க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

பள்ளிக் கால நினைவுகளை மீட்டும் இந்த தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த மருதமூரானுக்கும், யோ வாய்ஸ் (யோகா) அவர்களுக்கும் முதலில் எனது நன்றிகள்.

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே யாழ்ப்பாணம் அரியாலையில் தான். அதனால் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஓர் சனசமூக நிலையத்தினர் நடத்திய முன்பள்ளியில் தான் படித்தேன்.
எனக்கு அது பற்றிய ஞாபகங்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசுபெறும் ஓரிரண்டு புகைப்படங்கள் என்னிடம் இருக்கின்றன.
அத்தோடு ஒரு சம்பவத்தை எனது குடும்பத்தினர் அடிக்கடி சொல்வார்கள்.
சிறுவயதில் நான் கெட்டிக்காரனாம். (இப்ப மட்டும் என்னவாம்? ;))
அந்த முன்பள்ளியொன்றில் இடம்பெறவிருந்த கலைநிகழ்வு ஒன்றிற்கு ஆங்கிலப் பாடல் இசைப்பிற்கு என்னைத் தெரிவுசெய்திருந்தார்களாம். நானும் நன்றாக பயிற்சிசெய்து நன்றாக சொன்னேனாம். வீட்டில் எந்தநேரமும் அதை சொல்லிக் கொண்டிருப்பேனாம். ஆனால் திடீரெண்டு எனக்குப் பதிலாக அந்த நிகழ்ச்சியை செய்ய இன்னொரு பெண்ணை (அப்ப சிறுமி...) வேறசில சொல்ல விரும்பாத காரணிகளால் தெரிவுசெய்து பயிற்சி கொடுத்தார்களாம். இதை அறிந்த என் குடும்பத்தினர் முன்பள்ளியில் சென்று விசாரித்தார்களாம். அந்த நேரத்தில் அந்த முன்பள்ளி நிர்வாகிகள் என்னை அந்தப் பாடலை பாடச் சொல்ல நான் ஒருவரி கூட பாடவில்லையாம். அந்தப் பெண் தான் நிகழ்ச்சி செய்தாராம்.
(அந்தப் பெண் வளர்ந்து 10ஆம் ஆண்டில் ஆங்கில வகுப்பிற்கு வந்தபொழுது நடைபெறும் பரீட்சைகளில் எப்பொழுதும் அவரைவிட அதிகமாக, அனேகமாக முழுப்புள்ளி, புள்ளிகள் எடுத்து நான் வென்றது வேறு கதை. ;) )

எனது அண்ணாமார் மூவரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே படித்ததாலும், அவர்களில் இருவர் பல்கலைக்கழகம் சென்றதாலும் (மற்றவர் என்னை விட 3 வயதே மூத்தவர் ஆதலால் தரம் 4 இல் இருந்திருப்பார்) எந்தவித சந்தேககங்களும் இன்றி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் சேர்ந்தேன்.
தரம் ஒன்றிலிருந்து தரம் 11 வரை அந்தந்த வகுப்புகளுக்குரிய சிறந்த வகுப்பில் (Best class) இருந்தேன். (அதைவிட சொல்லுமளவில் எந்த சாதனையும் இல்லை. ;) )

தரம் ஒன்றிலிருந்து பொதுவாக 1ம் பிள்ளையாக வருவேன். இடப்பெயர்வுகளின் பின்னர் மீண்டும் தரம் 2 இல் படித்தேன். இராஜரட்ணம் சேர் எண்டு ஒரு ஆசிரியரிடம் தான் படித்தேன். இடதுகைப் பழக்கமுள்ளவர். நன்றாக நுள்ளுவார். (கிள்ளுதல் என்று சொல்வார்கள் பொதுவாக.)

தரம் 4 இல் எனது சொந்த அக்கா தான் எனக்கு வகுப்பாசிரியை. எல்லோரும் வாசி தானே என நினைப்பார்கள். ஆனால் வகுப்பில் எனக்குத் தான் கூடுதலாக அடிவிழும். அதுவரை முதலாம் பிள்ளையாக வந்த நான் திடீரெண்டு ஒரு தவணையில் 5ம் பிள்ளைக்கு இறங்கினேன்.

அதன் பின்னர் 4, 5 ம் தரங்களில் ரஜ்ஜனி என்ற ஆசிரியை தான் வகுப்பாசிரியை. அச்சுவேலியை சேர்ந்தவர் என நம்புகிறேன். மிகுந்த கடமையுணர்வு உள்ளவர். மேலதிக வகுப்புகள் போட்டு அதற்காக தூரப் பிரதேசத்திலிருந்து வருவார். நான் படித்த ஆசிரியர்களில் மிகுந்த கடமையுணர்வு உள்ளவர்களில் ஒருவர் உன்று அவரை நான் கூறுவேன்.
நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் (முதலாம் பி்ள்ளை. ஹி ஹி...) எனக்கு கண்டிப்பு அதிகம்.
பொதுவாக தரும் வினாக்கள் எல்லாவற்றையும் விரைவாக சரியாக செய்துவிடுவேன்.
ஆனால் 'ஒரு முட்டையை அவிக்க 5 நிமிடம் செலவாகும். 10 முட்டை அவிக்க எவ்வளவு நேரம் செலவாகும்?' என்ற கேள்விக்கு நான் 50 நிமிடங்கள் என எழுதியது ஞாபகம் இருக்கிறது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் எங்கள் பாடசாலையில் 3 பேர் தான் சித்தியடைந்தார்கள்.
சிவரூபன், வைகுந்தன் என்று இருவரை அதிபர் திரு.இராசதுரை வந்து சொன்ன போது நான் சித்தியடையாமல் போயிருவேனோ என்று என் பிஞ்சு மனம் பதறியமை இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
அக்கா அதே பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தபடியால் முடிவுகள் சொன்ன உடனேயே எல்லோருக்கும் ரொபிகள், சொக்லற்றுக்கள் வழங்கியதும் ஞாபகம் இருக்கிறது.

தரம் ஆறிற்கு வந்த பின்னர் 3ம் பிள்ளையாக வந்ததற்கு அப்பா பாடசாலையில் வைத்து என் காதைத்திருகி 'ஏன் 3ம் பிள்ளை?'என கேட்டது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதற்குப் பழிவாங்கும் விதமாக 8ம் தரத்தில் ஒருமுறை 24ம் பிள்ளையாக வந்தேன். 1ம் பிள்ளைக்கும் எனக்குமிடையில் ஒரு 50, 60 புள்ளிகள் தான் வித்தியாசம் இருந்தது. ஆனால் 24ம் பிள்ளை நான்.
அதன் பின்னர் தான் படிப்பில் மீண்டும் கவனம் செலுத்தினேன்.

தரம் ஆறில் கிருஷ்ணானந்தன் (கிருஷ்ணா சேர் எண்டு கூப்பிடுவம்) ஆசிரியர் ஞாபகம் இருக்கிறார். அப்போது இளைஞர். நிறைய ஆக்கத்திறன் (Creativity) உள்ள ஆசிரியர். சுற்றாடல் கற்பித்தார்.
ஜெகநாதன் சேர் ஞாபகம் இருக்கிறார் நன்றாக. சமய ஆசிரியர். மாணவர்களை அடக்குமுறையால் அடக்க மாட்டார் என்பதால் இவரின் பாடநேரத்தில் வகுப்பில் சத்தம் அதிகமாக இருக்கும்.
(தேவாரம் பாடும் கணிப்பீடுகளில் பாடவேண்டியவர் முன்னே இருந்து சும்மா வாயசைக்க அவருக்கு பின்னாலிருந்து இன்னொருவர் பாடி கணிப்பீடுகளில் புள்ளி எடுப்பார்கள். அனேகமாக நான் தான் புள்ளி பதிவேன். 'சேர், பாவமாயிருக்கு சேர் 90 போடுவம்' என்றால் ஓம் என்பார்.)
தரம் 11 இல் இவரின் வகுப்பில் ஒருவன் அதிகமாக சத்தம் போட்டு விசிலடிக்க ஜெகநாதன் ஆசிரியர் முதன்முறையாக கோபப்பட்டு அவனுக்கு தும்புத்தடியால் அடித்ததும் ஞாபகம் இருக்கிறது.

தரம் 11 இல் நாடகமும் அரங்கியலும் கற்பித்த நந்தன் சேர் ஞாபகம் இருக்கிறார். மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பாடங்கள் தவிர வேறு நிறைய விடயங்களைப் பற்றியும் கதைப்போம். தனது அனுபவங்களை எல்லாம் எம்மோடு பகிர்ந்து கொள்வார்.

எனக்கு எல்லோரையும் விட முன்னாள் அதிபர் திரு.க.இராஜதுரை அவர்களைப் பிடிக்கும். அருமையான சிந்தனையாளர். எங்கள் பாடசாலையை கடினமான காலப்பகுதியில் வழிநடத்தி ஏராளமான அபிவிருத்திகளைச் செய்தவர். வழமையைப் போல 'இனந்தெரியாத' ஆயுததாரியால் வீரசிங்கம் மணடப வாயிலில் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னைப் பாதித்த மரணங்களில் இதுவும் ஒன்று.

உயர்தரம் வந்தபின் சிவலிங்கம் ஆசிரியரின் (பெளதிகவியல்) கடமையுணர்வை மனதால் நிறைய முறை பாராட்டியிருக்கிறேன்.

கொழும்பிற்கு 2006ம் ஆண்டு முடிவில் வந்தபின் இங்கே இந்துக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியரையும், இரசாயனவியல் ஆசிரியை செல்வி.அன்ரனிப்பிள்ளை அவர்களின் கடமையுணர்வையும் நினைத்து பாராட்டுவேன்.

காதல் கதைகள் என்று 'பெரிதாக' எதுவும் இல்லை... எனக்குப் பொதுவாக பெண்களை பிடிப்பதி்ல்லை.
ஆனால் இப்போது ஒரு அக்கா இருக்கிறார், அந்த அக்காவை அறிமுகப்படுத்திய உறவும் இருக்கிறது.


உண்மையாக என்னால் என் உணர்வுகள் முழுவதையும் சொல்ல முடியவில்லை. உணர்வுகள் முழுவதையும் சொல்வதானால் 10 பதிவுகளாவது போடவேண்டும். என் பாடசாலையை (யா.ம.க) நான் நேசிக்கிறேன். என் பாடசாலை அனுபவங்கள் ஏராளம்...

ஆனால் பதிவு நீண்டுவிடும் என்பதால் நிறுத்திவிட்டு நண்பர்களை அழைக்கிறேன் தொடர...

ஏற்கனவே நான்கு பேரை தேவதை தொடர் விளையாட்டில் மாட்டிவிட்டதால் எனக்கு யாரைக் குறிப்பிடுவது என்று தெரியவில்லை.
இதுவரை யாரும் இந்த விளையாட்டில் ஈடுபடாதவர்கள் தொடருங்கள்...
நான் வந்து பார்க்கிறேன்...

13 பின்னூட்டங்கள்:

////ஒரு முட்டையை அவிக்க 5 நிமிடம் செலவாகும். 10 முட்டை அவிக்க எவ்வளவு நேரம் செலவாகும்?' என்ற கேள்விக்கு நான் 50 நிமிடங்கள் என எழுதியது ஞாபகம் இருக்கிறது.////

கனககோபி…..

நீங்கள் அப்போதும் ரொம்ப புத்திசாலி என்று விளங்குகிறது. மேற்குறிய தரவிலிருந்து.

அது சரி நீங்கள் உயர்தரத்தில் எந்த தனியார் கல்வி நிறுவனத்தில் படித்தீர்கள். சயன்ஸ் ஹோலிலா? அங்க நல்ல குட்….. கள் எல்லாம் படிச்சவை தானே? அங்கையும் காதலொன்றும் வரைவில்லையோ?

ஏன்னடா இது, எல்லோரும் என்னமாதிரி காதலிக்காத பெடியளா இருக்கிறாங்கள்.

@ மருதமூரான்..

ஆகா...
சயன்ஸ் ஹோலில நான் 'படிக்க' தான் போறனான்...
(நம்புங்கப்பா...)

//நீங்கள் அப்போதும் ரொம்ப புத்திசாலி என்று விளங்குகிறது. மேற்குறிய தரவிலிருந்து.//

அந்தக் கேள்விக்கு மட்டும் தான் எனக்குத் தெரிந்தவரை பிழையாக விடையெழுதினேன்... அதனால் தான் அதை மட்டும் சொன்னன்... ;)

//ஏன்னடா இது, எல்லோரும் என்னமாதிரி காதலிக்காத பெடியளா இருக்கிறாங்கள். //

நான் காதலிக்கவில்லை எண்டு எப்ப சொன்னன்??? ;)

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி...

ம் அருமையாக உங்கள் பாடசாலை அனுபவங்களை எழுதியிருக்கிறீங்கஇ

வாழ்த்துக்கள்

யப்பா கோபி நல்லா சொன்னீங்க ஆனா உங்க (கிளைமாக்ஸ்) உச்சகட்டத்தை சரியா சொல்லலியே . கண்ணா இந்துக்கல்லூரியில் இரசாதயனவியல் முடிந்ததும் நீயும் நானும் சேர்ந்து போட்டிக்கு தூங்குவமே அதைச் சொல்லலையே..
சம்பந்தரின் கேள்விக்கு ஓம் ஓம் போடுவமேi அதைச் சொல்லலியே;; இப்பிடி எக்கச்சக்கமான விசயம் உயர்தரத்தில் இருந்ததே அதைச் சொல்லுங்க ரொம்ப பம்பலா இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை யாழ்ப்பாணத்தில் இருக்கும் மட்டும் கோபி நல்லாத்தான் படிச்சிட்டிருந்தான் என்பதை அறிய முடிந்தது. என்னால் முடிந்தால் நம்ம உயர்தர கனாக்காலங்களை ஒரு பதிவில் அவிட்டு விடுறேன்.

@ ilangan...

அடப்பாவி மக்கா...
இப்பிடியெல்லாமா போட்டுக் குடுக்கிறது?
நான் கஷ்ரப்பட்டு நல்லவன் எண்ட இமேஜ் எடுக்கப் பாக்கிறன்...
விட மாட்டன் எண்டுறானே...

// ilangan கூறியது...
யப்பா கோபி நல்லா சொன்னீங்க ஆனா உங்க (கிளைமாக்ஸ்) உச்சகட்டத்தை சரியா சொல்லலியே . கண்ணா இந்துக்கல்லூரியில் இரசாதயனவியல் முடிந்ததும் நீயும் நானும் சேர்ந்து போட்டிக்கு தூங்குவமே அதைச் சொல்லலையே..
சம்பந்தரின் கேள்விக்கு ஓம் ஓம் போடுவமேi அதைச் சொல்லலியே;; இப்பிடி எக்கச்சக்கமான விசயம் உயர்தரத்தில் இருந்ததே அதைச் சொல்லுங்க ரொம்ப பம்பலா இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை யாழ்ப்பாணத்தில் இருக்கும் மட்டும் கோபி நல்லாத்தான் படிச்சிட்டிருந்தான் என்பதை அறிய முடிந்தது. என்னால் முடிந்தால் நம்ம உயர்தர கனாக்காலங்களை ஒரு பதிவில் அவிட்டு விடுறேன்//

இப்பிடி போகுதா கதை. போடுங்க போடுங்க. நா கூட கோபிய நல்ல பொடியன் என நினைச்சேன்.

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
// ilangan கூறியது...
யப்பா கோபி நல்லா சொன்னீங்க ஆனா உங்க (கிளைமாக்ஸ்) உச்சகட்டத்தை சரியா சொல்லலியே . கண்ணா இந்துக்கல்லூரியில் இரசாதயனவியல் முடிந்ததும் நீயும் நானும் சேர்ந்து போட்டிக்கு தூங்குவமே அதைச் சொல்லலையே..
சம்பந்தரின் கேள்விக்கு ஓம் ஓம் போடுவமேi அதைச் சொல்லலியே;; இப்பிடி எக்கச்சக்கமான விசயம் உயர்தரத்தில் இருந்ததே அதைச் சொல்லுங்க ரொம்ப பம்பலா இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை யாழ்ப்பாணத்தில் இருக்கும் மட்டும் கோபி நல்லாத்தான் படிச்சிட்டிருந்தான் என்பதை அறிய முடிந்தது. என்னால் முடிந்தால் நம்ம உயர்தர கனாக்காலங்களை ஒரு பதிவில் அவிட்டு விடுறேன்//

இப்பிடி போகுதா கதை. போடுங்க போடுங்க. நா கூட கோபிய நல்ல பொடியன் என நினைச்சேன். //

ஆகா...
வதந்திகளை நம்பாதீர்கள்...
இது எதிர்க்ட்சிகளின் திட்டமிட்ட சதி...
நம்ப வேண்டாம்....

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
ம் அருமையாக உங்கள் பாடசாலை அனுபவங்களை எழுதியிருக்கிறீங்கஇ

வாழ்த்துக்கள் //

ஓ! இதுக்கு பெர் தான் அனுபவத்த எழுதிறது எண்டிறதா?
சொல்லவே இல்ல?

இளங்கன் தம்பி ரொம்ப நல்லவரு பொய் எல்லாம் செபல்ல மாட்டாரு. உண்மையா தான் இருக்கும்.

அருமை கோபி!!!

நீங்க மத்திய கல்லூரி மாணவரா?... நான் சென்ஜோன்ஸ் கல்லூரி ! நம்முடைய கல்லூரிகளுக்கிடையயே நடைபெறும் "வடக்கின் மாபெரும் துடுப்பாட்டப் போர்" பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே ???

நாகரட்ணம் சேரைப்பறிற எழுதாமையை வன்மையாக கண்டிக்கிறேன்..

// மாயா கூறியது...
அருமை கோபி!!!

நீங்க மத்திய கல்லூரி மாணவரா?... நான் சென்ஜோன்ஸ் கல்லூரி ! நம்முடைய கல்லூரிகளுக்கிடையயே நடைபெறும் "வடக்கின் மாபெரும் துடுப்பாட்டப் போர்" பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே ??? //

பதிவு நீண்டுவிட்டதால் சப்பென்று முடிக்கவேண்டியதாய்ப் போய்விட்டது.
பரியோவான் கல்லூரியில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்...
முடியுமானால் தனியாக பதிவிடுவோம்...

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி...

// புல்லட் கூறியது...
நாகரட்ணம் சேரைப்பறிற எழுதாமையை வன்மையாக கண்டிக்கிறேன்.. //

கண்டனத்தை ஏற்றுக் கொள்கிறேன்...
அவரிடம் தரம் 9 இல் சிங்களம் படித்தேன்... அதன் பிறகு படிக்கவில்லை...

ஆனா... நீங்க ரொம்ப நல்லவர்அண்ணா...
சுமணதிஸ்ஸி பேக்கரிக்கு முன்னுக்கு சிரிக்கிறது யாரெண்டு தெரியாட்டியும் சிரிச்சதுக்காக திருப்பி சிரிச்ச உங்க நல்ல மனச பாராட்டுறன்...