க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி- பிட்ஸா ஹட் நிலையத்துக்கு அழைத்தமைக்கு நன்றி. நான் உங்கள்...

வாடிக்கையாளர்- பொறுங்கள்... நான்...

வா.சே.பி- பொறுங்கள்... நான் உங்கள் பல நோக்கு பயன்பாட்டு அட்டை இலக்கத்தை அறிந்து கொள்ளலாமா?

வாடிக்.- ஆ.. சற்றுப் பொறுங்கள்.. ஆ... இதோ... 867456477546-788-46464

வா.சே.பி- நன்றி... ஆம்.. நீங்கள் திரு.கோபி.. இலக்கம் 234, கண்டி வீதி, வவுனியாவிலிருந்து அழைக்கிறீர்கள். உங்கள் வீட்டுத் தொலைபேசி இலக்கம் 338675. உங்கள் கைத்தொலைபேசி இலக்கம் 78346346743648. உங்கள் அலுவலக இலக்கம் 57545347. எந்த இலக்கத்திலிருந்து சேர் கதைக்கிறீர்கள்?

வாடிக்- வீட்டு இலக்கத்திலிருந்து. அது சரி, என்னுடைய இலக்கங்கள் எவ்வாறு உங்களுக்கு தெரியும்?

வா.சே.பி- நாங்கள் வலையமைப்போடு இணைந்திருக்கிறோம் சேர். We are connected to the system Sir.

வாடிக்- நான் கடல் உணவு சேர்ந்த பிட்ஸாவை ஓடர் செய்ய விரும்புகிறேன்.

வா.சே.பி- அது சிறந்த திட்டம் இல்லை சேர்.

வாடிக்- ஏன் அப்படி?

வா.சே.பி- உங்களுடைய மருத்துவ அறிக்கைகளி்ன் படி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது, அத்தோடு கொலஸ்ரோல் அளவும் கூடுதலாக உள்ளது சேர்.

வாடிக்- என்னது? அப்ப எனக்கு என்ன உணவை பிரேரிக்கிறீர்கள்?

வா.சே.பி- எங்களது கொழுப்பு மிதமான வெங்காய பிட்ஸாவை வாங்குங்கள் சேர். அது உங்களுக்கு விருப்பமானது.

வாடிக்- எவ்வாறப்படி உறுதியாக சொல்கிறீர்கள்?

வா.சே.பி- தேசிய நூலகத்திலிருந்து கடந்த வாரம் தான் 'பிரபலமான வெங்காய உணவுகள்' என்ற புத்தகத்தை பெற்றுச் சென்றீர்கள் சேர்.

வாடிக்- சரி. விடுங்கள். எனக்கு 2 தாருங்கள். எவ்வளவு செலவாகும்?

வா.சே.பி- 10 பேர் கொண்ட உங்கள் குடும்பத்திற்கு 2 போதாது சேர். 3 வாங்க வேண்டும். 3 இன் விலை 49.99 டொலர்கள் சேர்.

வாடிக்- எனது கடனட்டை மூலம் செலுத்தலாமா?

வா.சே.பி- மன்னிக்க வேண்டும் சேர். உங்கள் கடனட்டையின் கடன் நிலுவை கடனெல்லையைத் தாண்டி விட்டது. உங்கள் கடனட்டையின் கடன் மீதி தற்போது 4067.33 டொலர்கள் சேர். ஆகவே நீங்கள் உடன் பணம் மூலம் செலுத்த வேண்டும்.

வாடிக்- அப்போது நான் அருகிலுள்ள தன்னியக்க மீளப்பெறல் இயந்திரத்திலிருந்து பணத்தை மீளப்பெற்று உங்கள் விநியோகப்பிரதிநிதி வீட்டை வந்தடைய முன்னர் தயாராக இருக்க வேண்டும்.

வா.சே.பி- உங்களால் முடியாது சேர். அறிக்கைகளின் படி இன்றைய நாளுக்குரிய அதிகபட்ச பணத்தை மீளப்பெற்று விட்டீர்கள் சேர்.

வாடிக்- அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம். நீங்கள் பிட்ஸாவை அனுப்புங்கள் பணம் தயாராக இருக்கும். எவ்வளவு நேரம் எடுக்கும் நீங்கள் விநியோகம் செய்ய?

வா.சே.பி- கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சேர். ஆனால் விரைவாக வேண்டுமெனில் நீங்கள் உங்கள் மோட்டார் வண்டியில் வந்து பெற்றுக் கொள்ளலாம் சேர்.

வாடிக்- என்னது?

வா.சே.பி- எங்களிடமுள்ள அறிக்கைகளின் படி உங்களிடம் ஒரு ஹீரோ ஹொண்டா, ஸ்பிளென்டர் வகை மோட்டார் வண்டி உள்ளது சேர். பதிவு இலக்கம் NP ZZ 5768.

வாடிக்- (தனக்குள்) ஐயோ கடவுளே.

வா.சே.பி- வேறு ஏதாவது வேண்டுமா சேர்?

வாடிக்- வேண்டாம். ஆனூல் நீங்கள் வாக்களித்தபடி 3 கொக்க கோலா பானங்களை வழங்குவீர்கள் தானே?

வா.சே.பி- வழமையாக நாங்கள் வழங்குவதுண்டு. ஆனால் உங்கள் விடயத்தில் நீங்கள் நீரிழிவு நோயாளி என அறிக்கைகள் கூறுவதால் குளிர்பானங்களை வழங்க முடியாது சேர்.

வாடிக்- #$$^%&$@$%^

வா.சே.பி- நீங்கள் உங்கள் வார்த்தைகளை கவனித்துக் கொள்வது நல்லது சேர். கடந்த 1987 ம் ஆண்டு யூலை மாதம் 18ம் திகதி நீங்கள் காவல்துறை அதிகாரி மீது அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தியதால் நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டமையை நினைவுறுத்த விரும்புகிறேன் சேர்.

வாடிக்கையாளர் மூர்ச்சையடைந்து விட்டார்.

10 பின்னூட்டங்கள்:

#$$^%&$@$%^

இலங்கையிலா இப்படி நடக்கும் இன்னும் பதினொரு வருடங்களில்... நடந்தாலும நடக்கும்... நேற்றுத்தான் எங்கட வேலைத்தளத்திற்கு அரசாங்க ஆட்கள் வந்து ஊழியர் சேமலாப நிதிக்கு அடையாள அட்டை தருவதற்காக ஒல்லாந்தர் கால இயந்திரம் ஒன்றை வைத்து எங்களது தேசிய அடையாள அட்டைகளை நகலெடுத்தார்கள்...

#$$^%&$@$%^

நடக்கும் நடக்கும்... இருந்து பாப்பம்.. :))

கனககோபி.......

////உங்களுடைய மருத்துவ அறிக்கைகளி்ன் படி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது, அத்தோடு கொலஸ்ரோல் அளவும் கூடுதலாக உள்ளது சேர்.////

இதுவேறையா.... பாவமப்பா நீர்.

நல்லதொரு பதிவு. இன்னுமொரு பத்து அல்லது பதினைந்து வருடங்களில் இது சாத்தியமானதுதான்.

ஆனால், என்ன இவ்வளவு கடனுடன் இருப்பதால் (தங்களின்) வீட்டுக்காரம்மாவின் தொல்லை தாங்காமல் எரிச்சலுடன் வலம்வருவீர்கள். (நல்ல) எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்.

டெக்னிக்கல் காமெடி??? நல்லருக்கு பாஸ்

// மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
#$$^%&$@$%^ //

#$$^%&$@$%^
என்னட்ட கெட்ட வார்த்தை பேசப்படாது...

// மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
இலங்கையிலா இப்படி நடக்கும் இன்னும் பதினொரு வருடங்களில்... நடந்தாலும நடக்கும்... நேற்றுத்தான் எங்கட வேலைத்தளத்திற்கு அரசாங்க ஆட்கள் வந்து ஊழியர் சேமலாப நிதிக்கு அடையாள அட்டை தருவதற்காக ஒல்லாந்தர் கால இயந்திரம் ஒன்றை வைத்து எங்களது தேசிய அடையாள அட்டைகளை நகலெடுத்தார்கள்...

#$$^%&$@$%^

நடக்கும் நடக்கும்... இருந்து பாப்பம்.. :)) //

அரசாங்க திணைக்களங்கள் 11 வருடங்களென்ன, 110 வருடங்கள் சென்றாலும் ஒல்லாந்தர் கால முறைகளில் தான் தங்கியிருக்கம் என்பது இலங்கையறிந்த விடயம் தானே?

வருகைக்கும் கருத்துக்கம் நன்றி.

// மருதமூரான். கூறியது...
கனககோபி.......

////உங்களுடைய மருத்துவ அறிக்கைகளி்ன் படி உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது, அத்தோடு கொலஸ்ரோல் அளவும் கூடுதலாக உள்ளது சேர்.////

இதுவேறையா.... பாவமப்பா நீர்.

நல்லதொரு பதிவு. இன்னுமொரு பத்து அல்லது பதினைந்து வருடங்களில் இது சாத்தியமானதுதான்.

ஆனால், என்ன இவ்வளவு கடனுடன் இருப்பதால் (தங்களின்) வீட்டுக்காரம்மாவின் தொல்லை தாங்காமல் எரிச்சலுடன் வலம்வருவீர்கள். (நல்ல) எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள். //

வீட்டுக்காரம்மா...???!!!
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சப்படாது...

ம்...

இரத்த அழுத்தமும், உயர் கொலஸ்ரோலும் எயிட்ஸ்ம், காக்கை வலிப்பும், மூளைக் காய்ச்சலும் வந்த போது வந்தது...

// தேஜஸ்வினி கூறியது...
டெக்னிக்கல் காமெடி??? நல்லருக்கு பாஸ் //

ஓ! நகைச்சுவையா இருக்கா???
(வேற யாரும்) சொல்லவே இல்ல...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படி நடக்குமா?

நானும் 2070 உலகம் எப்படி இருக்கும் என எழுதியிருக்கிறேன் வந்து பாருங்கள்

http://yovoice.blogspot.com/2009/07/2070.html

// யோ வாய்ஸ் கூறியது...
மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படி நடக்குமா?

நானும் 2070 உலகம் எப்படி இருக்கும் என எழுதியிருக்கிறேன் வந்து பாருங்கள்

http://yovoice.blogspot.com/2009/07/2070.html //

நடக்கும் நடக்கும்...

உங்கள் தளத்திற்கு வந்தேன், பார்த்தேன், கருத்திட்டேன்...