயங்களில் பல இடங்களில் நம்முடைய கருத்துக்கள் ஒத்துப்போகின்றன. வாழ்த்துக்கள்.
கடவுள், பணம் ஆகியவற்றில் எங்கள் கருத்துக்கள் ஒத்துப்போகின்றனவே.
காதல் - பச்சை மண்ணுப்பா நீ.
// மருதமூரான். கூறியது...
////உன்னை மறக்க நினைக்கிறேன், நம் காதல் நம் கண்முன்னே வருகிறது
நம் காதலை மறக்க நினைக்கிறேன், உன் முகம் என் கண்முன்னே வருகிறது இரண்டையும் மறக்க நினைக்கிறேன்... மரணம் கண்முன்னே வருகிறது...'////
கனககோபி,
நல்லத்தான் அனுபவிச்சு எழுதியிருக்கிறியள் எண்டு விளங்குது. கவனம் தம்பி…. ஏங்கயாவது வசமா மாட்டிட்டு விலக முடியாமல் தவிக்கப்போறியள். ஏன்னவோ தெரியவில்லை எனக்கு இவ்வாறான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டதில்லை.
நான் என்னுடைய பதிவில் காதல் பற்றி சொன்ன வரிகள் இவை:
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் என்பது சுஜாதாவும், வைரமுத்துவும் ‘ஆய்த எழுத்து’ படத்திற்காக எழுதியது மாதிரி “உண்மை சொன்னால் நேசிப்பாயா, மஞ்சந்தின் மேல் மன்னிப்பாயா…. காதல் கொஞ்சம் கம்மி, காமம் கொஞ்சம் தூக்கல்” என்பதில் நம்பிக்கையுள்ளவன். ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் இருக்கும் இனம்புரியாத ஈர்ப்புக்கும், தேவைக்கும் நாகரீகமும், கலாசாரமும் இணைந்து உருவாக்கிய அழகான சொல் ‘காதல்’.
தங்களின் பார்வையில் பதிவின் தலைப்பை ஆராய்ந்திருக்கிறீர்கள். கடவுள், பணம் மற்றும் அழகு விடயங்களில் பல இடங்களில் நம்முடைய கருத்துக்கள் ஒத்துப்போகின்றன. வாழ்த்துக்கள். //
உங்கட எச்சரிக்கைக்கு நன்றி...
ஆனா என்ன செய்யிறது?
விழாமலே இருக்கமுடியுமா...
அனுபவிச்சு எண்டும் சொல்லேலாது... அனுபவிக்காம எண்டும் சொல்லேலாது...
ம்...
உங்கள் பதிவு பார்த்தேன்...
நன்றாக இருந்தது...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
//Subankan கூறியது...
கடவுள், பணம் ஆகியவற்றில் எங்கள் கருத்துக்கள் ஒத்துப்போகின்றனவே.//
அப்ப புதுசா ஒரு சங்கம், அரசியல் கட்சி ஏதும் தொடங்குவமா?
//காதல் - பச்சை மண்ணுப்பா நீ. //
ரொம்ப நன்றிப்பா... உங்கள போல ரெண்டு மூண்டு பேரால தான் நான் இப்பயும் பச்ச மண்ணாவே இருக்கிறன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
எல்லாவற்றையும் விட நான் நேசிக்கும், என்னை நேசிக்கும் எவருமே எனக்கு பேரழகர்கள், பேரகழிகள் தான்...//
//பேரகழிகள் தான்//
இது எழுத்துப்பிழையா அல்லது வேண்டுமென்றே விட்டதா :) பேரகழிகள்.....
//சயந்தன் கூறியது...
எல்லாவற்றையும் விட நான் நேசிக்கும், என்னை நேசிக்கும் எவருமே எனக்கு பேரழகர்கள், பேரகழிகள் தான்...//
//பேரகழிகள் தான்//
இது எழுத்துப்பிழையா அல்லது வேண்டுமென்றே விட்டதா :) பேரகழிகள்..... //
எழுத்துப் பிழைதான்... சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்...
திருத்திவிட்டேன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
இன்னொருவர் அழும்போது கண்ணீரைத் துடைக்கும் மனிதத்தை கொண்ட,
நடக்க ஆரம்பிக்கும் போது தான் விழுவேன் எனக் குழந்தைக்கு தெரிவதில்லை.
காதலிக்க ஆரம்பிக்கும் பலருக்கும் அது வலிகளையும் தரும்,
இன்னொருவரின் இரத்தத்தைக் குடிக்காத, இன்னொருவரின் கண்ணீரோடு வராத,
மனிதம் மட்டும் போதும்.
உணராத ஒருவிடயத்திற்காக நம்மிடையே சண்டைகள் வேண்டாம்.
