க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

இலங்கையில் புதியதொரு

தொலைக்காட்சி அலைவரிசை…


உங்கள் கண்களுக்கு வேட்டு

வைக்க இதோ…


“சொத்தி T.V.”எமது நிகழ்ச்சிகளைப் பற்றிய ஓர் சிறிய அறிமுகம்.


• காலை 6 மணிக்கு எமது காலை நேர பிரதான செய்திகள். (எமது செய்திகளை பற்றிய விளக்கம் பிற்பகுதியில் தரப்படும்.)


• காலை 6.30 ற்கு எமது நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். எமது காலை நேர நிகழ்ச்சி “Bad morning viewers.” ஆகும்.


• 6.50 மணியளவில் “இன்றைய இராசி பலன்” பகுதி இடம்பெறும். இன்று எத்தனையோ பேர் நேர்முகத் தேர்வுகளுக்கும், பரீட்சைகளுக்கும், புதிய செயல்களை தொடங்குவதற்கும் தயார் செய்திருப்பர். “இன்று புதிய செயல்களை தொடங்குவது நன்றன்று, புதிய செயல்களை தவிருங்கள்” என்று சொல்வதன் மூலம் அவர்களுக்கு மன ரீதியாக தாக்குதல் நடத்துவோம்.


• அதன் பின்னர் “வாழ்த்தும் நேரம்”. பிறந்த நாள், திருமணங்கள், திருமண நிறைவு நாட்கள், நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர், மற்றும் பலருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.


• அதன் பின்னர் “எங்கள் தலைப்பில் உங்கள் உளறல்” பகுதி இடம்பெறும். தலைப்பு என்ற பெயரில் நாம் தருவதைப்பற்றி நீங்கள் கதைக்கலாம். இந்த நிகழ்ச்சியில் எம்மால் இயன்றவரை ஆங்கிலம் கலந்து கதைக்க முயற்சிப்போம். வடிவேல் சொல்வது போல் என்றால் “எவ்வளவு முடியுமோ… அவ்வளவு இங்கிலீச கதைப்பமுள்ள…!”. எமது தொலைக்காட்சி நிலையத்தில் ஆஸ்தான அறிவிப்பாளர் ஒருவர் இருப்பார். அவரின் பெயர் “சொத்தியப் புரியாணி”. இவரை நீங்கள் எப்போதும் எமது ஒளிபரப்பில் காணலாம். இவர் இல்லையென்றால் எமது நிறுவனம் இல்லை.


• இந்த கொடுமையை நீங்கள் தாங்கிய பின்னர் 8.30 முதல் இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய ஒரே நிகழ்ச்சியை திரும்ப திரும்ப ஒளிபரப்புவோம். 10.00 மணிவரை இந்த கொடுமைகள் ஒளிபரப்பப்படும்.


• 10.00 மணி முதல் 12.00 மணி வரை இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய தொடர் நாடகங்கள் ஒளிபரப்பப்படும். தொடர் நாடகங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? “அடிச்சு முழக்குவமுள்ள…!”.


• 12.00 மணிக்கு “பெண்மணிக்காக…”. இங்கு பெண்கள் மாத்திரம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேயர்களிடம் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். “எங்களிடம் நீங்க call பண்ணி tips அ share பண்ணலாம். எங்களுக்கு நீங்க call பண்ணும் போது உங்க T.V volume அ கம்மி பண்ணிற்று தான் call பண்ணனும். அப்ப தான் நீங்க சொல்ற tips clear ஆ கேக்கும். முதலாவதா ஒரு tips- உங்க face பளிச்சுன்னு தெரியணும்னா உங்க வீட்டு கண்ணாடிய நல்லா துடைக்கணும். சரி… சூப்பரான tips கேட்டம். இனி ஒரு சூப்பரான பாட்ட பாத்திற்று வருவம்.’


• 12.30 ற்கு பெண்கள் நேரம். இலங்கைப் பெண்களின் தற்போதைய பெரும் பிரச்சினைகளான “புகைத்தல், குடித்தல், அழகு சிகிச்சைகள்” போன்றன பற்றி நிறையவே கதைப்போம்.


• 1.00 மணிக்கு எமது “lunch time news”. இந்த சொல்லிற்கு எமக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்திலேயே பெயர் இடுவோம்.


• 1.15 ற்கு “சொத்தியின் weekday film festival”. திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.


• 4.00 மணியிலிருந்து 6.00 மணி வரை சிறுவர் நேரம். அமானுஷிய கதாபாத்திரங்கள் கொண்ட கேலிச்சித்திர தொடர்கள் ஒளிபரப்பப்படும். சிறார்களின் மனங்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி எமக்கு என்ன கவலை?
எம்மைப் பொறுத்தவரை எமக்கு அனுசரனையாளர்கள் கிடைத்தால் போதுமானது.


• 6.00 மணிக்கு “புத்தம் புதுப்பாடல்”. பராசக்தி, இரத்தத்திலகம், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற புத்தம் புதிய திரைப்படங்களிலிருந்து புத்தம் புதிய பாடல்கள் அரை-குறையாக ஒளிபரப்பப்படும்.


• 6.30 ற்கு “அலங்கோலங்கள்”-நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.


• 6.55 ற்கு முதன்மைச் செய்தி என்ற பெயரில்; “உப்புச்சப்பில்லாத” செய்திகள் ஒளிபரப்பாகும்.


• 7.00 மணிக்கு “கலசத்தை கவிழ்த்த பெண்”-நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.


• 7.30 ற்கு “மந்திரத்தால் மாங்கனி வீழ்ந்திடுமோ?” என்று கேட்ட மகாகவியின் வேடத்தை போட்ட பெண்மணியின் படத்தை இட்டு, “பேய், ஆவி, மந்திரம், கடவுளின் நேரடி விஜயம்” போன்றவற்றை கதை இல்லாதபடியால் சேர்த்து ஆக்கப்பட்ட “(பார்ப்போருக்கு) கண்ணீர் அஞ்சலி” எனும் நெடுந்தொடர் ஒளிபரப்பாகும்.


• 8.00 ற்கு எமது செய்தியறிக்கை.


• எமது செய்தியறிக்கையின் பெயர் “UNP 1st” ஆகும்.


• எமது செய்திகளில் “ஐக்கிய தேசிய கட்சித் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் இன்று மூச்சு விட்டார்கள்” என்பதே தலைப்புச்செய்தியாக அமையும். “ஜே.வி.பி உறுப்பினர்களும், அரசாங்க உறுப்பினர்களும் இன்று மூச்சு விடவில்லை” என திஸ்ஸ அத்தநாயக்க சொன்ன செய்தியை எமது முக்கிய செய்தியாக கொண்டு எமது செய்தியறிக்கை காணப்படும். அவர் சொன்னது சரியா பிழையா என்பது எமக்கு தேவையற்றது.


• எமது செய்தியறிக்கையின் மறுபெயர் “Believe last” ஆகும். அத்தோடு பல கிளை செய்திகளும் காணப்படும். “Sports 1st, Weather 1st, Entertainment 1st, Traffic 1st, Nature 1st, Water 1st, Train 1st, Bus 1st, Lorry 1st” போன்ற ஏராளமானவை.


• “International bureau update” பகுதியில் தமிழை கதைக்கத் தெரியாத தமிழர்களைக் கொண்டு சம்பந்தமில்லாமல் கதைத்து செய்தி வாசிப்போம்.


• 8.30 ற்கு “செல்வி” நெடுந்தொடர் ஒளிபரப்பாகும். ஏனைய எல்லா நெடுந்தொடர்கள் போலவே “இரண்டு மனைவி” கதையை கொண்டதாக இது அமையும்.


• 9.00 மணிக்கு U.N.P 1st இன் ஆங்கில செய்தியறிக்கை இடம்பெறும்.


• 9.30 முதல் மீண்டும் நெடுந்தொடர்கள்.


• 11.00 ற்கு “நெஞ்சம் மறப்பதில்லை”. பழைய பாடல்களையும், நினைவுகளையும் மீட்டிப்பார்க்கும் ஓர் நிகழ்ச்சி.
• வார இறுதி நாட்களில் எமது ஒளிபரப்பு நேரங்களை ஈடு செய்ய ஏதேனும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.


• உதாரணமாக “இது நிகழ்ச்சி இல்லை, போயிட்டாங்கய்யா போயிட்டாங்க” போன்ற அலட்டல் நிகழ்ச்சிகள், “Waste full” என்ற விமர்சன நிகழ்ச்சி, “SMS கொடுமை, T.V ஐ பூட்டுவோமா?, 30 என்ற SMS நிகழ்ச்சி (7+7+8+8=30)” போன்றனவும் குறிப்பிடத்தக்கன.


• எம்மிடம் நிதித்தட்டுப்பாடு ஏற்படின் SMS மூலமான போட்டிகள், இசைப் போட்டிகள் நடத்தப்பட்டு உங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்படும். “கேக்கிறவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஏரோ பிளேன் ஓட்டுமாம்” என்பது பழையது. “கேக்கிறவன் கேனையனா இருந்தா சொத்தி T.V தாறது நல்ல நிகழ்ச்சியாம்” என்பது புதியது.


• “GRAND MASTER” என்ற ஒரே உருப்படியான நிகழ்ச்சியை “சொத்தியப் புரியாணி” தொகுத்து வழங்குவார். அவருக்கு சேலைகளை அணிய அனுமதி வழங்கப்பட மாட்டாது.


• ஏனையன இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.


• முக்கிய குறிப்பு: எமது

நிகழ்ச்சிகள்

இலங்கையிலுள்ள சக்தி T.V எனும்

நிறுவனத்தின் நிகழ்ச்சிகளை போல்

அப்படியே உள்ளதாக அந்நிறுவனத்தினர்

பிரச்சினை செய்வதால் அப்பிரச்சினைகள்

தீர்ந்த பின்னர் எமது ஒளிபரப்புகள் மீள

ஆரம்பிக்கப்படும்.


3 பின்னூட்டங்கள்:

கலக்கல் கோபி கிருஷ்ணா... அப்படியே சக்தி டீ.விக்கு பயங்ரமான கடி.... அப்படியே Word Verificationஐத்தூக்கி விடுங்கள் முடிந்தால் தமிழ்மணத்திலும் இணைத்துவிடுங்கள்

சூப்பரோ சூப்பர். அதிலும் பகல் டிப்ஸ் என்று யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் புச சொல்லலாம் என்பதை சொல்லாததற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். (என் சக தோழி முகப்பருவுக்கு இவர்கள் செய்ய சொன்னதை எல்லாம் செய்து முகத்தை அலங்கோலப்படுத்தி வைத்திருக்கிறாள்)

//பிளாகர் யோ வாய்ஸ் கூறியது...

சூப்பரோ சூப்பர். அதிலும் பகல் டிப்ஸ் என்று யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் புச சொல்லலாம் என்பதை சொல்லாததற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். (என் சக தோழி முகப்பருவுக்கு இவர்கள் செய்ய சொன்னதை எல்லாம் செய்து முகத்தை அலங்கோலப்படுத்தி வைத்திருக்கிறாள்) //

நண்பி தானே உண்மையா???
ஹா ஹா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.