நாட்டில அவனவன் பண்ற கூத்தப் பாத்த நமக்கும் ஏதாவது கூத்துப் பண்ணோணும் எண்டு ஒரு ஆசை வந்திச்சு. சரி புதுவருடம் வர்றதால அதக் காரணமா வச்சுக் கொண்டு எங்கவாவது போகலாம் எண்டு.....நினைச்ச்ச்சன்.... சரி நம்மளால ஐ.பி.எல் பாக்க தென்னாபிரிக்காவுக்கா போக முடியும்? (பணப் பிரச்சினை இல்ல... நமக்கு நிறைய தனியார் வகுப்புக்கள் இருக்கு... அடிக்கடி நிறைய நாள் போகாம விட்டா {சாதாரணமா சொல்றதெண்டா 'இடக்கிட கோயிங், அடிக்கடி கட்டிங்'} ஒருத்தன் குறைஞ்சாலும் பறவாயில்ல எண்டு அடிச்சு கலைச்சிடுவாங்க.)
சரியெண்டு வவுனியாவில அக்கா இருக்கிறா தானே அங்க போவம் எண்டு நான் யோசிக்க முதலே அக்காவே கூப்பிட்டிட்டா.
(நான் வவுனியா போக நினைச்சதுக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், அதையெல்லாம் சொல்லி அரசியல்வாதி ஆக விரும்பேல.)
சரி நானும் போனன்.
நான் போன இராசிக்கு அண்டைக்கு பொலன்னறுவ க்கு கிட்ட எங்கோ ஒரு புகையிரதம் தடம்புரள, நம்மள கல்கமுவ எண்டொரு இடத்தில புகையிரதத்தில இருந்து இறக்கி பேருந்து மூலம் (உள் மூலமா, வெளி மூலமா எண்டு கேக்கப்படாது. பிச்சுப் புடுவன் பிச்சு.) இன்னொரு நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து இன்னொரு புகையிரதத்தில் மதவாச்சி சென்று அங்க பதிவெல்லாம் முடிச்சிற்று அங்கயிருந்து பேருந்து மூலம் வவுனியா போனன்.
எங்க வீடு பிரதான வீதியும் இன்னொரு வீதியும் சந்திக்கும் மூலையில். வலது பக்கமாக 200 மீற்றர் போனால் காமினி மகா வித்தியாலயம். ஒரு தொகை வன்னி சகோதர சகோதரிகள் அங்கு தான் தங்க வைக்கப் பட்டுள்ளார்கள். இடது பக்கமாக 200 மீற்றரில் இணைய மேயும் இடம்.
நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில வச்சாலும் அதின்ர புத்தி மாறுமோ???
அங்க போனதும் இணைய மேயும் இடத்துக்கு போறத பழக்கமாக்கிற்றன்.
ஒருநாள் போய் அவுஸ்ரேலிய தென்னாபிரிக்கா 4ஆவது மற்றும் 5 ஆவது ஒருநாள் போட்டிகளின் ஹைலைட்ஸை (தமிழ்ல என்னெண்டு சொல்றது?) பாத்திற்று வலைப்பூக்கள எல்லாம் மேஞ்சிற்று தற்செயலா நேரத்தப் பா......த்த்தத்தன். 7.45... அடப்படுபாவி வவுனியாவில ஊரடங்கு சட்டமெதுவும் இருக்குமோ தெரியாது எண்டு நமக்கு இருக்கிற கொஞ்ச மூளையும் (கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்றன்... இருக்கு...) நம்மள மேலும் குழப்பி விட்டிற்று. சரியெண்டு கடையில இருந்து வெளில வந்தன்.
வெந்த புண்ணில வேல் அல்லது சிலுவை பாய்ச்சிறது போல வாசலில ஒரு ஆமி மாமா... ஈரக்குலை நடுங்கிறதெண்டா என்னெண்டு அண்டைக்கு தான் தெரியும். குருவி படத்தில 'கோச்சா' எண்ட பெயர கேட்டோண்ண மலேசியாவில ஒருத்தன் நடனம் ஆடுறத யோசிச்சு பாருங்க...
டேய் யார்றா அது... சைலன்ஸ்... அதான் எழுதிக்கிட்டிருக்கிறமுள்ள...
(5 நிமிடம் அமைதியா இருக்கிறன். நீங்களும் 5 நிமிடம் பேசாம இருங்கோ...)
என்ர புண்ணியத்தில அவன் ஒண்டுமெ கேக்கேல... என்னால் 'என்' செயல்... (நான்........கடவுள்...!!!)