என்ன அருமையான - உணர்வுபூர்வமான கருத்துக்கள்! அசந்துவிட்டேன்! வாழ்த்துக்கள்! முடிந்தால் என்னுடைய பதிவின் முதல் குறிப்பிட்ட - நன்றே நினைமின் நமனில்லை என்ற பதிவில்
எனது உயிர் எனது உடலை விட்டுப்பிரிய முன்னர் இக்கொள்கைகளை ஏற்கக்கூடிய ஒரு மனிதனைக் காண்பேன் - கண்டுகொள்வேன் என்பது எனது திடமான சங்கற்பம்.
பதிவுலகத் தொடர்பாலும் - வாழ்க்கை அனுபவங்களாலும் பலரை மனிதர்களாக நான் காண்கிறேன். உம்மையும் அதில் ஒருவராக நான் மதிக்கிறேன்!
சுட்டிக்காட்டவெல்லாம் இல்லை கோபி :)
பேரகழிகள்... பெரிய அகழிகள் என பெண்களை ஏதாவது உள்குத்தில் சொல்லுகிறீர்களோ என நினைத்தேன்.. அட அப்படியில்லையா.......
கடவுள்,பணம்,அழகு எல்லாவற்றையும் உங்கள் ஏழுத்து நன்றாகவே புரியவைத்திருக்கிறது
நண்பர் கனககோபிக்கு,
என் எழுத்தைமதித்துப்பரிசு தந்ததற்கு
நன்றிகள்பல.நீங்கள் தந்த பரிசை மனப்
பூர்வமாகஏற்றுக்கொள்ளுகிறேன்.என்னை
தொடர் பதிவுக்கு அழைத்துள்ளீர்கள்
அதற்கும் என் மனமார்ந்த ந்ன்றிகள்
(தொடரும்)
நான் முந்திரிக்கொட்டைபோல் யாரும்
அழைக்காமல் தொடரில் புகுந்து கடவுள்,
காதல்,பணம், அழகு என்றதொடரில்
என் எண்ணங்களை எழுதி வெளியிட்டு
விட்டேன்.கீழே அதன் சுட்டி தந்துள்ளேன்.
http://theveshblog.blogpost.com/2009/09/blog-post_28.html
இன்னொருவர் அழும்போது கண்ணீரைத் துடைக்கும் மனிதத்தை கொண்ட, மற்றவர்கள் அழகில்லை என நினைக்கும் ஒருவர் எனக்கு பேரழகியாக, பேரழகனாகத் தெரிவர்...
சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்
அருமையான பதிவு கோபி.. வாழ்த்துக்கள்...
ஆனா அழகு எண்டுட்டு அன்னை தெரேசாண்டா போட்டோவ போட்டது உனக்கே கொஞ்சம் ஓவராப்படேல்ல?
அம்மா பகவானிண்ட படத்தை போடாம விட்டியே அந்தளவுக்கு புண்ணியம்
ம்ம் நல்ல பதிவு. காதலில் மட்டும் ஏனோ எல்லோரும் பொய் சொல்கின்றார்கள்.
// தங்க முகுந்தன் கூறியது...
இன்னொருவர் அழும்போது கண்ணீரைத் துடைக்கும் மனிதத்தை கொண்ட,
நடக்க ஆரம்பிக்கும் போது தான் விழுவேன் எனக் குழந்தைக்கு தெரிவதில்லை.
காதலிக்க ஆரம்பிக்கும் பலருக்கும் அது வலிகளையும் தரும்,
இன்னொருவரின் இரத்தத்தைக் குடிக்காத, இன்னொருவரின் கண்ணீரோடு வராத,
மனிதம் மட்டும் போதும்.
உணராத ஒருவிடயத்திற்காக நம்மிடையே சண்டைகள் வேண்டாம்.
என்ன அருமையான - உணர்வுபூர்வமான கருத்துக்கள்! அசந்துவிட்டேன்! வாழ்த்துக்கள்! முடிந்தால் என்னுடைய பதிவின் முதல் குறிப்பிட்ட - நன்றே நினைமின் நமனில்லை என்ற பதிவில்
எனது உயிர் எனது உடலை விட்டுப்பிரிய முன்னர் இக்கொள்கைகளை ஏற்கக்கூடிய ஒரு மனிதனைக் காண்பேன் - கண்டுகொள்வேன் என்பது எனது திடமான சங்கற்பம்.
பதிவுலகத் தொடர்பாலும் - வாழ்க்கை அனுபவங்களாலும் பலரை மனிதர்களாக நான் காண்கிறேன். உம்மையும் அதில் ஒருவராக நான் மதிக்கிறேன்! //
வெட்டிப்பயலின் உளறல்கள் உங்களைக் கவர்ந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...
நான் மனிதனாக இருக்கவே முயற்சி செய்கிறேன். நான் ஒரு மனிதன் என்ற சொல்லுமளவிற்கு எனக்குத் தகுதிகள் கிடையாது என நம்புகிறேன்...
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...
//சயந்தன் கூறியது...
சுட்டிக்காட்டவெல்லாம் இல்லை கோபி :)
பேரகழிகள்... பெரிய அகழிகள் என பெண்களை ஏதாவது உள்குத்தில் சொல்லுகிறீர்களோ என நினைத்தேன்.. அட அப்படியில்லையா....... //
ஹா ஹா...
உள்குத்து ஏதும் வைத்துக் கதைத்தால் நிறைய இடத்தில் வெளிக்குத்துகள் வாங்க வேண்டி இருக்குமே...???
ஹி ஹி...
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...
//Thirumathi Jaya Seelan கூறியது...
கடவுள்,பணம்,அழகு எல்லாவற்றையும் உங்கள் ஏழுத்து நன்றாகவே புரியவைத்திருக்கிறது //
புரிய வைத்திருக்கிறதா???
ஆகா...
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...
// Thevesh கூறியது...
நண்பர் கனககோபிக்கு,
என் எழுத்தைமதித்துப்பரிசு தந்ததற்கு
நன்றிகள்பல.நீங்கள் தந்த பரிசை மனப்
பூர்வமாகஏற்றுக்கொள்ளுகிறேன்.என்னை
தொடர் பதிவுக்கு அழைத்துள்ளீர்கள்
அதற்கும் என் மனமார்ந்த ந்ன்றிகள்
(தொடரும்) //
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...
எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு...
அழகாக இருக்கிறது உங்கள் ஒவ்வொரு கருத்துக்களும் கோபி. அன்பையே ஆணிவேராக கொண்ட அன்னை தெரேசாவின் முகம் என்றும் அழகு தான்.
/ Thevesh கூறியது...
நான் முந்திரிக்கொட்டைபோல் யாரும்
அழைக்காமல் தொடரில் புகுந்து கடவுள்,
காதல்,பணம், அழகு என்றதொடரில்
என் எண்ணங்களை எழுதி வெளியிட்டு
விட்டேன்.கீழே அதன் சுட்டி தந்துள்ளேன்.
http://theveshblog.blogpost.com/2009/09/blog-post_28.html //
ஐயயோ...
இதை நான் கவனிக்கவில்லை...
உங்கள் கவிதைப் பக்கத்தைத் தான் உங்கள் பிரதான பதிவு என நினைத்துக் கொண்டிருந்தேன்...
பரவாயில்லை...
வாழ்த்துக்கள் நண்பரே...
// Buஸூly கூறியது...
இன்னொருவர் அழும்போது கண்ணீரைத் துடைக்கும் மனிதத்தை கொண்ட, மற்றவர்கள் அழகில்லை என நினைக்கும் ஒருவர் எனக்கு பேரழகியாக, பேரழகனாகத் தெரிவர்...
சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் //
நன்றிகள்...
நிறையப் பேர் என்னைப் போல சிந்திப்பது எனக்கு மகிழ்ச்சியையும், ஓர் உத்வேகத்தையும் தருகிறது...
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...
// புல்லட் கூறியது...
அருமையான பதிவு கோபி.. வாழ்த்துக்கள்...
ஆனா அழகு எண்டுட்டு அன்னை தெரேசாண்டா போட்டோவ போட்டது உனக்கே கொஞ்சம் ஓவராப்படேல்ல?
அம்மா பகவானிண்ட படத்தை போடாம விட்டியே அந்தளவுக்கு புண்ணியம் //
இதற்கு மேலேயுள்ள கருத்துரையை இட்டு அழித்தது நீங்கள் தானே?
என்னைப் பொறுத்தவரை அன்னை தெரேசா பேரழகி தான்...
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் டுமீல் அவர்களே...
//வந்தியத்தேவன் கூறியது...
ம்ம் நல்ல பதிவு. காதலில் மட்டும் ஏனோ எல்லோரும் பொய் சொல்கின்றார்கள். //
நன்றிகள்...
காதல் பற்றிப் பொய் சொல்லவில்லை...
மருதமூரான் அண்ணாவிற்கு அளித்த பதிலைப் பாருங்கள்,
//உங்கட எச்சரிக்கைக்கு நன்றி...
ஆனா என்ன செய்யிறது?
விழாமலே இருக்கமுடியுமா...
அனுபவிச்சு எண்டும் சொல்லேலாது... அனுபவிக்காம எண்டும் சொல்லேலாது...//
நான் பொய் சொல்லவில்லை...
வேண்டுமானால் பாதுகாப்புக் காரணங்களிற்காக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன் என எடுத்துக் கொள்ளலாம்...
ஹி ஹி ஹி...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா...
//யாழினி கூறியது...
அழகாக இருக்கிறது உங்கள் ஒவ்வொரு கருத்துக்களும் கோபி. அன்பையே ஆணிவேராக கொண்ட அன்னை தெரேசாவின் முகம் என்றும் அழகு தான். //
உங்கள் பெயரிற்கு கிட்டவாக எனக்கு பிடித்த ஒருவர் இருக்கிறார்... :)
ம்...
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சகோதரி...
நிறைய அனுபவம் இருக்கெண்டு நினைக்கிறன்........
பட்டும் படாமலும் எழுதியிருக்கிறியள்...,,,,!
//அது சரி, தொடர் பதிவுக்கு அழைச்சிட்டு "அழுமையான" கவிதைக்குச் சொந்தக்காரர் எண்டோ போடோனும்....? கவிதைகளை வாசிச்சிட்டு நிறையப் பேர் (தன்னை நொந்து) அழுகிற விஷயம் உங்களுக்கும் தெரிஞ்சிட்டுது போல..........ஹா...ஹா....!
அழைப்பிற்கு நன்றி.
//tharshayene கூறியது...
நிறைய அனுபவம் இருக்கெண்டு நினைக்கிறன்........
பட்டும் படாமலும் எழுதியிருக்கிறியள்...,,,,! //
ஹி ஹி...
பயங்கர புத்திசாலியா இருப்பீங்க போல???
//அது சரி, தொடர் பதிவுக்கு அழைச்சிட்டு "அழுமையான" கவிதைக்குச் சொந்தக்காரர் எண்டோ போடோனும்....? கவிதைகளை வாசிச்சிட்டு நிறையப் பேர் (தன்னை நொந்து) அழுகிற விஷயம் உங்களுக்கும் தெரிஞ்சிட்டுது போல..........ஹா...ஹா....!
அழைப்பிற்கு நன்றி. //
அது தட்டச்சுப் பிழை...
மன்னிக்க வேண்டும்...
பதிவில் திருத்தி விட்டேன்...
எழுதுங்கள்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
நண்பர் யோ வொய்ஸிடம் மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் தான் முதலில் பிடிக்கும் பிடிக்கும் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தீர்கள்
பரவாயில்லை மெதுவாகவே எழுதுங்கள். அருமையான எழுத்து நடையில் எழுதுகிறீர்கள்..
நன்றி கோபி.
எமது படப்பிடிப்பில் வேலையாக இருந்தபடியால் பதில் தரமுடியவில்லை. ஆனாலும் பதிவினைப் பார்த்து சந்தோசப்பட்டேன்.
பரிசுக்கும் நன்றிகள்.
விரைவில் பதிவிடுகிறேன்.
பதிவிட்டிருக்pறேன்.
மீண்டும் நன்றிகள்
http://www.nirshan.blogspot.com/
yenintam vantha azhaku, kadal, panam yellam poyirtru. annal kadavul mattum thangi vitathu.
//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
நண்பர் யோ வொய்ஸிடம் மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் தான் முதலில் பிடிக்கும் பிடிக்கும் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தீர்கள்
பரவாயில்லை மெதுவாகவே எழுதுங்கள். அருமையான எழுத்து நடையில் எழுதுகிறீர்கள்.. //
உங்களுக்கு ரொம்ம்ம்மபபப் பெரிய மனசு யோ வொய்ஸ்....
ஹி ஹி ஹி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
//இறக்குவானை நிர்ஷன் கூறியது...
நன்றி கோபி.
எமது படப்பிடிப்பில் வேலையாக இருந்தபடியால் பதில் தரமுடியவில்லை. ஆனாலும் பதிவினைப் பார்த்து சந்தோசப்பட்டேன்.
பரிசுக்கும் நன்றிகள்.
விரைவில் பதிவிடுகிறேன். //
ம்... நானும் வவுனியா சென்றிருந்தபடியால் பதிலளிக்க முடியவில்லை...
//இறக்குவானை நிர்ஷன் கூறியது...
பதிவிட்டிருக்pறேன்.
மீண்டும் நன்றிகள்
http://www.nirshan.blogspot.com/ //
பார்த்தேன்...
வாழ்த்துக்கள்...
//பெயரில்லா கூறியது...
yenintam vantha azhaku, kadal, panam yellam poyirtru. annal kadavul mattum thangi vitathu. //
அடடே... அப்ப நம்ம பக்கம்... வாருங்கள் நண்பரே...
பெயரை குறிப்பிட்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பேன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
கருத்துரையிடுக