க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

ஒருவர்-அந்த நரம்பியல் வைத்தியர் இருதய மாற்றில் தான் கொடிகட்டிப் பறக்கின்றார்.
மற்றவர்-உமக்கென்ன மண்டை கிண்டை கழண்டிற்றே? நரம்பியல் வைத்தியர் எப்படி இருதய மாற்றுச் சிகிச்சை செய்வார்?
முதலாமவர்-இருதய மாற்று எண்டு தானே சொன்னன்? மாற்று சிகிச்சை எண்டு சொன்னனா? அவர் இதுவரை 5 பெண்களை காதலித்து இதயத்தை மாற்றினத தான் சொன்னன்.மற்றவர்-...???


ஒரு தாயார் இரண்டு கொய்யாப் பழங்களை வாங்கி வந்தார். ஒன்று பெரியது. மற்றையது சிறியது. அவற்றை ஒவ்வொன்றாக எடுக்கும் படி கூறி மகனிடம் கொடுத்தார். அவன் பெரியதை எடுத்துக்கொண்டு சிறியதை தன் தங்கையிடம் கொடுத்தான். அவனது செயலில் எரிச்சலடைந்தவளாக அச்சிறுமி தன் அண்ணனை பேசினாள். 'நீயெல்லாம் ஒரு அண்ணனா? அம்மா என்னட்ட தந்தி;ருந்தா பெருச உன்னட்ட தந்திற்று சின்னத நான் எடுத்திருப்பன். ஆனா நீ ஒரு பேராசக்காரன்" என்றாள். அவன் அமைதியாக சொன்னான் "நீ செய்ய வேண்டியத உனக்காக நானே செய்திற்றன். நீ தர்ற மாதிரியே நானே பெரிச எடுத்திற்றன்" என்று.


ஒருவர்-கந்தையா செத்ததுக்கு என்ன காரணம்?
மற்றவர்-உணவில கலப்படத்தால வருத்தம் வந்ததெண்டு டொக்ரரிட்ட போக அவர் கொடுத்த கலப்பட மருந்தால மனுசன் செத்துப்போச்சு.


சித்திரகுப்தன்- என்ன பிரபோ! பாசக்கயிறை வீசுவதற்காக இலங்கைக்கு போகும் போது இப்போதெல்லாம் எருமையில் செல்வதில்லையே? ஏன்?எமதர்மன்- இலங்கையில் எரிபொருள் விலை கைநழுவிப் போய்விட்டதாகையால் இப்போதெல்லாம் எருதுகள் தான் மீண்டும் வயல் உழுகின்றனவாம் டிராக்ரர்களுக்கு பதிலாக. நான் பாசக்கயிறு வீச எருமையிலிருந்து கீழே இறங்கும் போது எந்த நாதாரியாவது வயல் உழுவதற்காக என் எருமையை கடத்தி விடுவானுகள்.


ஒருவர்- இப்போதெல்லாம் நீதிமன்றத்திலே வழக்குகளின் எண்ணிக்கை அசாதாரணமாக கூடிவிட்டதே?
மற்றவர்- காணி விலை ஏற ஏற எல்லைப்பிரச்சினை அதிகரிக்கத் தானே செய்யும்? ஆ?


ஒருவர்- உலகிலேயே நாட்டுப்பற்று கூடியவர்கள் ஆயுள் கைதிகள் தான்...
மற்றவர்- அதெப்படி?முதலாமவர்- அவர்கள் தான் வெளிநாடு போய் உழைப்பதை எண்ணிப்பார்க்காத ஜீவன்கள்.


ஒரு பெண்- கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் போயிட்டு வாறியே ஏன்?மற்றவள்- வெளிநாட்டில இருக்கிற என்ர புருஷனுக்கு ஞாபக மறதி வரக்கூடாது எண்டு வேண்டுறதுக்கு தான்.

0 பின்னூட்டங்கள்: