க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

நான் தரம் 11 இல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.
2005 ம் ஆண்டின் விஜயதசமி அன்று பாடசாலையில் விஜயதசமி பூசைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நாங்கள் எல்வோரும் வகுப்றையில் இருந்தோம். அப்போது மாணவத் தலைவன் ஒருவர் எனது வகுப்பு மாணவனொருவனை அடித்து விட்டார். (யாழ்ப்பாணத்தில் இதுவெல்லாம் சர்வ சாதாரணம்)வழமையைப்போல அந்த மாணவத்தலைவருடன் வாக்குவாதப்பட்டு விட்டு நான் அந்தப் மாணவனை அதிபரிடம் அழைத்துச் சென்றேன். அதிபரிடம் முறையிட்டேன். இப்படியான விடயங்களில் அடிக்கடி அதிபரை சந்திப்பது எனது வழக்கம்.அப்போது அதிபர் சொன்னார் 'தம்பி... பூசை தொடங்கப் பொகுது... இப்ப இத பிரச்சின ஆக்கக் கூடாது. நீர் அவர (பாதிப்பிற்குள்ளான மாணவனை) வகுப்பில் இருக்க வையும். நான் நாளைக்கு விடிய உமக்கு இந்தப் பிரச்சினைக்கு நல்ல முடிவு தாறன்" என்றார் மாலையில் நடக்கப் போவதை அறியாமல். நானும் மாலையில் நடக்கப் போவதை அறியாமல் 'சரி சேர்" என்று விட்டு வகுப்பிற்கு வந்து விட்டேன்.அன்று மாலை 4 மணியளவில் எமது அதிபர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு விஜயதசமி விழாவிற்கு செல்வதற்காக மண்டப வாயிலை அடைந்த போது அவரது ஸ்கூட்டரில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
என் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாட்களில் அந்த நாளும் ஒன்று.
அதிபரின் பெயரை சொல்ல மறந்து விட்டேனே...
அவரின் பெயர் - திரு.கணபதி இராஜதுரை.

0 பின்னூட்டங்கள்: