க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

வரிசை விதி-
நீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால் நீங்கள் விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும் வரிசையை விட வேகமாக நகரும்.

தொலைபேசி விதி-
நீங்கள் தற்செயலாக பிழையான இலக்கத்தைச் சுழற்றினால் ஒரு போதும் அந்த இலக்கம் வேறு அழைப்பில் இருக்காது. உடனடியாகவே உங்களுக்கு இணைப்புக் கிடைத்து விடும்.

இயந்திர பழுதுபார்ப்பு விதி-
உங்கள் கைகள் முழுவதும் கிறீஸ் பட்ட பின்னர் உங்கள் முதுகு அரிக்கத் தொடங்கும்.

தொழிற்சாலை விதி-
நீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும் கருவியும் எப்போதுமே எடுக்க முடியாத ஒரு இடத்தில் உருண்டு சென்று தஞ்சமடைந்திருக்கும்.

பொய்க்காரண விதி-
நீங்கள் வேலைக்கு பிந்தி வந்ததற்கு காரணம் உங்கள் வாகன ரயர் ஒட்டையானது என நீங்கள் உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களாயின் அடுத்த நாள் உண்மையாகவே உங்கள் ரயர் ஓட்டையாகும்.

குளிப்பு விதி-
நீங்கள் குளிக்கத் தொடங்கி உங்கள் உடல் முழுவதும் நீரால் நனைந்த பின்னர் உங்கள் தொலைபேசி சிணுங்கும்.

சந்திப்பு விதி-
உங்களுக்கு தெரிந்த ஒருவரை சந்திப்பதற்கான நிகழ்தகவானது அந்த நபர் உங்களை யாரொடு சேர்த்து காணக் கூடாது என நினைக்கிறீர்களோ அவரோடு இருக்கும் போது அதிகம்.

வெளிப்படுத்துகை விதி-
ஒரு இயந்திரம் தொழிற்படவில்லை என ஒருவருக்கு நிரூபிக்க முற்படுகையில் அந்த இயந்திரம் தொழிற்பட ஆரம்பிக்கும்.

திரையரங்க விதி-
நீங்கள் திரையரங்கில் வாசல் ஓரத்தில் அமர்ந்திருக்கையில் உங்கள் வரிசையில் கடைசியாக ஓரத்தில் இருப்பவர்கள் அனைவரும் படம் ஆரம்பித்து நீங்கள் இரசிக்க ஆரம்பித்த பின்னரே வருவார்கள்.

கோப்பி விதி-
உங்கள் அலுவலகத்தில் சூடான கோப்பி ஒன்றை பருக அமரும் தருணத்தில் தான் உங்கள் முதலாளி உங்களை அழைத்து பெரிய வேலையொன்றை தருவார். கோப்பி சூடாறி குளிரும் வரையாவது அந்த வேலை கட்டாயம் நீடிக்கும்.

6 பின்னூட்டங்கள்:

எல்லாமே அருமை நண்பா..
நானும் முயற்சிக்கிறேன்:
பேருந்து நிறுத்த விதி: நீங்கள் செல்ல வேண்டிய திசைக்கு எதிர் திசையில் தொடர்ந்து பேருந்துகள் வந்து கொண்டிருக்கும்..

நன்றி சகோதரா...
ம்..
நீங்கள் சொன்னதும் நன்றாக இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டாஸ்மாக் விதி:
நீங்கள் போகும்போதுதான் உங்க பிராண்ட் ஸ்டாக் காலியாகிருக்கும்.

பிகர் விதி:

நீங்கள் லைக் விடும் பெண் உங்களை லைன் அடிக்காது..அவளின் தோழி உங்களை லைன் அடிப்பார்...அனேகமாக அது ஒரு மொக்கை பிகராக இருக்கும்.

பரிட்சை விதி;
இந்த கேள்வி வராது என்று படிக்காமல் விட்டவை...முதல் கேள்வியாக வந்து நிற்கும்..

உண்மையிலேயே நன்றாக இருந்தது

//டாஸ்மாக் விதி:
நீங்கள் போகும்போதுதான் உங்க பிராண்ட் ஸ்டாக் காலியாகிருக்கும்.

பிகர் விதி:

நீங்கள் லைக் விடும் பெண் உங்களை லைன் அடிக்காது..அவளின் தோழி உங்களை லைன் அடிப்பார்...அனேகமாக அது ஒரு மொக்கை பிகராக இருக்கும்.

பரிட்சை விதி;
இந்த கேள்வி வராது என்று படிக்காமல் விட்டவை...முதல் கேள்வியாக வந்து நிற்கும்..//
நன்றி நாஞ்சில் பிரதாப்...
நீங்கள் அருமையாக சொன்னீர்கள்...

//பனையூரான் கூறியது...
உண்மையிலேயே நன்றாக இருந்தது//

நன்றி பனையூரா...