க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

அவுஸ்ரேலியாவின் கிளெய்ன் மக்ராத் பந்து வீசிக் கொண்டிருந்த போது மேற்கிந்தியத் தீவுகளின் ராம் நரேஷ் சர்வானிடம் 'லாராவின் அது (மக்ராத் கேட்ட வார்த்தையை தணிக்கை செய்திருக்கிறேன்) எவ்வாறு சுவைக்கும்?' என்றாராம்.
உடனே சர்வான் 'எனக்குத் தெரியாது. அதைப் போய் உன் மனைவியிடம் கேள்' என்றாராம்.
மக்ராத் கோபமுற்று 'நீ என் மனைவியை இனி அவமானப் படுத்தினால் உனது தொண்டையை வெளியே எடுத்து விடுவேன்' என்றார்.

டெரய்ல் குலைமான் என்பவர் துடுப்பெடுத்தாட ஆடுகளத்திற்கு வந்தார். உடனே ஷேன் வோண் அருகில் போய் 'உன்னை அவமானப்படுத்த 2 வருடங்களாக காத்திருந்தேன்' என்றார்.
உடனே குலைமான் 'அந்த 2 வருடங்களையும் சாப்பிடுவதிலேயே செலவழித்திருக்கிறாய் போலிருக்கிறதே' என்றார்.

பரோர் என்பவர் துடுப்பெடுத்தாட ஆடுகளம் வந்தார். முதலாவது பந்தை ஆட முயன்றார். ஆனால் பந்து அவர் துடுப்பில் படவில்லை.
இரண்டாவது சிலிப் இல் நின்ற மார்க் வோ 'ஓ! எனக்கு ஞாபகம் இருக்கிறது. சில ஆண்டுகளாக அவுஸ்ரேலியாவில் நீ எதற்கும் உபயோகமற்றவனாக இருந்தாய். இப்போது அதைவிட மோசம்' என்றார்.
உடனே பரோர் திரும்பி 'ஆம். அது நான் தான். அத்தோடு நான் அங்கே இருந்தபோது முதிய, அழுக்கான, வடிவில்லாத நடத்தை கெட்ட பெண்ணோடு திரிந்தாய். இப்போது அவளையே நீ திருமணம் புரிந்து விட்டாயாமே' என்றார் அமைதியாக.

கிளெய்ன் மக்ராத் சிம்பாப்வேயின் கடைசி துடுப்பாட்ட வீரருக்கு பந்து வீசிக் கொண்டிருந்தார். ஆனால் பிரென்ட்ஸால் பந்துக்கு கிட்டவே துடுப்பை கொண்டு போக முடியவில்லை.
எரிச்சலடைந்த மக்ராத் 'ஏன் நீ இவ்வளவு பருத்த உடலுடையவனாக இருக்கிறாய்' என்றார்.
உடனே பிரென்ஸ் 'ஏனென்றால் ஒவ்வொரு முறையும் உன் மனைவியோடு நான் காதல் புரியும் பொழுதும் உன் மனைவி எனக்கு பிஸ்கற்றுக்களை கொடுப்பது வழக்கம். அதனால் தான்' என்றார்.

அவுஸ்ரேலியாவின் மெர்வ் ஹியூஸ் ஐ அடிலெய்ட் இல் நடந்த ஒரு போட்டியின் போது பாகிஸ்தானின் ஜாவிட் மியான்டாட் இருவரும் மோதிக் கொண்ட போது 'பருத்த பேருந்து நடத்துனர்' என அழைத்தாராம்.
சிறிது நேரத்தில் ஜாவிட் மியான்டாட் இன் விக்கெற்றை ஹியூஸ் கைப்பற்றினார். ஜாவிட் மியான்டாட் வெளியேறும் போது ஹியூஸ் சத்தமிட்டார் 'Ticket please'.

ஸ்ரிவ் வோ தனது இறுதிப் போட்டியில் விளையாட ஆடுகளம் வந்தார்.
இலக்குக் காப்பாளரான இந்தியாவின் பார்த்திவ் பட்டேல் 'ஆகவே இது உங்களின் இறுதிப் போட்டி. எங்கே உங்கள் பிரபலமான வார்த்தைச் சண்டைகளை வெளியிடுங்கள் பார்க்கலாம்' என்றார்.
ஸ்ரிவ் வோ அமைதியாக 'எனக்கு மரியாதை செய். நான் எனது முதல் போட்டியில் விளையாடும் போது நீ நப்கின்னோடு தான் இருந்திருப்பாய்' என்றாராம்.

மேற்கிந்தியத் தீவுகளின் கிரெக் தோமஸ் தனது சக வீரரான விவியன் றிச்சட்ஸ் ற்கு உள்ளூர் போட்டியொன்றில் பந்து வீசிக் கொண்டிருந்தார்.
ஓர் அருமையான விலகிச் செல்லும் பந்தொன்று விவியன் றிச்சட்ஸை ஏமாற்றிச் சென்றது.
உடனே தோமஸ் அருகே சென்று 'அது (பந்து) சிவப்பு நிறமானது, கோளமானது, 5.5 அவுன்ஸ் அளவில் பாராமானது' என நக்கல் தொனியில் சொன்னார்.
அதற்கடுத்த பந்தை அரங்கத்திற்கு வெளியே அடித்தார் றிச்சட்ஸ்.
அமைதியாக சொன்னார் ' அது (பந்து) எப்படி இருக்கும் என உனக்குத் தான் தெரியுமே. போ! போய்த் தேடு' என்றார்.

10 பின்னூட்டங்கள்:

மிக சுவராசியமான விஷயங்கள்

நன்றி தோழரே...
இதன் தொடர்ச்சியையும் தொடர்ந்து எழுத நினைத்திருக்கிறேன்.
அதையும் வந்து பாருங்கள்.

பெயரில்லா சொன்னது…

too much spelling mistakes. please correct it.

Overall its exciting.

Bro Anonymous!
Please let me know the mistakes. I couldn't find anything.
Mail me at kanagagopi@gmail.com

பெயரில்லா சொன்னது…

Great article friend.

Thank you anony...

சுவாரசியமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி

நன்றாக இருக்கிறது..

எழுத்து பிழை எல்லாம் இல்லை.. உங்கள் இலங்கை தமிழ் வழக்கு அந்த நண்பருக்கு புரியாமல் இருந்திருக்கலாம்..

தொடருங்கள்.

// லோகு கூறியது...
நன்றாக இருக்கிறது..

எழுத்து பிழை எல்லாம் இல்லை.. உங்கள் இலங்கை தமிழ் வழக்கு அந்த நண்பருக்கு புரியாமல் இருந்திருக்கலாம்..

தொடருங்கள்.//

அப்படியும் இருக்கலாம்...
இன்ரெனெற் எக்ஸ்புளோரர் 8 இல் தமிழ் எழுத்துக்கள் சிதைந்து தெரிவதாக நண்பன் சொன்னான். சிலவேளை அதுவாகவும் இருக்கலாம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அட! சுவாரஸ்யம்.