க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...


படத்தை பெரிதாகப் பார்க்க படத்தில் அழுத்தி பாருங்கள்...

ம்...
படம் என்ன தான் நல்லா இருந்தாலும் ஒரு படத்தை மட்டும் போட்டு பதிவாக்கி பார்க்க வரும் ஒன்றிரண்டு பேரையும் ஏமாற்ற விரும்பவில்லை...
ஆகவே சில அறுவைகள் உங்களுக்காகவே...

ஓர் முட்டையை கொங்கிறீற் தரை மீது அதை உடைக்காமல் எப்படிப் போடுவீர்கள்?
கொங்கிறீற் தரை உடைவது கடினம்.

ஓர் சுவரை கட்டுவதற்கு எட்டு மனிதர்களுக்கு 10 மணித்தியாலங்கள் தேவைப்பட்டது எனில், அதை 4 பேர் செய்ய எவ்வளவு நேரம் தேவை?
நேரமே தேவையி்ல்லை. ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்டு விட்டது.

உங்கள் ஓர் கையில் 4 தோடம்பழங்களும், மறுகையில் 4 அப்பிள்களும் 4 தோடம்பழங்களும் இருந்தால் உங்களிடம் என்ன இருக்கிறது?
பெரிய கைகள்.

பாதி அப்பிள் எவ்வாறு தோற்றமளிக்கும்?
மறு பாதியைப் போல்.

நீங்கள் உங்கள் காலை உணவில் உண்ணவே முடியாதது?
இரவு உணவு.

18 பின்னூட்டங்கள்:

என்ன சேர் இது? தாங்க முடியல

// ilangan கூறியது...
என்ன சேர் இது? தாங்க முடியல //

வாங்க தலைவா...

இப்ப என்னான்னு சொல்லுறீங்க?

// யோ வாய்ஸ் கூறியது...
இப்ப என்னான்னு சொல்லுறீங்க? //

உங்க 10 ஆவது திருமணத்திற்கு இப்பிடி புதுசா எதையும் முயற்சிக்கலாமே...??? ;)

இது என்ன அவசரத் திருமணமா? பெண்ணின் வயிறு மிகப் பெரிதாக இருக்குதே... :))

என்ன கொடுமை சார் இது..
இப்படியும் உட்காந்து யோசிக்க முடிந்த உங்களுக்கு வா..வா...வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள் கோபி பதிவர் சந்திப்பில் ஒரு மூலையில் அமைதியாக இருந்தவரா நீங்கள் என சந்தேகப்பட வைக்கிறது. கலியாண வீட்டிற்க்கு வந்தவர்கள் சாப்பாடு சரியில்லை என்றார்கள்.

திருமண அழைப்பிதல் நன்றாக இருந்தது. கூடவே கொடுத்த கடிகள் அருமையாக இருந்தது.

வாழ்த்துக்கள்....

// மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
இது என்ன அவசரத் திருமணமா? பெண்ணின் வயிறு மிகப் பெரிதாக இருக்குதே... :)) //

சூ... உண்மையெல்லாத்தையும் இப்பிடி Public ஆ சொல்லக் கூடாது சகோதரா...

// நொண்டிசாமியார் கூறியது...
என்ன கொடுமை சார் இது..
இப்படியும் உட்காந்து யோசிக்க முடிந்த உங்களுக்கு வா..வா...வாழ்த்துக்கள்... //

உக்காந்து தான் யோசிச்சன்.
றூம் போட்டு யோசிக்கிற அளவுக்கு என்னட்ட வசதி இல்ல...

// வந்தியத்தேவன் கூறியது...
வாழ்த்துக்கள் கோபி பதிவர் சந்திப்பில் ஒரு மூலையில் அமைதியாக இருந்தவரா நீங்கள் என சந்தேகப்பட வைக்கிறது. கலியாண வீட்டிற்க்கு வந்தவர்கள் சாப்பாடு சரியில்லை என்றார்கள். //

அமைதிக்கு பெயர் தான் சாந்தி.. சீ சீ... அமைதிக்குப் பெயர் தான் கோபி...
ம்...
சாப்பாட்டு பிழைக்கு நீங்க தான் பொறுப்பு. நீங்க வேளைக்கே வந்து முடிச்சிற்று போயிற்றீங்க. பிறகு ஒரு ஓட்டை சாப்பாட்டு கடையில தான் வாங்கி குடுத்ததால பிழச்சு போச்சு...

// சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
திருமண அழைப்பிதல் நன்றாக இருந்தது. கூடவே கொடுத்த கடிகள் அருமையாக இருந்தது.

வாழ்த்துக்கள்.... //

அழைப்பிதழ் பிந்திக் கிடச்சதாலயா வரேல?
Reception கு வாங்கோ...

excellent :))

//பெயரில்லா சொன்னது…

excellent :)) //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பெயரை தட்டச்சுச் செய்யலாமே?

finally,,,, finished reading ur blog... sariyana kadi mannan

//Mukilini கூறியது...
finally,,,, finished reading ur blog... sariyana kadi mannan //

பழய பதிவுக்கு கருத்துரை போட்டிருக்கிறீங்க...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

இல்லப்பா... அந்த கனககோபி கானாபிரபா கொன்பியூசனுக்குப் பிறகு தான் வாசிக்கத் தொடங்கினான்.. எல்லாத்தையும் வாசிச்சு முடிக்க ஒரு நாலு நாளாவது தேவை கண்டியளோ... நாங்கள் பிசியான பிள்ளையளப்பா... மிகவும் பிடிச்ச ஆக்கத்துக்கு மட்டும் ஒரு கொமன்ற் போடுவம் என்டு நினைச்சு போட்டனான். இல்லாட்டி ஒவ்வொன்றுக்கும் போடவேணும். இன்டைக்கு அடிச்ச கும்மியில் எல்லாத்துக்கும் எழுத கை நோகுது....

எல்லாமே அட்டகாசமாத் தான் இருக்கு... கொமன்ற் போட வெளிக்கிட்டால் வாசிப்பது தடைபடும் என்டு தான் நாலு நாளாப் போடாம வாசிச்சனான்..... பலே உண்மையிலேயே கை தட்டுகிறேன்.. ஏற்றுக்கொள்ளவும்...

பி.கு: இப்ப உங்களின்ட புளொக்கும் பொலோ பண்ணுறன்... பட்டைய கிளப்புங்கோ.. என்ன...

//Mukilini கூறியது...
இல்லப்பா... அந்த கனககோபி கானாபிரபா கொன்பியூசனுக்குப் பிறகு தான் வாசிக்கத் தொடங்கினான்.. எல்லாத்தையும் வாசிச்சு முடிக்க ஒரு நாலு நாளாவது தேவை கண்டியளோ... நாங்கள் பிசியான பிள்ளையளப்பா... மிகவும் பிடிச்ச ஆக்கத்துக்கு மட்டும் ஒரு கொமன்ற் போடுவம் என்டு நினைச்சு போட்டனான். இல்லாட்டி ஒவ்வொன்றுக்கும் போடவேணும். இன்டைக்கு அடிச்ச கும்மியில் எல்லாத்துக்கும் எழுத கை நோகுது....

எல்லாமே அட்டகாசமாத் தான் இருக்கு... கொமன்ற் போட வெளிக்கிட்டால் வாசிப்பது தடைபடும் என்டு தான் நாலு நாளாப் போடாம வாசிச்சனான்..... பலே உண்மையிலேயே கை தட்டுகிறேன்.. ஏற்றுக்கொள்ளவும்...

பி.கு: இப்ப உங்களின்ட புளொக்கும் பொலோ பண்ணுறன்... பட்டைய கிளப்புங்கோ.. என்ன... //

இல்ல... சும்மா தான் கேட்டன்...
என்னட்ட இருக்கிற பிரச்சினை என்னென்டா நான் கொஞ்சம் கூட மொக்கை போடுவன்...
சிலவேளை மற்றவங்கள் அத சீரியஸ் எடுத்துப் போடுவாங்கள்...
ஹி ஹி...

பின்தொடருங்கோ...

கலக்கலாம் கலக்கலாம்...
(கரண்டி வாங்கித்தருவியள் தானே? )

வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றிகள்...