தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது 'இருக்கிற' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர் போலியான பதிவர்கள் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
சந்திப்பில் ஒல்லாந்தர் காலத்தில் தங்கள் கடைசிப் பதிவை இட்டுவிட்டு இன்றும் தங்களை பதிவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அழைத்துக் கொள்ளும் யோ என்று கத்தும் பதிவரும், பிரபலமான தொடரூந்துச் சேவையொன்றை நடத்துபவர்களில் ஒருவரும், கிங்கொங் பதிவரும் முன்னாள் பதிவர்கள் என்ற வகையில் கலந்து கொண்டார்கள்....
இவர்களைத் தவிர எழுமாற்றாக அறுவடை செய்பவர்களை அறுவடை செய்யாமல் அடித்துத் துரத்திய படுபாவிப்பதிவரும், அடிக்கடி ருவிற்றரில் இருப்பவர்களை மொக்கையர்கள் என்று அழைத்துவிட்டு பேஸ்புக்கில் நண்ப'னு'டன் (அப்படித் தான் சொல்லிக் கொள்கிறார்கள்) அரட்டையடிக்கும் இளமைப்பதிவரும், பஞ்சாப்பில் பிரீட்டி ஜிந்தா என்ன செய்கிறார் என்றும் அவர் தனது விருப்புக்குரிய விசயமுள்ள நடிகரோடு சோடி சேர வாய்ப்புக்கள் உள்ளதா என்று ஆராய்ச்சி செய்யும் மதிப்புக்குரிய பதிவரும், பழைய காலப் பெட்டிகளில் பதிவிடும் மற்றும் தனது புதியவகைத் தலைமயிர் ஸ்ரைலை நல்லாயிருக்கு எண்டு மூடநம்பிக்கையில் திரியும் பதிவரும், இவரோடு கொள்கையில் (முக்கியமாக சினிமாவில்) நன்றாக ஒத்துப் போகும் வவுனியாவை விரும்பும் பதிவரும், படங்களுக்கு கொமன்ற் போட்டு ஆப்பு வைக்கும் மூன்று கோணத்திலுள்ள மலைப் பதிவரும், கிங்கொங் பதிவரால் மொக்கைக் கவிஞர் என பாராட்டப்பட்டதால் அடிக்கடி கவிதைகளை எழுதிவரும் வைத்தியப்பதிவரும், தமிழையும் விசயமானவரையும் விரும்பும் புயலை, காற்றை வெறுக்கும் பதிவரும் கலந்து கொண்டனர்.
சந்திப்பு நடைபெற்ற இடத்தில் எலிகள் காணப்படும் என்ற பயத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்த ஆ!ஸ்கீறீன் என்று கத்தும் பதிவருக்கு சந்திப்பில் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
உம்பா, மாடு, பையன், சாராயம் என்று அடிக்கடி சொல்லும் 'பொறிமுறைப்' பதிவரும் அவரது தோட்டம் செய்யும் அண்ணாவும் சற்றுப் பிந்தியே சந்திப்பில் கலந்து கொண்டாலும் பதிவர்களுக்கு விளங்காத நிறைய விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.
சந்திப்பில் முதலில் சீரியஸ் பதிவுகளை எழுதுவது எப்படி என்று எழுமாற்று அறுவடையை தடுத்த படுபாவிப் பதிவர் விளக்கமளித்தார். எந்த விடயத்தையும் சீரியஸாக எடுக்க வேண்டும் என்றும் வாழ்க்கையில் சீரியஸாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தான் சிறிது காலத்துக்கு முன்னர் எழுதிய மொக்கைப் பதிவொன்றிற்கு போதிய வரவேற்பு இல்லை என்று சொல்லி விம்மி விம்மி அழுத படுபாவிப் பதிவரை தாடியை விரும்பும் பேஸ்புக் பதிவர் தேற்றினார். அத்தோடு அனைவரும் படுபாவிப் பதிவரை மொக்கைப் பதிவுகளையும் அவ்வப்போது எழுதுமாறும் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் எழுந்த பிரீட்டி ஜிந்தாவை விரும்பும் பதிவர் பயனேயில்லாமல் பதிவெழுதுவது எப்படி என்று விளக்கமளித்தார். சமூகத்துக்கு வேண்டியதை பதிவர்கள் ஒருபோதும் எழுதக்கூடாது என்றும் பதிவர்கள் சுயத்தை இழந்தாலே அவ்வாறு பிரயோசனமில்லாமல் எழுதமுடியும் என்றும் கருத்துத் தெரிவித்தைதை கிங்கொங் பதிவர் விழுந்து விழுந்து வரவேற்க முயன்றதால் அப்பகுதியில் நிலநடுக்க, சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அத்தோடு மொக்கைப் பதிவுகள் எழுதவே கூடாது என்றும் சீரியஸானவற்றையே எழுதவேண்டும் என்று விளக்கமளித்தார்.
அடுத்தாக ஆண்களும் பதிவுலகமும் என்ற தலைப்பில் பேஸ்புக் புகழ் இளமைப் பதிவர் உரையாற்றினார். பதிவுலகத்தில் ஆண்களுக்கு இருக்கும் வரவேற்பைவிட பெண்களுக்கு வரவேற்புகளும், பின்னூட்டங்களும் அதிகமாகக் கிடைக்கின்றன என்று கூறிய இவர் காதல் நல்லது என்றும் அதில் தனக்கு அனுபவமே இல்லை என்றும் நகைச்சுவைகளை அள்ளிவீசினார்.
தான் தனது ஒவ்வொரு பதிவிலும் முழுமையாக ஆடையணிந்த ஆண்களின் புகைப்படங்களை இடுவதன் மூலம் ஆணியக் (பெண்ணியத்துக்கு எதிர்ச் சொல்லாம்) கருத்துக்களைப் பரப்புவதாகவும் பெருமையுடன் கூறிக் கொண்டார். அததோடு தான் இன்று பழைய ரீ-சேட்டை அணிந்து வந்தது ஆண்கள் சிக்கனமானவர்கள் என்ற கருத்தை விளங்கப்படுத்துவதாகவும் கூறிக்கொண்டார்.
பேஸ்புக் பதிவர் சீரியஸாய்க் கதைத்ததால் அனைவரும் கடுப்பாகியதால் அனைவருக்கும் சூட்டுநாயும், பீச்சாக்களும் சாப்பிட வழங்கப்பட்டதோடு வைன், ஜின், விஸ்கி உட்பட்ட எனக்குப் பெயர் தெரியாத இன்னோரன்ன குடிபானங்களும் வழங்கப்பட்டன.
வழங்கப்பட்ட சூட்டுநாய்களையும், பீச்சாக்களையும் தாங்களே வீட்டில் தயாரித்ததாக சாராயப் பெயருடைய சகோதரரர்கள் கருத்துத் தெரிவித்ததால் அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
வழங்கப்பட்ட விஸ்கி, வைன் போன்றவற்றை தாங்களே காலைப்பயன்படுத்தி தயாரித்ததாக பெட்டிப்பதிவரும் இன்னும் சிலரும் தெரிவித்ததைத் தொடர்ந்து பலருக்கு ஏற்பட்ட வாந்திகளை (வாந்தி தான். எழுத்துப்பிழை எதுவும் இல்லை) அடக்கிக் கொள்ள புத்திசாலியான பேஸ்புக் பதிவர் தேசிக்காய் வழங்கி ஏற்படவிருந்த அனர்த்தத்தைத் தவிர்க்க பெரிதும் உதவினார்.
இதன்பின்னர் கூகுள் குழுமத்தை பயனில்லாமல் எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பெட்டிப் பதிவர் விளங்கப்படுத்தினார்.
தான் குழுமத்தை சிரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், அதுவே சிறப்பானது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு பாரம்பரிய உபகரணங்களை இளைய சமுதாயம் மறந்துவருவதால் அவற்றை இளைய சடுதாயத்திற்கு ஞாபகப்படுத்த புதிய கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு தான் கம்பஸ்ஸில் வாளி போடுவதாக வெளிவரும் தகவல்கள் பொய்யானவை என்றும் யாரும் அதைப் பற்றி குழுமத்தில் வாயைத் திறக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். அப்படிச் செய்யின் அவர்களுக்கு கறுத்த வான் அனுப்பப்படும் என்று மிரட்டினாலும் எழுந்த கிங்கொங் பதிவர் 'விம் இருக்கப்பயமேன்?' என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டார்.
இடையே எழுந்த படுபாவிப்பதிவர் தான் கணக்குவிடுவதில் வல்லவர் என்றும் தான் தரம் 6 இல் கணித பாடத்துக்கு 53 புள்ளிகளைப் பெற்றேன் என்றும் அதனால் பதிவர் சந்திப்புத் தொடர்பான கணக்கு விடுவதைத் தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதன்பின்னர் இறுதி அம்சமான பின்னூட்டங்கள் பற்றிய கலந்துரையாடலை கிங்காங் ஆரம்பித்துவைத்து தான் அதிகமாக பின்னூட்டுவதை விரும்புவதில்லை என்றும் ஒரு பதிவுக்கு தலா ஒவ்வொரு பின்னூட்டம் மட்டுமே இடுவதை வலியுறுத்துவதையும் கேட்ட பெட்டிப்பதிவர் கடுப்பாகி கிங்கொங் பதிவருக்கு அடிக்கச் சென்றதோடு தன்னை இவர் ஒரு குழுவோடு ஓட ஓட விரட்டி 405 பின்னூட்டங்கள் போட்டதாகவும் இவர் பின்னூட்டமிடுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
எனினும் கோபத்தோடு எழுந்த பேஸ்புக் பதிவர் தனது பதிவுகளை விட தனது தளத்தில் பின்னூட்டங்களிற்கே அதிக வரவேற்பு இருப்பதாக ஒரு இரகசிய அறிக்கை கிடைத்திருப்பதாகவும் அதனால் பின்னூட்டவாதிகள் யாரையும் தான் இழக்கவிரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
அத்தோடு பின்னூட்டங்களில் தாடிகள் பற்றிப் புகழ்ந்து பின்னூட்டமிடுமாறும் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறான ஆரோக்கியமான கலந்துரையாடல்களுக்குப்பின்னர் மண்டபத்துக்குள் இருபதுக்கு இருபது கிறிக்கெற் விளையாடப்பட்டது.
அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
மறுதலிப்பு 1: இது முற்றுமுழுதாக நகைச்சுவைக்காக மட்டுமே. யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது.
மறுதலிப்பு 2: இறுதியாக வெற்றிகரமாக நடந்துமுடிந்த பதிவர் சந்திப்பு 2 இனை கேவலப்படுத்தும் எண்ணமும் கிடையாது.
என்னைப் பற்றி
மூஞ்சிப் புத்தகம்
நல்லவர் பட்டாளம்....
மொக்கைகளில் எத்தனை வகைகளப்பா..... சபா...
தமிழ்
இலங்கையிலுள்ள தமிழ்மொழியில் பதிவிடும் பதிவர்களின் சந்திப்பு நேற்று டிசம்பர் 13ம் திகதி கொழும்பு 6, வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது...
இது தொடர்பாக பதிவிடும் எண்ணம் இருந்தாலும் ஏனைய நண்பர்களின் பதிவுகள் வரை பொறுத்திருந்து பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
என்னுடைய பதிவில் என்னால் பதிவர் சந்திப்பை சரி என்றோ பிழை என்றோ விமர்சனம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.
ஏனையவர்கள் பதிவர் சந்திப்புத் தொடர்பான ஆரோக்கியமான விமர்சனப் பதிவுகளை முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன்.
அதற்கிடையில் நேற்றைய சந்திப்புத் தொடர்பான சில புகைப்படங்களை உங்களோடு பகிரலாம் என்று நினைக்கிறேன்.
சில புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பின் மன்னிக்கவும்.
சில கலந்துரையாடல்களின்போது நான் சந்திப்பில் இருக்காததால் சந்திப்புத் தொடர்பான முழுமையான ஆவணமாக எனது புகைப்படங்களை பகிரமுடியாமல் இருக்கிறது.
எனது கமராவில் அகப்பட்ட புகைப்படங்களில் பகிரக்கூடிய நிலையில் ஓரளவுக்குத் தெளிவாக இருந்த புகைப்படங்கள் இவை.
ஆகா... சர்ச்சைப் பதிவர் தொடங்கிற்றான்யா எண்டு யோசிக்கப்படாது...
இரண்டு பதிவுகளை ஒன்றாக போடுவதால் தான் தலைப்பு ஒருமாதிரி மார்க்கமாக இருக்கிறது....
நண்பர்களுக்கு வணக்கம்....
நிறைய நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி....
இலங்கைப் பதிவர்களின் இனிய சந்திப்பு ஒன்று எதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக் கிழமை (13-120-2009) 571/15 காலிவீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2 மணிமுதல் நடைபெறும் விடயத்தை அனேகமாக அனைவரும் அறிந்திருப்பீர்கள்....
நிகழ்ச்சி நிரலும் ஏற்கனவே பரவலாக அனைவராலும் பதிவிடப்பட்டுவிட்டது.
இச்சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் வருமாறு
• அறிமுகவுரை
• புதிய பதிவர்கள் அறிமுகம்
• கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
• கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்
• சிற்றுண்டியும் சில பாடல்களும்
• கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
• கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
• பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
• உங்களுக்குள் உரையாடுங்கள்
இலங்கையிலிருந்து பதிவிடும் அனைவரையும் முடியுமானவரை தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
கலந்துகொள்ள முடியாதவர்களும், புலம்பெயர்ந்த இலங்கைப் பதிவர்களும், ஏனைய விரும்பியோரும் இந்தச் சந்திப்பை http://www.livestream.com/srilankatamilbloggers என்ற முகவரியூடாக நேரடியாகக் கண்டு மகிழலாம்.
இதுவரை பதிவிடாத பதிவிட விரும்புவோரும், வலைப்பதிவுகளின் வாசகர்களும் கலந்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு: இதுவரை தங்கள் வருகையை உறுதிப்படுத்தாத நண்பர்கள் தயவுசெய்து http://srilankantamilbloggers.blogspot.com/ என்ற முகவரிக்குச் சென்று உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் வரவை உறுதிப்படுத்துவது ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும் என்பதால் முடிந்தவரை விரைவாக உறுதிப்படுத்துங்கள்.
எங்களது கூகுள் குழுமத்தில் இணையாத இலங்கைப் பதிவர்களை http://groups.google.com/group/srilankantamilbloggers என்ற குழுமத்தில் இணையுமாறும் கேட்டுக் கொள்கிறோம்....
இதுபற்றிய மேலதிக விபரங்களை
http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/524904f0d3ba6e17
என்ற முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்.