க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ரைற்றானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால் என்னென்ன அறிக்கைகள் கிடைக்கப்பெறும் எனப் பாருங்கள்...

அமெரிக்கா...
சுதந்திரத்தை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பலொன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். அவர்களுக்கு உரிய பாடத்தை புகட்டுவோம். பின்லேடனுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். தேடி அழிப்போம். அல்-குவைதா வலையமைப்பை எங்கிருந்தாலும் தேடி அழிப்போம்.

இங்கிலாந்து...
நான் அமெரிக்க ஜனாதிபதியுடன் கதைத்துள்ளேன். மூழ்கிக் கொண்டிருக்கும் ரைற்றானிக், முஸ்லிம் தீவிரவாதிம் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். இதை முழு உலகமும் எதிர்க்க வேண்டும்.

இஸ்ரேல்...
இது ஹமாஸ் மற்றம் பிற தீவிரவாத வலையமைப்பால் செய்யப்பட்டதென்பதற்கான ஆதாரம் உள்ளது. இது விபத்து அல்ல. ஹமாஸ் தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே இடம்பெற்றது. இப்போது நாங்கள் பலஸ்தீனர்கள் மீது ஊரடங்கை பிறப்பிப்போம், கைது செய்வோம், அடிப்போம், கொலை செய்வோம், அவர்களின் வீடுகளை தரைமட்டம் செய்வோம்.

இந்தியா...
இது பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைமையில் அந்த நாட்டு தீவிரவாதிகளின் நடவடிக்கை தான். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கடவுச் சீட்டுக்களை கண்டெடுத்துள்ளோம். அத்தகைய நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இலங்கை...
விடுதலைப் புலிகளை அழித்து விட்டாலும், சிலர் பதுங்கி இருக்கின்றனர். அவர்களின் சர்வதேச வலைப்பின்னலின் செயற்பாடே இது. இந்த சம்பவம் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிக்க சர்வதேச நாடுகள் எமக்கு உதவ வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை...
ஓ! இது நடந்து விட்டது. இது நடந்தமைக்காக நாங்கள் வருந்துகிறோம்.


கப்பல் பயணிகள்...
ஐயோ... காப்பாற்றுங்கோ... அது ஓர் பனிப்பாறை... காப்பாற்றுங்கோ... காப்பா..

10 பின்னூட்டங்கள்:

நல்ல கர்ப்பனை

// ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல கர்ப்பனை //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஐயா சாமி எப்படி ஐயா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.

போட்டு தாக்கிட்டீங்க..

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
ஐயா சாமி எப்படி ஐயா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.

போட்டு தாக்கிட்டீங்க.. //

எங்க பதிவிடேல நிறைய நாளா???
நீங்கள் இரசித்ததில் மகிழ்ச்சி எனக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நல்லா இருக்கு

// ஆகில் முசம்மில் கூறியது...
நல்லா இருக்கு //

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

நல்லா இருக்கு.. ஐநா சபை :) :)

// சயந்தன் கூறியது...
நல்லா இருக்கு.. ஐநா சபை :) :) //

ஆகா... வேட்டு வைக்கிறாங்களே... அதிலி எந்த உள்குத்தும் இல்லை என்பதை அன்பாக தெரிவித்து கொள்கிறேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க. எங்களுக்கும் அந்த ரகசியத்தைச் சொல்லலாமே.

// சந்ரு கூறியது...
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க. எங்களுக்கும் அந்த ரகசியத்தைச் சொல்லலாமே. //
அந்தப் பக்கம் தனியா வாங்கோ சொல்றன்... ஹி ஹி ஹி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.