ஹர்பஜன் சிங் தனது வலைப்பதிவில் பெங்களூர் சம்பவம் தொடர்பாக எழுதியதை இங்கு மொழிமாற்றம் செய்ய முற்படுகிறேன்.
இங்கு காணப்படும் கருத்துக்கள் அப்படியே ஹாபஜன் கூறுவதாகவே கூறுகிறேன்.
ஹர்பஜனின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல http://bhajji.bigadda.com என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
சரி...
இனி ஹர்பஜன் சொல்வது இது தான்...
நாங்கள் இப்போது கொழும்பில் இருக்கிறோம். இங்கு வந்தது முதல் என்மீது எழுப்பப்படும் ஒரே கேள்வி 'பெங்களூர் விமான நிலையத்தில் நடந்தது என்ன?' என்பது தான்.
ஊடகங்களைச் சேர்ந்த எனது நண்பர்கள் பெரும்பாலான நேரங்களில் செய்திகளுக்காக, ஒளிப்படங்களுக்காக முட்டி மோதுவது குறிப்பிடத்தக்கது, முக்கியமாக புகைப்பிடிப்பு (கமரா மென்) நண்பர்கள். கமரா நண்பர்களின் கமராக்களின் ஓரங்கள் பலவகையான நபர்களை பல்வேறு வகையான நேரங்களில், அவை விமானநிலையங்களில் என்ன ஊடகவியலாளர் சந்திப்புகளில் என்ன இடிப்பதை அல்லது முட்டுவதை கண்டிருக்கிறோம். இதை நிறையப் பேர் ஒத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். நீங்கள் வடிவாகப் பார்ப்பதற்கு எனது வலைப்பதிவோடு அதன் வீடியோ வடிவத்தை, உண்மையில் என்ன நடந்தது என்பதைக் காட்டும் வீடியோ வடிவத்தை, இணைத்திருக்கிறேன். அத்தோடு உங்களுக்கு வடிவாக புரிவதற்காக நான் ஓர் விளக்கத்தையும் இங்கே வழங்குகிறேன்.
அந்த வீடியோவிற்கான விளக்கம்...
நான் காரிலிந்து இறங்கி எனது பொதிகள் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் ஆயதம் தரித்த CISF பாதுகாவலர்கள் ஊடகத்தினரிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் எம்மை பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.நான் காரை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தென், நீங்கள் வடிவாகப் பார்க்கலாம் எனக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை பற்றி எதுவுமே தெரியாமல் தான் நான் நிற்கிறேன். புகைப்பிடிப்பாளர் என்னை நோக்கி ஓடிவருவதை நீங்கள் பார்க்கலாம். அவர் வந்த வலிமையாலும், வேகத்தாலும் அவரது புகைப்படக் கருவி எனது தலையை தெளிவாகவே இடித்தது. அது மெதுவாக தொடுவது போலல்லாமல் எனது தலையிலும், தொப்பியிலும் ('சிங்'குகள் அணியும் பற்கா தொப்பி) பலமாக இடித்தது.
எனத தலை அல்லது தொப்பியில் அது (கமரா) இடித்தது என்பதில் நான் திடமாக உள்ளேன். மில்லியன் கணக்கானோரும் அவ்வாறே உணர்வர் என நம்புகிறேன். எனது தலையில் என்ன இடிக்கிறது என்று தெரியாமல் இச்சையில் செயற்பாட்டால் (கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாக நடைபெறுகின்ற) என்னை இடித்த பொருளை தள்ளினேன், அதன் பின்னரே என்னை இடித்ததும், நான் தள்ளியதும் புகைப்படக் கருவி என உணர்ந்தேன். என்னைச் சுற்றி தெளிவாக பாதுகாப்பு கவசம் இருந்தது. அந்த புகைப்படப் பிடிப்பாளர் அந்த கவசத்தை உடைத்தார். CISF பாதுகாவலர்களும், அதிகாரிகளும் புகைப்பிடிப்பாளர் தனது புகைப்பிடிப்புக் கருவியால் என்னை இடிக்கும் தவறைச் செய்ததால் புகைப்பிடிப்பாளரை தள்ளிச் செல்லுமாறு கோரியதை கண்டேன்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் புகைப்படப் பிடிப்பாளரை அறையவோ, அடிக்கவோ இல்லை.இனியெப்போதும் செய்யவும் போவதில்லை. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அவர்களுடனான எனது உறவு, நடத்தைகள், ஒத்துழைப்புகள் நட்பு ரீதியாகவும்,மதிப்பு வாய்ந்ததாகவும் இருந்ததை இரண்டாம் பட்சமாக எடுப்பார்கள்.
நான் எப்போதும் ஊடகங்களையும், நாட்டிற்கு செய்திகளை வழங்க வேண்டும் என்ற பின்வாங்காத தன்மையையும் மதிக்கிறேன். அவர்கள் தான் இரசிகர்களோடு எம்மை தொடர்புபடுத்துகிறார்கள்.
தற்போதைய நிலையில் மற்றைய எல்லாவற்றையும் விட எனது அணிக்கு பங்களிப்பு வழங்குவதும், அணியை முதலிடத்திற்கு கொண்டு செல்வதுமே எனது மிக மிக முக்கிய முக்கியமானது.
வருங்காலங்களில் உங்கள் ஆதரவுக்கும் வேண்டுகிறேன். அணி முதலிடம் பெறுவதற்காக எனக்காகவும்,அணிக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
கொழும்பிலிருந்து பஜ்ஜி (Bhajji)
என்னைப் பற்றி
பிச்சு உதறினது
-
▼
2009
(76)
-
▼
செப்டம்பர்
(12)
- மற்றவர்களை எரிச்சல்படுத்துவது எப்படி...
- மறத்தமிழர்கள் ஏன் தீவிரவாதியாக ஆக முடியாது? (நகைச்...
- பில்கேட்சின் பிழைகளில்லாத முதல் உற்பத்தி....
- மதத் திணிப்புகள் கெளரவமான வடிவில்...
- சர்தார் நகைச்சுவைகளைப் பார்த்து சிரிப்பவரா நீங்கள்???
- அடடே... நானும் பள்ளிக்கூடம் போனன்... (தொடர் விளை...
- நம்மகிட்ட தேவதையா??? (தொடர் விளையாட்டு...)
- சச்சின் ரொம்ம்ம்ம்ப நல்லவரு....
- பெங்களூர் சம்பவம் தொடர்பாக ஹர்பஜனின் வலைப்பதிவு...
- என்னது ரைற்றானிக் மூழ்கிற்றா?????
- பணக்காரர்களின் மனைவிமார் பொதுவாக ஏன் அழகாக இருப்ப...
- சொத்தி ரீ.வி...
-
▼
செப்டம்பர்
(12)
மூஞ்சிப் புத்தகம்
நல்லவர் பட்டாளம்....
மொக்கைகளில் எத்தனை வகைகளப்பா..... சபா...
அச்சுவலை
(2)
அப்ரிடி
(1)
அழகு
(1)
அழகு.
(1)
அழைப்பிதழ்.
(1)
அறுவை
(4)
அனுபவம்
(1)
ஆண்கள்
(1)
இராஜினாமா
(1)
இருக்கிறம்
(3)
இலங்கை
(5)
உள்குத்து
(1)
எரிச்சல்
(1)
ஐ.பி.எல்
(1)
ஒபாமா
(1)
ஒருவரி
(1)
ஒருவரி.
(1)
ஓடுதல்
(2)
கடவுள்
(2)
கடுப்பாக்குதல்
(1)
கணிப்பு
(1)
கப்பல்
(1)
கரச்சல்
(1)
கருத்து
(1)
கல்யாணம்
(1)
கவலை
(1)
களவு
(1)
காதல்
(2)
காதல
(1)
கார்
(1)
கிரபிக்ஸ்
(1)
கிறிக்கெற்
(6)
சக்தி ரீ.வி
(1)
சச்சின்
(1)
சண்டை
(2)
சந்திப்பு
(5)
சமயம்
(1)
சர்தார்
(1)
சாய்பாபா
(1)
சிந்தனை
(1)
சிரிப்பு
(1)
சிலெட்ஜிங்
(2)
சீரியஸ்
(1)
சும்மா
(1)
சுயதம்பட்டம்
(1)
சுயம்வரம்
(1)
சோதிடம்
(1)
தமிழ்
(3)
தமிழர்
(1)
தனிநாடு
(1)
தாடி
(1)
திணிப்பு
(1)
திருமண அழைப்பிதழ்
(1)
திருமணம்
(3)
திறமை
(2)
தினக்குரல்
(1)
தீவிரவாதம்
(1)
தேவதை
(1)
தொடர் விளையாட்டு
(1)
தொடர்பதிவு
(2)
தொலைக்காட்சி
(1)
நக்கல்
(1)
நகைச்சுவை
(18)
நட்சத்திரம்
(1)
நடைமுறை
(1)
நண்பர்
(1)
நம்பிக்கை.
(1)
நல் வாக்கியங்கள்
(1)
நாய்
(1)
நியூட்டன்
(1)
நேர்மை
(1)
பச்சிளம் பாலகர்
(1)
படங்கள்
(6)
பணக்காரர்
(1)
பணம்
(1)
பதிவர்
(11)
பதிவர் சந்திப்பு
(3)
பதிவர் சந்திப்பு படங்கள்
(2)
பம்பல்
(13)
பல்கலைக்கழகம்
(1)
புதுமை
(1)
பெண்கள்
(2)
மக்ராத்
(1)
மகாத்மா காந்தி
(1)
மன அழுத்தம்
(1)
மனம்
(1)
மனைவி
(3)
முயற்சி
(1)
மொக்கை
(9)
யாழ்தேவி
(2)
ரைற்றானிக்
(1)
லாரா
(1)
வலைப்பயிற்சி
(1)
வாடிக்கையாளர் சேவை
(1)
வாழ்க்கை
(1)
வானொலி
(1)
விவாகரத்து
(1)
வீண்
(2)
வெறுப்புக்கள்
(1)
ஹர்பஜன்
(1)
cricket
(2)
funny
(1)
gif
(1)
Sledging.
(3)
word exchange.
(1)
தமிழ்
பதிவிட்ட வகைகள்:
பெங்களூர்,
விமான நிலையம்.,
ஹர்பஜன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
16 பின்னூட்டங்கள்:
நானும் எப்படி பாஜிக்கு திட்டலாம் என தான் யோசித்திருந்தேன். இன்று தான் அதற்கு சரியான வாய்ப்பு அமைந்துள்ளது.உங்களை திட்டினால் அது பாஜியை திட்டியதாக ஏற்று கொள்ளலாமா?
(விருதுக்கு வாழ்த்துக்கள்)
என்ன ஆளப்பா நீங்கள், இதனையே ஹர்பஜன் உங்கள் வலைக்கு தந்த பேட்டியாக போட்டுவிட்டு ஒரு ஓரத்தில் நன்றி ஹர்பஜனின் வலை எனப்போட்டிருக்கலாம். உண்மையாக அந்த வலை பஜ்ஜிதான் எழுதுகிறாரோ ஏனென்றால் அவருக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது.
ஏதாவது பிரச்சினையில மாட்டாட்டா இவங்களுக்கெல்லாம் தூக்கமே வராதா?
எனக்கு அந்தக் கமெரா தலையில் இடித்தது போலத் தெரியவில்லை.
//உண்மையாக அந்த வலை பஜ்ஜிதான் எழுதுகிறாரோ ஏனென்றால் அவருக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது//
அதுதானே?
Good post bro!!
Keep going
கலக்கல், அசத்தல்........... எல்லாம் இருக்கு
தம்பி அந்த கிரிக்கட் வெப்சைட்டை இன்னுமா நீங்க பாக்கிறீங்க. நல்லா டப் பண்ணிறீங்க
// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
நானும் எப்படி பாஜிக்கு திட்டலாம் என தான் யோசித்திருந்தேன். இன்று தான் அதற்கு சரியான வாய்ப்பு அமைந்துள்ளது.உங்களை திட்டினால் அது பாஜியை திட்டியதாக ஏற்று கொள்ளலாமா?
(விருதுக்கு வாழ்த்துக்கள்) //
வாழ்த்துக்களுக்கு நன்றி.
ஆனால் நானொன்றும் ஹர்பஜனின் ஆள் இல்லையப்பா...
வாசித்ததை அப்படியே மொழிமாற்றம் செய்தேன்.
என்னை ஹர்பஜனின் ஆதரவாளராக சித்தரித்ததை கண்டிக்கிறேன் ;)
வருகைக்கும் கருத்தக்கம் நன்றி.