நானும் தப்பினமெண்டு நினைச்ச்ச்ச்ச்ச்ச்ச்சன்..... ஒரு பத்து அடி எடுத்து வச்சிருப்பன்... மொத்தம் மூணு பேரு... தங்களால எவ்வளவு முடியுமொ அந்தளவு பாரங்கள முதுகில வச்சுக் கொண்டு கையில சுடுற சாமானையும் ('தோசைக் கல்'லா எண்டு கேக்கிறதுக்கு உதை விழும்... ரொம்பத்தான் நக்கல்...) வச்சுக் கொண்டு நிண்டாங்க. ஒரு முதியவர சோதனை செய்த கொண்டு இருந்தார்கள். வயசு போன ஆளுக்கே சோதனை எண்டா... நமக்கு...???
நாம என்ன தான் அப்பாவி எண்டாலும் 200 கிலோகிறாம் நிறை, 180 சதம மீற்றரில இருக்கிற ஒருத்தன பாத்து யாருமே அப்பாவி எண்டு நம்ப மாட்டாங்க எண்டு எனக்குத் தெரியும். அதுவும் தாடியோட...!!!
அடையாள அட்டை பொக்கற்ல தொட்டுப் பாத்தன்... இருக்கு... காவல்துறை பதிவுத் துண்டு (அதாங்க பொலிஸ் றிப்போட்) இருக்குமோ எண்டு ஒரு சந்தேகம்... பயந்த கொண்டு கிட்ட போக அவங்க எங்கயோ வாய் பாக்க நான் ஓடி வீட்ட போய்ற்றன்...
கதையும் முடிஞ்சு கத்தரிக்காக் கறியும் முடிஞ்சு... ஓடுங்கோ....
3 பின்னூட்டங்கள்:
Bit of funny.
But the way you wrote is very brilliant.
Hi..seems interesting.If you wish To follow this kind of writing ,please read our jaffna tamil writer(now in canada) A.Muthulingam .. here with i've attached a sample of 'கனடாவில் கார்'. See the smoothness of his writing.It may help to make your self sharp more. Just search the google 'அ.முத்துலிங்கம்' you may download the softcopy of his writings..
என் குருவிடம் ஒரு பழக்கம் இருந்தது. அவர் முன்கோபக்காரர்.
கோபம் வந்தால் அதை அடக்கத் தெரியாது. சத்தம்போட்டு ஏசத்
தொடங்கிவிடுவார். இதைத் தடுக்கும் தந்திரமாக காரிலே இருக்கும் சிகரட்
லைட்டரை உள்ளே தள்ளிவிடுவார். அது சூடாகி, சினந்து துள்ளி
வெளியே வரும்வரை வாய் திறக்கமாட்டார். அந்தக் காத்திருத்தலில்
அவர் கோபம் கொஞ்சம் தணிந்துவிடும்.
அன்றும் அப்படித்தான். சிகரட் லைட்டரை உள்ளே தள்ளிவிட்டார்.
அது சிவந்துகொண்டு வரும்போது அவரின் முகத்தின் சிவப்பும் குறைந்
தது.
தினம் தினம் குரு வந்தார். தினம் தினம் சிகரட் கொளுத்தியை
உள்ளே தள்ளினார். தினம் தினம் சிறு சண்டையும் வந்தது.
‘வலது பக்கம் திருப்பவேணும்’ என்றார் குரு.
சிவப்பு விளக்கு எரிந்தது. நான் காரை நிற்பாட்டினேன். பிறகு
மெதுவாக ஊர்ந்து பாதையில் ஒரு வாகனமும் ஆபத்தை தருவதற்கு
தயாராக இல்லை என்பதை நிச்சயித்துக்கொண்டு காரை எடுத்தேன்.
குரு ‘வெரிகுட்’ என்றார்.
அடுத்ததும் வலது பக்கம். குரு ‘வெரிகுட்’ என்றார்.
மீண்டும் வலது பக்கம். பச்சை விழுந்துவிட்டது. நான் காரை
நிறுத்தி, மெதுவாக இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு, ஊர்ந்தேன்.
‘அண்ணை, ஏன் காரை நிறுத்திறியள். உங்களுக்கு பச்சை
போட்டிருக்கிறான். எடுங்கோ, எடுங்கோ’ என்றார்.
‘குருவே, நான் பரீட்சைக்கு போகும்போது பச்சை விளக்குக்கும்
இப்படி கவனமாக எடுத்தால் இன்னும் அதிக மார்க்Š அல்லவோ
போடுவான்’ என்றேன்.
குருவின் முகம் கடுகடுத்தது. பாடம் அத்துடன் நிறுத்தப்பட்டது.
நாலு நாள் பாடம் எடுக்கவும் மறுத்துவிட்டார்.
மறுபடியும் தயாரிப்பு தொடங்கிய நாள் குருவின் முகத்தில் கல
வரம் மறைந்து, சாந்தம் வெளிப்பட்டிருந்தது. நான் ஒரு பட்சி செய்வது
போல வாயை திறந்தேன்.
‘குருவே, எனக்கு ஒரு ஐயம்?’
