க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே...
 முனி.- பொஞ்சாதி கை தொட்டா தங்கம் கூட தகரம் ஆகிடும் என???

அன்பே அன்பே! அன்பே அன்பே! நீ இன்றி நான் இல்லையே...
 முனி.- பக்கத்து வீட்டு வேலக்காரிய பாத்து தானே பாடுறாய்???

முழுமதி அவளது முகமாகும்... மல்லிகை அவளது மணமாகும்...
 முனி.- சந்திரனுக்கு போட்டு வந்திற்று சந்திரனில மேடு-பள்ளம் இருக்கெண்டு கண்டுபிடிச்சா பிறகு   பொம்பிளயள வர்ணிக்கிறது எண்ட பேர்ல இப்பிடி தான் நக்கலடிக்கிறியள் என்னடா...

என்ன விலை அழகே... சொன்ன விலைக்கு வாங்க வரவா...
 முனி.- தேத்தண்ணி கடையில நேற்று கடனுக்கு குடிச்ச தேத்தண்ணிக்க் கடனை முதல்ல அடயடா...

நீ தான் என் தேசிய கீதம்... ரஞ்சனோ ரஞசனா...
 முனி.- எப்பயும் இருந்திற்று தான் கணக்கெடுப்பாய் எண்டு சொல்லாம சோல்லுறாய் என...

கண்ணுக்கு மை அழகு... கவிதைக்கு பொய் அழகு...
 முனி.- உன்ர சேட்டுக்கு 'சேர்ப் எக்ஸல்' போடுதல் அழகு... கிழமைக்கு ஒரு முறையாவது குளித்தல்   அழகு...

காதலெனும்... தேர்வெழுதி காத்திருந்த... மாணவன் நான்...
 முனி.- அடேயப்பா தம்பி! எத்தின சோதினை மண்டபங்களில இதுவர உந்த சோதினய எழுதிற்று உதே    பாட்ட பாடியிருக்கிறாய் எண்டு உண்மையச் சொல்லு...

சந்தரனை தொட்டது யார் ஆம்ஸ்ரோங்கா... அடி ஆம்ஸ்ரோங்கா... சத்தியமாய் தொட்டது யார் நான் தானே...
 முனி.- பக்கத்து வீட்டு பெட்டய தொட பாத்து அடி வாங்கினது நீ தானே... அட நீ தானே...

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்... நிலவே பெண் நிலவே... நான் பொறுமை வென்று நின்றேன்...
 முனி.- அப்ப 'சைற்' அடிக்கிறதுக்கு பொஞ்சாதியயும் கூட்டிற்று வர்ற ஐடியாவா...???

எங்கேயே பார்த்த மயக்கம்... எப்போதோ வாழ்ந்த நெருக்கம்...
 முனி.- ஏன்டா... நீ தண்ணி அடிச்சதால வந்த மயக்கத்துக்கு உப்பிடி ஒரு பாட்டா...?

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... ஏதோ... அது ஏதோ... அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது...
 முனி.- எக்கச்சக்கமான 'அனுபவம்' இருக்கு போல கிடக்குது...

பெண் கிளியே... பெண் கிளியே... பாடுகிறேன் ஒரு பாடல்... பாட்டு வரி பிடித்திருந்தால் சிறகால் பச்சைக் கொடி காட்டு...
 முனி.- முதலாவது, நீ பாடுறாய் எண்டும், அது பாட்டு எண்டும் இஞ்ச ஒருத்தரும் சொல்லேலயே...

சேலையில வீடு கட்டவா... சேர்ந்து வசிக்க...
 முனி.- அப்ப, வீடு கட்டவும் பொஞ்சாதியின்ர சீல தான் உன்னட்ட இருக்கு என...

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன்... இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் திறப்பேன்...
 முனி.- இவ்வளவு 'பில்ட்-அப்' போட்டிற்று எத்தின மணி எண்டு தானே கேக்கப் போறாய்... மிஞ்சி மிஞ்சி   போனா 10 ரூபா கடன் தானே கேக்கப் போறாய்...

ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா...
 முனி.- காசில்லாட்டியும் வாங்கலாம் ஆசப்படுறத... நேற்று அந்தக் கடயில இருந்து 2 வாழப்பழத்த சுட்டவன்   தானேடா நீ...

காதலியே காதலியே... காதலை ஏன் மறந்தாய்...
 முனி.- நீ காதலிய மறந்திற்று புதுச தேடிப் போகலாம்... அந்தப் பெட்டை காதலை மறக்கக் கூடாதோ???

என்னடி முனியம்மா உன் கண்ணில மையி... யாரு வச்ச மையி... இது நான் வச்ச மையி... நீ முன்னால போனா நான் பின்னால வாறன்...
 முனி.- ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடசியா என்னட்ட வந்திற்றாங்கள்... அடேய் பன்னாட... அது மை   இல்லயடா... அதுக்கு பேர் கண் இமை... அப்ப நான் பின்னால போனா நீ முன்னால போயிடுவியோ...???
 இது சரி வராது... நான் போயிற்று வாறன்...

 

--
க.கோபி கிருஷ்ணா.

0 பின்னூட்டங்கள்: