“என்ன பெரிசு! சிலையையே சுத்தி சுத்தி வாறாய்?”
“சிலையில இருக்கிற ஆள எங்கயோ பாத்த மாதிரி இருக்கு… ஆனா சட்டெண்டு ஞாபகம் வருதில்ல…”
“உன்ன தான் சிலையா வச்சிருக்கிறாங்க. இதுக்கு தான் கண்டவன் போனவனுக்கெல்லாம் உயிரோட இருக்கேக்கயே சிலை வைக்க கூடாதெண்டுறது. கேட்டா தானே…”
“வர வர சினிமா மோசமாப்போச்சு. மீச முளைக்காத 14 வயசில என்ன காதல் வேண்டியிருக்கு. அந்தக் காலத்தில 40 வயசில தான் காதலே தொடங்கும். காலம் கெட்டுப்போச்சு.”
“ஆமாய்யா… அப்பெல்லாம் 90 வயசில தான் எமன் வருவான். இப்பவெல்லாம் 30, 40 வயசிலயே வந்து நிக்கிறானே? என்ன செய்யச் சொல்றா?”
“டொக்ரர்! சின்னக் குழந்தைகளுக்கு உடம்பு ரப்பர் மாதிரி, கீழ விழுந்தாக் கூட எலும்பு முறியாதெண்டு சொன்னீங்களே?”
“ஆமாம் பாப்பா… அதுக்கென்ன இப்போ?”
“உங்க குழந்தய மொட்டமாடிலேருந்து கீழ தள்ளி விட்டிட்டன். எதுக்கும் போய்ப் பாருங்கோ!”
“என்ன செய்யுது?”
“ஒரே தலையிடி டொக்ரர்!”
“எத்தின நாளா?”
“இப்ப தான்… ஒரு 10 நாளா…”
“எனக்கு 10 வருஷமா தலையிடி இருக்கு தெரியுமா?”
“ஓகோ… அப்ப வாங்க ரெண்டு பேருமா ஒரு நல்ல டொக்ரரிட்ட போவம்… கிளம்புங்க…”
“என் பையன் ரஷ்யாவில MBBS முடிச்சிற்று வந்தான்… சட்டுபுட்டுன்னு கலியாணத்த முடிச்சு வச்சிற்றன்…”
“காச கரியாக்கி படிப்பிச்ச பிறகு தான் முடிக்கோணுமா…
என்ர மோனுக்கு A/L முடிஞ்சதுமே முடிச்சு வச்சிற்றன்…”
“இந்த மார்கழியோட பொண்ணுக்கு தோஷமெல்லாம் கழியுது….”
“அப்ப தையில கலியாணத்த முடிச்சிடலாமெண்டு சொல்லுங்க…”
“முடியாதே… அதுக்கு மேல தானே ஏழரைச்சனி தொடங்குது…”
“…???”
“மந்திரி பதவியிலயும் இருந்துகொண்டு… சொந்தக் காரங்கள வச்சு கசிப்பு காய்ச்சி விக்கிறதா எதிர்க்கட்சி காரங்க குற்றம் சாட்டுறாங்களே…”
“மந்திரியே காச்சிறதுக்கு சட்டத்தில இடமில்லயே… சட்டமே தெரியாதவங்க எதிர்க்கட்சியா இருக்கிறது தான் இந்த நாட்டின்ர சாபக்கேடு…”
“ஏம்பா கொண்டக்ரர்! வயசுப் பெட்டையளெண்டா மிச்சக்காச உள்ளங்கையில அழுத்தி வச்சி குடுப்பியே… என்ன மாதிரி கிழவியள் எண்டா சில்லற இல்லயெண்டுவியே… நல்ல ஆள் தானப்பா நீ…”
“அடக்கிழவி… கட்டயில போற வயசில ஆசயப்பாரு…”
“அடிக் கட்டயால…”
“என்னங்க இது… சினிமா கமரா மானா(Camera man) இருக்கிற நம்ம பிள்ள வீட்டுக்கு வந்திருக்கிறான்… பால் காய்ச்சிக் குடுக்கலாம் எண்டா இந்த பசு மாடு விடமாட்டனெண்டுது… என்னாச்சு இந்தச் சனியனுக்கு…?”
“ஏய்! மாட்ட ஏன் பேசுறாய்? இவன் கமராவோட போய் மாட்ட கவர்ச்சியா படமெடத்திருப்பான்… மானமுள்ள மாடாச்சே… அது தான் தண்ணி காட்டுது…”
(தொடரும்…)
என்னைப் பற்றி
பிச்சு உதறினது
-
►
2009
(76)
- ► செப்டம்பர் (12)
-
▼
2008
(87)
-
▼
செப்டம்பர்
(32)
- சம்பிரதாய மொழியா தமிழ்???
- உதவி
- எனது அக்காவின் 6 வயது (தரம்1) மகள் தானாகவே எவரின் ...
- நெடுந்தொடர்களின் பொது விதிகளா இவை...
- இசை
- பாடல்களும் முனியம்மா பதில்களும்...
- யோசனைகள்
- என் வாழ்வில் சோகமான சம்பவங்களில் ஒன்று.
- சைவம்.
- முடியுமா...
- உங்கள் கணணியில் முயற்சி செய்யுங்கள்...
- இளசுகளால் ஆப்பு வைக்கப்படும் பெரிசுகளின் எதிர்காலம்.
- நான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்
- நான் இரசித்த கதை...
- சோதிடம்.
- விளம்பர உலகம்.
- சீமான்களே...
- செருமிப் பார்.
- கண்ணாடி
- படித்து அல்லது கேட்டு இரசித்த நகைச்சுவைகள்.
- ஆஷஷ் தொடர் உருவான வரலாறு... ஒரு புகைப்படத்தில்...
- படித்து அல்லது கேட்டு இரசித்த நகைச்சுவைகள்.
- மனிதன்…
- என்னிடமும் பட்டமுண்டு…
- திருமண மண்டபங்கள்.
- புதியதொரு தொலைக்காட்சி அலைவரிசை…
- சுப நேரம்.
- பொய்கள்
- பொய்
- காதல்
- ஏமாற்றுக்கள்
- மனித வாழ்க்கை.
-
▼
செப்டம்பர்
(32)
மூஞ்சிப் புத்தகம்
நல்லவர் பட்டாளம்....
மொக்கைகளில் எத்தனை வகைகளப்பா..... சபா...
அச்சுவலை
(2)
அப்ரிடி
(1)
அழகு
(1)
அழகு.
(1)
அழைப்பிதழ்.
(1)
அறுவை
(4)
அனுபவம்
(1)
ஆண்கள்
(1)
இராஜினாமா
(1)
இருக்கிறம்
(3)
இலங்கை
(5)
உள்குத்து
(1)
எரிச்சல்
(1)
ஐ.பி.எல்
(1)
ஒபாமா
(1)
ஒருவரி
(1)
ஒருவரி.
(1)
ஓடுதல்
(2)
கடவுள்
(2)
கடுப்பாக்குதல்
(1)
கணிப்பு
(1)
கப்பல்
(1)
கரச்சல்
(1)
கருத்து
(1)
கல்யாணம்
(1)
கவலை
(1)
களவு
(1)
காதல்
(2)
காதல
(1)
கார்
(1)
கிரபிக்ஸ்
(1)
கிறிக்கெற்
(6)
சக்தி ரீ.வி
(1)
சச்சின்
(1)
சண்டை
(2)
சந்திப்பு
(5)
சமயம்
(1)
சர்தார்
(1)
சாய்பாபா
(1)
சிந்தனை
(1)
சிரிப்பு
(1)
சிலெட்ஜிங்
(2)
சீரியஸ்
(1)
சும்மா
(1)
சுயதம்பட்டம்
(1)
சுயம்வரம்
(1)
சோதிடம்
(1)
தமிழ்
(3)
தமிழர்
(1)
தனிநாடு
(1)
தாடி
(1)
திணிப்பு
(1)
திருமண அழைப்பிதழ்
(1)
திருமணம்
(3)
திறமை
(2)
தினக்குரல்
(1)
தீவிரவாதம்
(1)
தேவதை
(1)
தொடர் விளையாட்டு
(1)
தொடர்பதிவு
(2)
தொலைக்காட்சி
(1)
நக்கல்
(1)
நகைச்சுவை
(18)
நட்சத்திரம்
(1)
நடைமுறை
(1)
நண்பர்
(1)
நம்பிக்கை.
(1)
நல் வாக்கியங்கள்
(1)
நாய்
(1)
நியூட்டன்
(1)
நேர்மை
(1)
பச்சிளம் பாலகர்
(1)
படங்கள்
(6)
பணக்காரர்
(1)
பணம்
(1)
பதிவர்
(11)
பதிவர் சந்திப்பு
(3)
பதிவர் சந்திப்பு படங்கள்
(2)
பம்பல்
(13)
பல்கலைக்கழகம்
(1)
புதுமை
(1)
பெண்கள்
(2)
மக்ராத்
(1)
மகாத்மா காந்தி
(1)
மன அழுத்தம்
(1)
மனம்
(1)
மனைவி
(3)
முயற்சி
(1)
மொக்கை
(9)
யாழ்தேவி
(2)
ரைற்றானிக்
(1)
லாரா
(1)
வலைப்பயிற்சி
(1)
வாடிக்கையாளர் சேவை
(1)
வாழ்க்கை
(1)
வானொலி
(1)
விவாகரத்து
(1)
வீண்
(2)
வெறுப்புக்கள்
(1)
ஹர்பஜன்
(1)
cricket
(2)
funny
(1)
gif
(1)
Sledging.
(3)
word exchange.
(1)
தமிழ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக