க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஓர் இளைஞனுக்கும் ஓர் வயதானவருக்குமிடையிலான உரையாடல். ஒரு தடவை நேரம் சொல்வதால் என்ன நடக்கும் எனப் பாருங்கள்.
இளைஞன்: பெரியவரே! நேரம் என்னெண்டு சொல்ல முடியுமா?
முதியவர்: நிச்சயமா முடியாது.
இளைஞன்: ஐயா? ஆனா ஏன்? எனக்கு ஒருக்கா நேரம் சொல்றதால ஏதாவது குறைஞ்சிடுமா?
முதியவர்: ஓம். நிச்சயமா.
இளைஞன்: ஆனா, என்னெண்டு விளங்கப்படுத்த முடியுமா?
முதியவர்: இங்க பார். இப்ப நான் உனக்கு நேரம் சொன்னா நீ நிச்சயமா நன்றி சொல்லுவாய். அதோட நாளைக்கும் வரும் போதும் நேரம் கேப்பாய்.
இளைஞன்: ஓம். சாத்தியம்.
முதியவர்: அதுக்கு பிறகு 2,3 தரம் சந்திக்க வேண்டி வரலாம். நீ என்னட்ட என்ர பெயரயும் முகவரியயும் கேப்பாய்.
இளைஞன்: ஓம். நடக்கலாம்.
முதியவர்: பிறகொருநாள் என் வீட்டுக்கு வருவாய். அதால போகும் போது ஒருக்கா எட்டிப் பாத்திற்று போவம் எண்டு வந்தனான் எண்டு சொல்லுவாய். நானும் மரியாதைக்கு உனக்கு தேத்தண்ணி தருவன். என்ர மரியாதையான நடத்தையைப் பாத்து நீ திரும்ப திரும்ப வீட்டுக்கு வருவாய். இந்த முறை தேத்தண்ணி நல்லா இருந்ததெண்டு சொல்லி யார் தயாரிச்சதெண்டு கேப்பாய்.
இளைஞன்: ஓம். சாத்தியம்.
முதியவர்: பிறகு நான் அது என்ர மகள் எண்டு சொல்லுவன். பிறகு நான் என்ர இளமையான, அழகான மகளை உனக்கு அறிமுகப்படுத்த வேண்டி வரும். நீ என்ர மகளின்ர அழகில மயங்கி நிப்பாய்.
இளைஞன்: (புன்னகைத்தல்)
முதியவர்: அதுக்கு பிறகு நீ என்ர மகள அடிக்கடி பாக்க விரும்புவாய். அவளோட படத்துக்கு போகக் கேப்பாய். பிறகு தனியா எங்கயாவது வெளில போகக் கூப்பிடுவாய்.
இளைஞன்: (புன்னகை)
முதியவர்: அதுக்குப் பிறகு என்ர மகளும் உன்ன விரும்பத் தொடங்குவாள். உனக்காகக் காத்திருக்கத் தொடங்குவாள். நீ அவள காதலிக்கத் தொடங்குவாய். அவள கலியாணம் முடிக்கக் கேப்பாய்.
இளைஞன்: (புன்னகை)
முதியவர்: ஒரு நாள் ரெண்டு பேருமா ஒண்டா வந்து என்னட்ட கல்யாணம் முடிக்க அனுமதி கேப்பீங்க.
இளைஞன்: ஓம். நடக்கும்.
முதியவர்: (கோபமாக) ஒரு மணிக்கூடு கூட இல்லாத உன்ன என்ர மகளுக்கு எப்பயுமே கல்யாணம் கட்டித்தர மாட்டன். தொலைஞ்சு போ!.

10 பின்னூட்டங்கள்:

nice

தெய்வமே இன்று எப்படி வடையும், ரீயும்

// sakthi said...
nice//
நன்றி... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// ilangan said...
தெய்வமே இன்று எப்படி வடையும், ரீயும்//
பக்தா...
தந்தது கோப்பி பக்தா... ரீ அல்ல...
மூசி மூசி குடிக்கும் போது கூட குடிக்கிறது என்னெண்டு தெரியேலயா?

நல்லா வயிறு வலிக்கச் சிரித்தேன்.... அருமையான கதை!!

// என்.கே.அஷோக்பரன் said...
நல்லா வயிறு வலிக்கச் சிரித்தேன்.... அருமையான கதை!!//
நீங்கள் இரசித்தீர்கள் என்பது மகிழ்ச்சி நண்பா...

It's funny,
All ur posts are lovely....

Cheers
MArthu

//பெயரில்லா சொன்னது…

It's funny,
All ur posts are lovely....

Cheers
MArthu //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்து வாருங்கள்.

:D

//ஆதிரை கூறியது...
:D //

:)