‘கேளுங்கோ, உங்களுக்கு உடம்பு முழுக்க ஐயம்தானே’ என்றார்.
‘பெரிய ட்ரக் வந்தால் அவைக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு பாதசாரி வந்தால் அவருக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு சைக்கிள் வந்தால் அவருக்கு முழு ரோட்டையும் கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு மோட்டார் சைக்கிளுக்கும் முழு ரோட்டும் கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு பŠ வந்தால் அவர் வளைத்து எடுத்துப்போக முன்னுரிமை
கொடுக்க வேண்டும்?’
‘ஓம்.’
‘அதுவும் பள்ளிக்கூட பŠ என்றால் அது நிற்கும்போதுகூட
பின்னால் 20 அடிதூரம் தள்ளித்தான் காரை நிறுத்தவேண்டும்?’
‘ஓம்.’
‘அம்புலன்Š, பொலீŠ, இன்னும் அவசர வாகனங்கள் வந்தால்
ஒதுங்கி கரையில் நிற்கவேண்டும்?'
‘ஓம்.’
‘அப்ப ஏன் மினக்கெட்டு நான் கார் பழகிறன்?’
‘அதுதான் எனக்கும் தெரியவில்லை. உங்களுக்காக 72 பŠ ரூட்கள்
இங்க வைத்திருக்கிறான்கள்.’
நான் சொண்டுகளை மடித்து வாயை மூடினேன்; புத்திசாலித்தனம்
ஒழுகாமல் பார்த்துக்கொண்டேன்.
என்னுடைய பரீட்சை தினம் நெருங்கியது. நான் இப்பொழுது
சிக்னல் விளக்குகளுக்கிடையில் மூச்சுவிடப் பழகிவிட்டேன். இடது
பக்கத் திருப்பம், வலது பக்கத் திருப்பம், வீதி மாறுவது எல்லாம் எனக்கு
தண்ணீர் பட்ட பாடு.
‘நிற்பதுவே, எடுப்பதுவே, ஓடுவதுவே.’ இதுவே என் சிந்தனை.
ஒரு சிறு ஒழுங்கை வழியாக குரு என்னை ஓட்டச்சொன்னார்.
STOP குறியீடு வந்தது. நிதானமாக நின்று குரு சொல்லித் தந்தபடி ‘ஒன்று,
இரண்டு, மூன்று’ என்று எண்ணி பிறகு காரை எடுத்தேன். அடுத்த
STOPல் பாதை ஓவென்று வெறுமையாக இருந்தது. ஒரு குருவியும்
இல்லை. ரோட்டை பார்க்க வாய் ஊறியது. அப்படியே நிற்காமல் எடுத்து
விட்டேன்.
‘என்ன அண்ணை, சோதனை வருகுது, நீங்கள் STOP சைனில்
நிற்காமல் இப்படி எடுக்கிறியள்?’ என்றார் எரிச்சலுடன்.
‘இல்லை, குருவே! ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்லித்தான்
எடுத்தேன். கொஞ்சம் கெதியாய் எண்ணிப்போட்டன்.’
பரீட்சைக்கு இன்னும் ஒரேயொரு நாள்தான் இருந்தது. குருவுக்கு
என் சாரதியத்தில் நம்பிக்கை கிடையாது. எனக்கும்தான்.
அன்றுவரை சொல்லித் தந்த விதிகள் எல்லாவற்றையும் குரு
இன்னொரு முறை ஒத்திகை பார்த்தார்.
கார் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. ஓட்டு வளையத்தை
என்னுடைய கை இறுக்கிப் பிடித்தபடியிருந்தது.
குரு கத்தினார்.
‘ஒழுங்கையை மாத்துங்கோ, இடது பக்கம் திரும்ப
வேணும். இடது பக்கம்.’
‘எந்த இடது பக்கம்? எந்த இடது பக்கம்?’
‘வலது பக்கத்துக்கு எதிர் பக்கம்.’
ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது.
அன்று காருக்கு சிறிய காயந்தான்.
கடைசியில் சோதனை தினம் வந்தது. எனக்கு வாய்த்த பரீட்சைக்
காரர் ஒரு வெள்ளைக்காரர். என் பரீட்சைத் தாளை அட்டையில் செருகிக்
கொண்டு, தன் அங்கங்களை அநாவசியமாக தொந்திரவு படுத்தக்கூடாது
என்பதுபோல மெதுவாக நடந்துவந்தார். காரிலே ஏறியிருந்து கட்டளை
களை கொடுத்தார். அதே சமயம் அவருடைய கடைசி சாப்பாட்டின்
மிச்சங்களை நாக்கினால் துளாவி தேடினார்.
Thanx mate.
I read this book.
An interesting book.
I wrote this article from his book.
http://tamilgopi.blogspot.com/2008/10/blog-post_643.html
கருத்துரையிடுக