// வந்தியத்தேவன் கூறியது...
என்ன ஆளப்பா நீங்கள், இதனையே ஹர்பஜன் உங்கள் வலைக்கு தந்த பேட்டியாக போட்டுவிட்டு ஒரு ஓரத்தில் நன்றி ஹர்பஜனின் வலை எனப்போட்டிருக்கலாம்.//
எல்லாம் ஒரு தன்னடக்கம் தான்.
ஹி ஹி...
//உண்மையாக அந்த வலை பஜ்ஜிதான் எழுதுகிறாரோ ஏனென்றால் அவருக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. //
எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது, இருக்கிறது.
ஆனால் பிரபலமான இணையத்தளமான rediff.com இல் மேற்கூறப்பட்ட வலைப்பதிவை ஹர்பஜனின் வலைத்தளமாக கூறியிருந்தார்கள்.
சிலவேளை உதவியாளர் யாரும் எழுதுகிறாரோ தெரியவில்லை.
வருகைக்கும் கருத்தக்கும் நன்றி.
//Subankan கூறியது...
ஏதாவது பிரச்சினையில மாட்டாட்டா இவங்களுக்கெல்லாம் தூக்கமே வராதா?//
அது தானே?
//எனக்கு அந்தக் கமெரா தலையில் இடித்தது போலத் தெரியவில்லை.//
எனக்கும் தான். அத்தோடு அவர் வேண்டுஅமன்றே தான் கமராவை தள்ளுவது போல் தெரிகிறது.
ஹர்பஜனின் பேட்டியை போட்டபடியால் நான் அவரின் ஆதரவாளர் என நினைத்து விடாதீர்கள்.
அது சரி, விபத்தில் அகப்பட்டீர்களாமே? இப்போது எப்படி? நலமா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
// கார்த்தி கூறியது...
Good post bro!!
Keep going //
இதை பதிவாக எடுக்க முடியுமா தெரியவில்லை. இன்னொருவரின் பேட்டியை சுட்டு மொழிமாற்றம் செய்தேன் அவ்வளவு தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
// சந்ரு கூறியது...
கலக்கல், அசத்தல்........... எல்லாம் இருக்கு //
Template பின்னூட்டம் தானே?
கலக்குவதற்கும் அசத்துவதற்கும் ஏற்றவாறு நான் எதுவுமே எழுதவில்லையே? வெறும் மொழிமாற்றம் தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
// ilangan கூறியது...
தம்பி அந்த கிரிக்கட் வெப்சைட்டை இன்னுமா நீங்க பாக்கிறீங்க. நல்லா டப் பண்ணிறீங்க //
அண்ணா... தெய்வமே...
யாழ்ப்பாணம் எப்பிடி???
என்ன செய்ய, தமிழினால் யான் பட்ட துன்பம் பதிவு போல ஆகிவிட்டது எனக்கு. ஹி ஹி ஹி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...
நல்லா சுத்துறாங்கய்யா காதுல பூவு.. ஏதோ கடுப்பில நிக்கிறான் அவன்.. நிறைய காசிருந்தால் இப்பிடியான குணங்கள் வரும்.. கண்டுக்கப்டாது.. உந்த மாதரி பேமானிகளை படமெடுக்க செல்லும் உந்த பாப்பராசிகளை சொல்லவேண்டும்..
// புல்லட் கூறியது...
நல்லா சுத்துறாங்கய்யா காதுல பூவு.. ஏதோ கடுப்பில நிக்கிறான் அவன்.. நிறைய காசிருந்தால் இப்பிடியான குணங்கள் வரும்.. கண்டுக்கப்டாது.. உந்த மாதரி பேமானிகளை படமெடுக்க செல்லும் உந்த பாப்பராசிகளை சொல்லவேண்டும்.. //
நீங்க சொன்னா மறு பேச்சு இருக்குமா...
ஆனா ஹர்பஜன் முகத்தில் தெரியும் ஆக்ரோஷம் ஹர்பஜன் வேண்டுமென்று தான் செய்தார் எனக் காட்டிக் கொடுக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
// சந்ரு கூறியது...
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு இங்கு http://shanthru.blogspot.com/2009/09/blog-post_14.html அழைத்திருக்கின்றேன் ஏற்றுக்கொள்ளவும் //
வருகிறேன்...
கருத்துரையிடுக