க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஆண்களை பெண்கள் எவ்வாறு வார்த்தைகளால் சேதப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்...

ஆண்: நான் ஒரு புகைப்பிடிப்பாளன். உங்கள் முகத்தைப் போல ஒரு முகத்தைத் தான் இதுவரை நாளும் தேடிக் கொண்டிருந்தேன்.
பெண்: நான் ஒரு பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர். உன் முகத்தைப் போல ஒரு முகத்தைத் தான் நான் தேடிக் கொண்டிருந்தேன்.

ஆண்: உன்னுடன் ஆடும் சந்தோஷத்தைப் பெறலாமா?
பெண்: இல்லை. நானும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன்.

ஆண்: எவ்வாறு நீ இப்படி அழகாக இருக்கிறாய்?
பெண்: உன் பங்கும் என்னிடம் வந்துவிட்டது போலும்.

ஆண்: உன்னை சந்தோஷப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்.
பெண்: ஏன், என்னை விட்டு விலகப் போகிறாயா?

ஆண்: உன்னை மணம்முடிக்க நான் கேட்டால் என்ன சொல்வாய்?
பெண்: ஒன்றுமில்லை. என்னால் ஒரே நேரத்தில் சிரிக்கவும் கதைக்கவும் முடியாது.

ஆண்: ஏதாவதொரு படம் பார்க்கப் போகலாமா?
பெண்: நாங்கள் பார்க்கப் போகும் படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன்.

ஆண்: எம் இருவரையும் விதி தான் ஒன்று சேர்த்தது என நம்புகிறாயா?
பெண்: சீ.. சீ... அது வெறும் துரதிஷ்ரம் தான்.

ஆண்: இதுவரை நாளும் என் வாழ்க்கையில் வராமல் எங்கிருந்தாய்?
பெண்: உன்னிடமிருந்து ஒளிந்து கொண்டிருந்தேன்.

ஆண்: உன் பக்கத்திலிருக்கும் இருக்கை வெறுமையாகவுள்ளதா?
பெண்: ஆம். நீ அங்கே இருந்தால் நான் இருக்கும் இருக்கையும் வெறுமையாகும்.

5 பின்னூட்டங்கள்:

இலங்கைத் தமிழை பயன்படுத்துவது என்று கதைத்து விட்டு 'பொண்ணுங்க' என்று பயன்படுத்தி விட்டேனோ???

அனுபவம் பேசுதோ?

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

// யோ வாய்ஸ் கூறியது...
அனுபவம் பேசுதோ?

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்//

ஆகா...
நமக்கு அனுபவம் எல்லாம் இல்ல இந்த விசயத்தில.
உங்கள போல 4 பேரிற்ற கேட்டறிஞ்சு கொண்டது தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//என்னால் ஒரே நேரத்தில் சிரிக்கவும், கதைக்கவும் முடியாது...//

வார்த்தைகளில் நிறைய அர்த்தம் பொதிந்திருக்கிறது..........
வாழ்த்துக்கள் , நிறைய எழுதுங்கள்.....!

// tharshayene கூறியது...
//என்னால் ஒரே நேரத்தில் சிரிக்கவும், கதைக்கவும் முடியாது...//

வார்த்தைகளில் நிறைய அர்த்தம் பொதிந்திருக்கிறது..........
வாழ்த்துக்கள் , நிறைய எழுதுங்கள்.....! //

ஆகா...
வார்த்தைகளில் எந்த உள்குத்தோ அல்லது வெளிக்குத்தோ இல்லை என்பதை இத்தால் கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்வதில் பெருமையடைகிறேன்.
ஹா ஹா ஹா...
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.