க.கோபி கிருஷ்ணா.

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே...
கீழே நான் தரும் ஆக்கம் இலங்கையிலுள்ள வானொலி ஒன்றின் நிகழ்ச்சிக்காக அனுப்பியது. பிரசாரம் என்ற பகுதியில் 'நான் இசையமைப்பாளரானால்...' என்ற தலைப்பில்  நகைச்சுவையாக அனுப்பியது ஆகும். இன்றைய இசையமைப்பாளர்களை கிண்டலடிப்பதாக நினைத்துக் கொண்டு அனுப்பினேன்... அப்படி இருக்கிறதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
(சில ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களுக்கு மன்னிக்கவும். இன்றைய இசையமைப்பாளர்களின் மொழி நடையில் எழுதும் போது ஆங்கிலம் தவிர்க்க முடியாதது. எனினும் என்னால் இயன்றவரை ஆங்கிலத்தை தவிர்க்கிறேன்...)

வணக்கமுங்கோ!
நான் தான் இசையமைப்பாளர் புஷ்வநாதன்... என்ன அப்பிடி பாக்கிறியள்? மற்றாக்கள் இசையமைப்பாளர் விஷ்வநாதன் சேரின்ர பாட்டுக்கள றீ-மிக்ஸ் பண்ணி பாவிக்கேக்க நான் அட்வான்ஸா போய் அவரின்ர பெயரையே மாத்தி பாவிக்கிறன்... எப்பிடி என்ர திறமை...
சரி நீங்க என்னட்ட கேக்கலாம் இசையமைப்பாளரா வர்றதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கெண்டு...
நான் சொல்றன்...
என்னட்ட பழைய பாட்டு சீ.டி எக்கச்சக்கமா கிடக்குது, அதோட 5, 6 றீ-மிக்ஸ் சொப்ற்வெயாரும் கிடக்குது. இத விட வேற என்ன தகுதி வேணும் இசையமைப்பாளராக? ஆ?
சரி நான் எப்பிடி பாட்டுகள உருவாக்குவன் எண்டு உங்களுக்கு சொல்றன்...
முதல்ல அந்தக்காலத்தில பிரபலமான பாட்டுக்கள தெரிவு செய்வன்... தெரிவு செய்து போட்டு அந்தப் பாட்டின்ர வேகத்த கூட்டுவன்... தேவையெண்டா அந்தப் பாட்ட இண்டைய 'ட்ரெண்ட்'ற்கு ஏத்த மாதிரி மாத்திறதுக்கு நம்மட வைரமுத்து சேர் உதவி செய்வாருங்கோ...
ஆனா அது மட்டும் காணாது...
பாட்டு வரிகளுக்கு இடையில இங்கிலீசு சொல்லுகள கண்ட மாதிரி போட்டு, அது கெட்ட வார்த்தையா இருந்தா நல்லம், அத றப் எண்ட பெயரில கத்துறதுக்கு, ஐயோ! சொறி சொறி... றப் எண்ட பெயரில பாடுறதுக்கு கழுதைக்குரலோட, ஐயோ! சொறி சொறி... கவிதைக் குரலோட நிறையப் பேர் இருக்கினம். அவய விட்டு கத்த விட்டு உங்களுக்கு சூப்பர் டூப்பர் கிற் பாட்டுகள தருவனேன்று உங்களிடம் உறுதியளிக்கிறன்.
நன்றி சுணக்கம்... ஐயோ மன்னிச்சுக் கொள்ளுங்கோ... பாட்டுகள றீ-மிக்ஸ் பண்ணி பண்ணி இப்ப தமிழ் சொல்லுகளயும் மாத்திறன் போல கிடக்கு...
நன்றி வணக்கம்....

இதை விட அதிகமாக எழுதியதாக ஞாபகம். ஆனால் எழுதி 2 மாதங்களுக்கு மேலே. ஞாபகம் இருப்பது இவ்வளவும் தான்.

நான் நினைத்ததை செய்துள்ளேனா?
ஜேம்ஸ் வசந்த் போன்றவர்களின் 'கண்கள் இரண்டால்...' போன்ற பாடல்கள் தமிழ் இசைக்கு பலமாக தெரிகிறது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்...
நான் நினைக்கிறேன் 'நியூ' திரைப்படத்தில் 'தொட்டால் பூ மலரும்...' பாடல் மட்டுமே விதிவிலக்காக மீள் கலவை அல்லது மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பாடல்களில் தமிழை அழிக்காது தமிழை மூச்சாக நினைப்பவர்களையும் கவர்ந்தது என்று.
தமிழில் படப்பெயரை வைத்து விட்டு பாடல்களில் ஆங்கிலச் சொற்களை போட்டு குழப்பியடித்தால் என்ன நியாயம் என்று தெரியவில்லை...
இன்றைய பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்களுக்குள்ள ஆங்கிலப் புலமையை காட்ட விரும்பின் அவர்கள் ஆங்கிலப் பாடல்களையே உருவாக்கலாமே...?
சிறிது காலத்துக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றிலே பாடலாசிரியர் ஒருவர் 'நாங்கள் எழுதும் வர்த்தக ரீதியிலான பாடல்களை மட்டும் பார்க்காதீர்கள். அவை வியாபார நோக்கத்திற்காக எழுதப்பட்டவை. நாங்கள் எழுதும் கவிதைகளுக்கு நாங்கள் தான் ராஜாக்கள். அவற்றைப் பாருங்கள்' என்றார்.
தமிழை அழித்துத் தான் பணத்தைப் பெற வேண்டுமென்றால் அந்தப் பணம் எதற்கு???
அவர்களின் செயலை விளங்கப் படுத்த சில காலங்களுக்கு முன்னர் இணையத்தில் உலாவிக்கொண்டிருந்த போது எங்கோ ஒரு செய்தி இணையத்தளத்தில் படித்த செய்தி தான் ஞாபகம் வருகிறது....
'ஒரு திருமணமான பெண் அலுவலகமொன்றிலே வேலை புரிந்து வந்தாளாம்.. அவளுக்கு மேலே இருக்கும் உயரதிகாரிகள் மோசமானவர்கள். பெண் பித்து பிடித்தவர்கள். அவர்கள் அந்தப் பெண்ணிடம் சொன்னார்களாம், எங்களுக்கு நீ 'அந்த' விதத்தில் ஒத்துழைத்தால் உனக்கு வேலை உயர்வு தருகிறோம் என்று. அந்தப் பெண்ணும் அப்படியே செய்த வேலை உயர்வு பெற்றாளாம். ஆனால் அந்தப் பெண் வீட்டில் கணவனோடு அன்பாகத் தான் இருந்தாளாம்.
எனினும் இப்பெண்ணின் செய்கையை அறிந்த கணவன் அவளது கணவன் அந்தப் பெண்ணை வெட்டிக் கொன்றானாம். அவனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டதாம்.
அந்தப் பெண்ணிற்கும் இந்தக் கவிஞர்களுக்குமிடையில் என்ன வித்தியாசம்???

பெண்கள் அப்படி பதவி உயர்வு பெறுவார்கள் என்று நான் சொல்லவில்லை.
பெண் சகோதரிகளை தவறாக எண்ணி சொல்லவில்லை...
விதிவிலக்கான கதாபாத்திரத்தை இடைநடுவே செருகியதற்கு மன்னிக்கவும்.


இதில் கொடுமை என்னவென்றால் இப்படி எல்லாம் பாடல் எழுதிவிட்டு 'தமிழ் வாழ வேண்டும், தமிழை சரியாக உச்சரியுங்கள், தமிழர்கள் தமிழ் பேச வேண்டும்' என்று வாய் கூசாமல் சொல்லித் திரிகிறார்கள்.
இன்றைய கவிஞர்கள் முன்பிருந்த கவிஞர்களை விட எல்லாம் புத்திசாலிகள். ஏனென்றால் பிரம்மனுக்கு 'மூட்' வந்ததையெல்லாம் கண்டுபிடிக்கும் திறமைவாய்ந்தவர்கள். (பிரம்மனுக்கு மூடு உன்ன படச்சிற்றான், அடி காமனுக்கு மூடு வந்து என்ன அனுப்பிற்றான்.).
ஆனால் தமிழ்த்தாய் அழுவதை மட்டும் இன்னும் கண்டு கொள்ளவே இல்லை...



--
க.கோபி கிருஷ்ணா.

0 பின்னூட்டங்கள்: