க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

பேருந்து ஓட்டுநர் அடம்பிடித்து என்னை பிந்தச்செய்ததால் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் பிந்தித் தான் சந்திப்புக்குச் செல்லக் கிடைத்தது. நானும் ஒரு 20,30 பேர் இருப்பார்கள் என நினைத்தால் அங்கே விநோதன் மண்டபத்தில் உள்ள கதிரைகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்றையவற்றில் பதிவர்கள் அமர்ந்திருந்தார்கள். சந்திப்பும் ஆரம்பித்துவிட்டது. நானும் எனது நண்பரும் தான் சென்றோம். பிந்திச் சென்ற குற்றவுணர்ச்சியுடன் உள்நுழைந்தால் அந்த பதற்றத்தில் என் கண்களில் வெறுமையான கதிரைகளைக் காணமுடியவில்லை.

'ஆகா! ரொம்பத் தான் பிந்திற்றமோ?' என வடிவேல் பாணியில் யோசித்தவாறு சென்றால் லோஷன் அண்ணாவிற்குப் பக்கத்து கதிரை வெறுமையாக இருக்க அவர் அதிலே அமரலாம் என சைகை செய்தார்.

(லோஷன் அண்ணாவ எனக்குத் தெரியும் எண்டெல்லாம் தப்புக் கணக்குப் போடக் கூடாது. இந்......தாப் பெரிய உருவம் எழும்பி நிண்டா மற்றவங்களுக்கு மறைக்கும் தானே? அதுக்கு தான் இருக்கச் சொன்னார்.) நானும் இருந்துவிட்டேன்.
சதீஷன் என்பவர் தான் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். சந்திப்பு என்பதைவிட ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வாகத் தான் இருந்தது. Formal meeting என்பதற்கு பேசும் போது யாரோ தமிழ் அர்த்தம் கேட்டதும் ஞாபகத்திற்கு வருகிறது.

ஆதிரை என்பவர் புளொகரின் 10ஆவது பிறந்த நாளும் நேற்று என்பதால் அதைக் கொண்டாடும் முகமாக கேக் வெட்டிக் கொண்டாடும் திட்டத்தை அறிவித்தார். அவர் தான் புளொகரின் 10 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடும் பொறுப்பு முழுவதையும் செய்திருந்தார் என நம்புகிறேன்.சமூகமளித்திருந்த பதிவர்களில் பத்துப் பேர் எழுமாற்றாகத் தெரியப் பெற்று மெழுகுதிரி ஏற்ற அழைக்கப்பட்டார்கள். உண்மையாக அனைவரையும் முதல்முறை பார்த்தமையால் என்னால் முழுமையாக ஞாபகம் வைத்திருக்க முடியவில்லை. மன்னிக்கவும். புகைப்படங்களை கீழே இணைத்திருக்கிறேன்.பின்னர் இன்னும் நான்கு பேர் கேக் ஐ வெட்டினார்கள்.
சுபானு என்பவர் வலைப்பதிவிடுதலும் சட்டதிட்டங்களும் என்ற பெயரிலும், Cherankrish என்பவர் தொழிநுட்ப விடயங்கள் தொடர்பாகவும், லோஷன் அண்ணா வலைப்பதிவிடுலும் அனுபவங்களும் என்ற சார்பிலும், மருதமூரான் திரட்டிகள் பற்றியும் உரையாற்றினார்கள். சொற்பொழிவாற்றினார்கள் என்று சொல்லி உரையாற்றியவர்களை பம்பல் அடிக்க (இது எப்பிடி இருக்கு???!!!) விரும்பவில்லை.

பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது.அதிகம் கதைக்கப்பட்டது விசைப்பலகைகள் தொடர்பாகவும், யாழ்தேவி தொடர்பாகவும் தான்.யாழ்தேவி என்பது குறிப்பிட்ட பிரதேசத்தை குறிப்பது போல இருக்கிறது என சிலர் கருதுவதாக கூறினர். நானும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் என்பதால் இந்த விடயத்தில் என் கருத்து நடுநிலையாக இருக்காது என நம்புகிறேன். ஆகவே அதைப்பற்றிய கருத்துக்கள் இல்லை.சிலர் காத்திரமான சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள். குறிப்பாக என் கருத்துக்களை அஷோக்பரன் என்பவரும் கொண்டிருந்ததை கண்டு வியந்தேன். ஏனென்றால் அவர் இலங்கை பதிவர்கள் எங்கள் சுயத்தை இழந்து இந்திய மொழிமுறைக்கு மாறியதை எதிர்த்திருந்தார். இதே எதிர்ப்பை நானும் கொண்டிருக்கிறேன் ஆனால் என் பதிவுகளில் சிலவற்றில் இந்தியவழக்கு சிலவேளைகளில் புகுந்திருக்கலாம் என நம்புகிறேன்.
வந்தியத்தேவன் தான் நன்றியுரை ஆற்றினார்.
நடுவில் தரப்பட்ட வடை, பற்றீஸ், கேக், கோப்பி என்பவற்றைப் பற்றி குறிப்பிடாவிட்டால் அவற்றை ஏற்பாடு செய்த புல்லட் என் மீது புல்லட்களை ஏவலாம் என்பதால் அதையும் தெரிவித்து விடுகிறேன். இடக்கிடை புல்லட் வந்து சென்றதையும் குறிப்பிட்டுத் தான் ஆக வேண்டும்.
(எனக்குப் பலரின் அறிமுகம் இல்லாததால் பெயர்களை கூற முடியவில்லை. மேலே கூறிய பெயர்களில் ஏதும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.)
புகைப்படங்களைப் பார்க்க இங்கே அழுத்துக. http://img24.imageshack.us/gal.php?g=bloggersmeeting001.jpg

18 பின்னூட்டங்கள்:

படங்களுக்கு நன்றி நண்பரே! என்னிடத்திலும் சில படங்கள் உண்டு அவற்றை மெருகேற்றி நாளை வலையேற்றுகிறேன்.

உணர்வுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..

உங்கள் பதிவுக்கு நன்றிகள்

எல்லோரையும் ஒன்றாக சந்தித்ததில் மகிழ்ச்சியே...

கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :)

என்னங்க கோபி...

வந்தும் கதைக்காம போயிட்டீங்க.... தங்களின் பதிவும் அருமை. வாழ்த்துக்கள்.

பதிவர் சந்திப்பு நன்றாக இருந்தது. பரீட்சைக்கு பின் மீண்டும் பிரமாண்டமான நண்பரை காணக்கிடைத்தது மகிழ்ச்சி. கண்ணா நீரும் என்னருகில் இருந்து இரண்டு வடைக்கு உலை வைக்கவில்லையென நெஞ்சைத்தொட்டு சொல்லும் பார்ப்போம்.

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

// யோ வாய்ஸ் said...
படங்களுக்கு நன்றி நண்பரே! என்னிடத்திலும் சில படங்கள் உண்டு அவற்றை மெருகேற்றி நாளை வலையேற்றுகிறேன்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்து வருக.

// சுபானு said...
உணர்வுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..//
ம்... ம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// வந்தியத்தேவன் said...
உங்கள் பதிவுக்கு நன்றிகள்//
பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த 4 தூண்களுக்கும், இல்லை இல்லை, 4 சிங்கங்களுக்கும் நன்றிகள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// பால்குடி said...
எல்லோரையும் ஒன்றாக சந்தித்ததில் மகிழ்ச்சியே...//
எல்லோருக்கும் இந்த உணர்வே உள்ளது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// ஊர்சுற்றி said...
கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :) //
ஊர் சுற்றாமல் ஓர் உருப்படியான காரியம் செய்த உணர்வு வந்திருக்கிறது அன்றைய சந்திப்பில் கலந்து கொண்டது. ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// மருதமூரான். said...
என்னங்க கோபி...

வந்தும் கதைக்காம போயிட்டீங்க.... தங்களின் பதிவும் அருமை. வாழ்த்துக்கள்.//
முதல் சந்திப்பில் அதிகம் கதைக்க முடியாது தானே?
(சத்தியமா பதிவர் சந்திப்பை பற்றி தான் சொல்றன். எந்த உள்குத்தும் இல்லை)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

// ilangan said...
பதிவர் சந்திப்பு நன்றாக இருந்தது. பரீட்சைக்கு பின் மீண்டும் பிரமாண்டமான நண்பரை காணக்கிடைத்தது மகிழ்ச்சி. கண்ணா நீரும் என்னருகில் இருந்து இரண்டு வடைக்கு உலை வைக்கவில்லையென நெஞ்சைத்தொட்டு சொல்லும் பார்ப்போம்.//
அடப் பாவி...
இந்த அப்பாவிய பாத்து கேக்கிற கேள்வியா இது?
ஒரே வடை... ஒரே கோப்பி... ஒரே பற்றீஸ்...
(ஆப்பு இருக்கு மகனே உங்களுக்கு...)

//Comment deleted
This post has been removed by the author//
யாரையா இது...
போட்ட கருத்துரைய அழிக்கிற பழக்கம் கூடாது... நான் பாவம் தானே???

சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.. நல்ல தொகுப்பு. படங்களுக்கு நன்றிகள்..

// LOSHAN கூறியது...
சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.. நல்ல தொகுப்பு. படங்களுக்கு நன்றிகள்.. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நம் சகோதரர்களின் படங்களை அனுமதி இல்லாமல் தான் போட்டிருக்கிறேன்.
இதுவரை யாரும் தங்கள் புகைப்படத்தை தங்கள் அனுமதி இன்றி பிரசுரித்ததற்காக வழக்குத் தொடரவில்லை...
பார்ப்போம்...